This entry is part 1 of 9 in the series 28 டிசம்பர் 2025

நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டில்

 அமெரிக்கா, தமிழ்நாடு கவிஞர்களின் தன்முனைக் கவிதை நூல்கள் வெளியீடு

நூலேணி பதிப்பகம், அமெரிக்கத் தன்முனைக் கவிதைக்கூடம் இணைந்து நடத்திய நூல் வெளியீடு 22-12-2025 திங்கட்கிழமை மாலை சென்னை, மேடவாக்கத்தில் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தன்முனைக் கவிதைகள் நூலகத்தில் நடைபெற்றது. 

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா-வின் ‘தன்முனைக் கவி கார்த்திகை’, கவிஞர் நெல்லை அன்புடன் ஆனந்தி-யின்  ‘தன்முனைத் தளிர் கார்த்திகை’, பாவலர் கல்லை மலரடியானின்  ‘தன்முனை மலர் கார்த்திகை’ நூல்களை  கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் (நிறுவனர், தன்முனைக் கவிதைகள் குழுமம்) அவர்கள் வெளியிட,  கவிஞர்கள் புதுகை ஆதீரா, அகவலன், வேலாயுதம்.ந ஆகியோர் பெற்றுக் கொண்டார். அருகில் கவிஞர் கண்மணி கண்ணன் மற்றும் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா

இந்நூலின் வெளியீட்டு விழாவில் கவிஞர் கண்மணி கண்ணன், திருமதி. அருள் சக்தி, கல்யாணசுந்தரம், திருமதி. விஜயலட்சுமி, கவிஞர் டாடோ செ.க.சந்திரகலா கவிஞர் குணசேகரன் கவிஞர் புதுகை ஆதீரா, கவிஞர் அகவலன், கவிஞர் வேலாயுதம்.ந, உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

நிகழ்ச்சியைக் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ஒருங்கிணைத்தார். தன்முனைக் கவிதை வரலாற்றில் மாதம் ஒருநூல் வரிசையில் ‘கார்த்திகை’ மாதத்தின் நூல்கள் வெளியீடு சிறப்புற நடைபெற்றது.

Series Navigationஅன்பு என்ற விதை….