This entry is part 2 of 9 in the series 8 மார்ச் 2026

                           —வளவ. துரையன்

முல்லைக்குத் தேரீந்த பாரியை

மூவேந்தர் நாடகமாடித்தான்

முயன்று கதை முடித்தனர்

அவன் மகள்கள்

அங்கவை சங்கவைகள்

கபிலரால் கால்கடுக்க நடந்தனர்

வெளியூருக்கே வராத

புகார்ப் பெண்ணொருத்தி

கணவன் கொலையுண்டதால்

மதுரையில் நீதி கேட்டாள்

அவன் சோற்றை உண்டதால்

ஐவரையும் விட்டுவிட்டு

அவனுக்காக உயிர் நீத்தான்

அங்க நாட்டு மன்னன்

செவ்வியான் கேடும்

நினைக்கப்படுமென்று

சீர்மிகு வள்ளுவனார்

செப்பிச் சென்றார்

எத்தனை நாளைக்கு

என்பதுதான் இங்கே கேள்வி

Series Navigationசிரிப்புவாழ்வு நிகழ்ச்சிகளின் வடிவங்கள் –   [சசிகலா விஸ்வனாதனின் சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]