மழைக்கு முழுதும் தெரியும்
மழையில் நான் நடந்து
வீட்டை நோக்கி வரவும்
நீ புறப்பட்டிருந்தாய் குடையுடனும் மகளுடனும்
சாலையின் நடுப்பகுதியில் சந்தித்தோம்
புன்னகை நனைய பகிந்தாய் குடையை
குடைக்கம்பியில்
நேசமுடன் என் கைரேகை பதிகையில்
முழுசும் நனைந்தேன் உன் சூட்டில்
குறு நடை போட்டு
மகள்
முன்னே நடந்திருந்தாள் தன் குட்டிக் குடையுடன்
நாம் தனித்தனியே ஆனால் சேர்ந்து
நனைகிறோம் மகிழ்ச்சிக் குடைக்குள்
மழைக்கு நம் வெப்பம் வெம்மை அனைத்தும் தெரியும்.
– பா.சத்தியமோகன்
**
- மழை புராணம் – 35
- அட!
- தற்காலிகக் கூடாரத்திலொரு சீக்காளியான சேக்காளி
- கவிதைகள்
- சந்திப்பு