முதுமையில் தனிமை மழை
– பா.சத்தியமோகன்
வில்லா வீடுகள் அழகாய்த் தான்
அழகழகாய்த் தான் கட்டுகின்றனர்
வாசலில் திண்ணை வைத்து
தாங்கும் தூண்கள் வைத்து
காவிரி நதியோரம்
காற்றோரம் செடிகள் படர விட்டு
ஆனால்
ஒன்றிருவர் தவிர
ஏன் மனிதர்கள் இல்லை வீட்டினுள்
மனக் கேள்வி மழை மேல்
நிஜமழை பொழிகிறது.