This entry is part 8 of 8 in the series 28 ஜூன் 2026

லாவண்யா சத்யநாதன்

மணிப்புறாக்களின்

மிடுக்கான நடையழகும்

அணில்கள் கால்களை கைகளாக்கி

உணவுண்ணும் அழகும்

வாசலில் முகம் மலர

வருவோரை வரவேற்கும்

செம்பருத்திப் பூவழகும்-

எங்கே மறைந்திருந்தன?

தானொரு மினி புலியெனும்

திமிரோடு நடந்துவரும்

திருட்டுப் பூனை எப்படி நுழைந்தது?

என் கவிதைகளில்.

—-லாவண்யா சத்யநாதன்.

Series Navigationஆசீர்வாதம்