லாவண்யா சத்யநாதன்
மருத்துவனையொன்றில்
ஸ்பெஷல் வார்டில்
சேர்க்கப்பட்டிருப்பதாய் நீ
அனுப்பிய புலனத் தகவல் பார்த்து
என் காதல் மணல்வீடாகிவிடுமோவென்ற
பதற்றத்தில் ஓடோடி வந்தேன்,
உன் தந்திரம் புரியாமல்
சிரித்த முகத்தோடும்
குழைந்த சொற்களோடும்
முரட்டு வலிமையோடும் .
என் கன்னிமையைக் களவாடினாய்.
பிந்தைய சந்திப்பில் மணமுடிக்கலாமென்றேன்.
தலைமறைவானாய்.
ஏமாளியானேன் என்று தெரிந்தும்
எனைக் காண வருவாயென்று காத்திருக்கிறேன்
நப்பாசையோடு.
—-லாவண்யா சத்யநாதன்.
.