This entry is part 6 of 9 in the series 22 பிப்ரவரி 2026

               இரா.ஜெயானந்தன்

எல்லோரும் சேர்ந்துதான் அடித்தார்கள். இழுத்து வந்தார்கள். கையில் விலங்கு, காலில் விலங்கு. 

உடல் முழுதும் ரத்த விளாரிகள். மனுஷர்கள் ராட்சதம் ஆனார்கள், ஒரு மனித குமாரனை மரத்தில் கட்டி தூக்கினார்கள். 

அம்மாவின் கண்களில் பாசம் ரத்தமாக வழிந்தது. நீ ஏன் அழுகிறாய் தாயே! அழாதே, உன் ராஜகுமாரன் மீண்டும் வருவேன் என்றான். உங்களுக்காகத்தான் ரத்தம் சிந்துகின்றேன். உங்கள் மனசு புனிதமாகட்டும் என்றான், ரத்தம் சாந்தியின்.

அனுகூலசாமிக்கு, 36 வருடங்கள் வருடமல்ல; தியானம். 

வகுப்பறை தியானம். புத்தம் புது விதை நெல்லை என்னிடம் கொடுத்தனர் பெற்றோர்கள். என்னுடைய மனசு வயல் என தெரிந்து, விதைத்து விட்டனர். அவைகள் விதைகள். நான் கல்வி உழவன். நீரும், காற்றும், உரமும் கொடுக்க வேண்டியவன். வரப்பு உயர நெல்உயரும் என்றார் அவர். 

அம்மா, அழாதே! இந்த பூமி செழிக்க வேண்டாமா. அதற்கு என் ரத்தம் தேவை. என் சதை தேவை. என் எலும்புகள் தேவை. அசரிரீ 

கேட்கின்றது. மனுஷ குமாரன் பேசுகின்றான். 

ஆசிரியர்கள் புனிதமானவர்கள்.

புனித பூமியில் கல்வி ஏர் கொண்டு உழ வருகின்ற கல்வி உழவன். 

தி.ஜா..கொஞ்ச காலம் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அவரே சென்னையில், ஆசிரிய பயிற்சிப்பள்ளியில் பயின்ற

 பட்டம் பெற்றவர்.

மந்தையில் சில கருப்பு ஆடுகள். 

நாரயணப்பர்  மற்றும் சில ஆசிரியர்கள் போர்வையில் ,ஊரை ஏமாற்றிய பேர்வழிகள். தெரு தெருவாக திரிந்தனர். காசூக்கு மானத்தை விற்றனர். இந்த கதையிலும்

 சில கருப்பு ஆடுகள் ஆசிரியர்களாக 

வாழ்ந்ததை காட்டுகின்றார்.

ஆசிரியர் அனுகூலசாமி  முள்முடி ஏந்தி நின்ற மகானை பார்த்தார். கண்களில் பாசம் ஆறாய் பாய்ந்தது. பக்கத்து போட்டோவில்,ஆட்டுக்குட்டியுடன் கருணை பகலவன், அனுகூலத்தைப்பார்த்து, அன்பை பகிர்ந்தார். இவன் ஒருவன் போதும். 

இவன் கால்கள் போதும். இவன் மூலம் போதும். இவன் காட்டும் வழியில் ஒளி போதும். என் வாழ்க்கை நிறைந்துவிட்டது. நான் என் பயிர்களை வளர்த்தேன். என் நிலம் ஆரோக்கியமானது. என் நிலத்தில் பறவைகள் வரும். நெல் மணிகளை எடுத்துச்செல்லும். 

தேவனே  உன் நிலத்தில்தான் எத்தனை தானியங்கள். எங்களுக்கு அன்றாட அப்பத்தை தருபவனே !

பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34). 

இந்தியாவில் ஆங்கில கல்வி வளரவும்  அனைத்து மக்களும் கல்வி பெற செய்தது, ஆங்கில ஆட்சிதான். 

இன்று உலகெங்கும் பரவியுள்ள இந்திய மக்களின் எழுச்சிக்க

 இந்த ஆங்கில கல்விதான் கொகொடுத்தது. இந்த கல்விதான், பொருளாதய யூகத்தின் திறவுக்கோல். நமது பண்டைய கல்வி நமது உள்ளத்திற்கு துணை என்றால், இந்த ஆங்கில கல்வி பொருளீட்ட உதவும் கருவி. 

“உலகத்துல வந்து இருக்குறது கொஞ்ச காலம். ஈசல் மழைக்காக வந்து மடியறாப்பல” என்ன ஒரு தத்துவாரத்த தி.ஜா..வின் வரிகள். வாழ்வின் மீது நீங்கா பற்றுக்கொண்டுள்ள மனித மனங்களுக்கு, ஒரு கலங்கரை விளக்கம் தி.ஜா.வின் எழுத்துக்கள். 

சின்னைய்யா அவரது மாணவன். 

தெரியாத்தனமாக  யாருடைய புத்தகத்தையோ  திருடி, பாதி விலைக்கு விற்றுவிட்டான். அவனை திருத்த, அவர் கொடுத்த சிறிய தண்டனை, 

யாரும் அவனுடன் பேசக்கூடாது. உடனே வகுப்பே அவனை 

 தள்ளி வைத்தது. சின்னையா உடைந்த உருவமாய் நடந்தான். 

ஊமையாய் திரிந்தான். திண்ணையில் முடங்கினான். 

அதனை இன்றைய பஞ்சாயத்தில், அவனது தாயார் சொல்லி மன்னிக்கும்படி கெஞ்சினார்

அனுகூலசாமியிடம். 

அனுகூலசாமிக்கு சுறுக்கென முள் குத்தியது. ஏதுமறியா இளம் மொட்டை கருகடித்த விட்டதுபோன்ற குற்ற உணர்வு அவரை வாட்டியது. 

ஒரு வருட காலம் அவனுக்கு தண்டனையா !

அவன் வளரும் பயிரல்லவா. 

இவர் ஆசிரியர் என்றால், ஏதும் செய்ய உரிமை உண்டோ. 

எங்கோ  ஏசுவை தண்டிக்க, கொடுங்கோல் அரசன், உத்தரவு பிறப்பித்தான். 

அதோ வருகிறார்கள் , ஈட்டியும், கொடுவாளும் கொண்ட கூட்டம். 

ரத்தம் குடிக்கும் கூட்டம். 

ரத்தம் சிந்தினான், நித்திய ஜீவன் கொண்டவன். 

மேலே சுவற்றில் தொங்கும் முள்முடி தரித்த நாதனைப்பார்த்தார்.

அவருடைய தலையிலும் முள்முடி குத்திற்று. 

(தி.ஜா..வின், முள்முடி சிறுகதை படித்த போது எழுந்த சிந்தனை)

Series Navigationமாற்றுத் திறனாளிகள் வேற்றுக் கிரகத்தவர்கள் அல்லமீன் தொட்டி