This entry is part 9 of 10 in the series 28 செப்டம்பர் 2025

ரவி அல்லது

நம்பிக்கைகளைச்

சுருள விடும்

பசி

சிவப்பு விளக்கின்

சகாயத்தில்

திரைக் கண்ணாடிகள்

திறக்க ஏங்குகிறது

பரிதவித்து.

முண்டி வெளிவரும்

கருணையைப் பற்ற

எரிந்து விடும்

பச்சை விளக்கை

நிறுத்த

யாதொரு

உபாயமில்லை

ஏக்கத்தைத் தவிர.

இனிவரும்

புண்ணியவான்கள்

குளுமைப்படுத்தலாம்

தற்காலிக

விடுதலையாக

காசு, பணங்களை

அவைகளின்

ஆசுவாசத்திற்கு.

சகாய நேரத்திற்குள்

கையளித்துவிடும்

கருணை

நம்பிக்கையை

உயிர்ப்பிக்கிறது

பசியை வென்று

எரிதணலில் குளிர்ந்து.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationகடற்கரைகதைப்போமா நண்பர்கள் குழுமத்தின் நாவல் திறனாய்வு