Articles Posted in the " கவிதைகள் " Category

 • வெற்றுக் காகிதம் !

  வெற்றுக் காகிதம் !

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    வெற்றுக் காகிதம் மௌனமாக  இருப்பதாகவே தோன்றும்    ஆனால் அது மனிதனை எழுத்து வடிவத்தில் மகிழ்விக்கவோ துன்பம் தரவோ காத்திருக்கிறது    ஒரு வெற்றுக் காகிதம் வேலைக்கான உத்தரவாக மாறி ஓர் இளைஞனைத் துள்ளித் குதிக்க வைக்கும்   ஒன்று ஒருவனைச்  சிறையில் தள்ளும்   மற்றொன்று   ஓர் ஏழை நோயாளியைப் பதற வைக்கும்   நேற்று படித்த நல்ல கவிதை ஒன்றைத் தாங்கி இருந்ததும் வெற்றுக் காகிதமாக இருந்ததுதானே […]


 • இங்கு

  இங்கு

  அமீதாம்மாள் சிறகு சிறை இரண்டுமே  இதுதானாம் துளிர்களே இங்கு வேர்களாம் வியர்வையே இங்கு ‘கொடை’ களாம் செலவுகளே இங்கு வரவுகளாம் கண்ணீரே இங்கு உறவுகளாம் தலைமுறைப் பாலங்கள் இங்குதானாம் கோடையோடு வசந்தமும் இங்குதானாம் நடவும் அறுவடையும் இங்குதானாம் பூட்டும் சாவியும் இடம் மாற்றிக் கொள்வது இங்குதானாம் அறுசுவையும் இங்குதானாம் நவரசமும் இங்குதானாம் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சிவப்பு தத்துவமாவது இங்குதானாம் விளக்கு எண்ணெய் திரி பொறி விளக்கமாவது இங்குதானாம் மன்னிப்பேகூட தண்டனையாவது இங்குதானாம் நீ உண்ண நான் […]


 • இதுவும் ஒரு காரணமோ?

  இதுவும் ஒரு காரணமோ?

      அமீதாம்மாள் போக்குவரத்து போகாவரத்தானது முதுகும் மூக்கும் முட்டிக்கொள்ளும் வாகன நெருக்கடி என்ன காரணமாம்?   அட! பெரிய குப்பை வாகனம் குப்பை அள்ளுகிறது   நிமிட தாமதங்கள் நெருப்பாய் அவசரங்கள் ஒலிப்பான்கள் இரைச்சல்கள்   பாதசாரியாய் நான் அந்தக் குப்பை வாகனம் கடக்கிறேன் கும்பலாய் குப்பை வாளிகள் இழுக்கிறார்கள் தள்ளுகிறார்கள் தூக்குகிறார்கள் கவிழ்க்கிறார்கள்   இன்று விடுமுறை விடுமுறைக்கே விடுமுறை தந்து குப்பை அள்ளும் இவர்களை கும்பிட வேண்டாமா?   கரும்புச்சாறு வாங்கித் தந்தேன் […]


 •  ஒரு கவிதை எழுத வேண்டும் !

   ஒரு கவிதை எழுத வேண்டும் !

      மனம்  சொல் முளைக்காத  பாழ்நிலமாய் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது   எங்கே என் சொற்கள்  என்ற கேள்வி பதில் கிடைக்காமல் தவிக்கிறது   ஒரு கவிதை எழுத வேண்டும் யோசித்துப் பார்க்கிறேன் என்னுள் சொற்கள் கூடுவதும் கலைவதுமாய்க் கணங்கள் நழுவுகின்றன   மனம் பழைய பக்கங்களைப் புரட்டுகையில்  எல்லாம் மங்கி மறைகின்றன   அறுவடைக்குப் பின்னான வயல் ஒன்று முட்கள் முளைத்த முகமென என் மனத்தை ஆக்ரமிக்கிறது   ஒரு நீண்ட […]


 • பெய்யெனப் பெய்யும் மழை – வெண்பாக்கள் 

  பெய்யெனப் பெய்யும் மழை – வெண்பாக்கள் 

    நாகேந்திர பாரதி  ————————————————————————– ( நவீன விருட்சம் நிகழ்வில் ‘பெய்யெனப் பெய்யும் மழை ‘ என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டு எழுதி வாசித்த வெண்பாக்கள் )   குறள் வெண்பா  ————————— தொய்விலா  எண்ணம் துணையெனக் கொண்டிடில்  பெய்யெனப் பெய்யும் மழை    சிந்தியல் வெண்பா  ——————————– துய்ப்பதும் தூர்ப்பதும் ஏய்ப்பதும் நோக்கமாய்  எய்வது என்றே இருந்திடில் எப்படிப்  பெய்யெனப் பெய்யும் மழை    இன்னிசை வெண்பா  —————————— எய்திடும் அம்பு இழுத்திடும் வில்லிடம்  செய்தியைக் கேட்டுச் […]


 • திருமணக் கவிதைகள்

  திருமணக் கவிதைகள்

    ஆங்கிலத்தில்: மத்ஸுகி மஸுதானி  தமிழில்: ட்டி. ஆர். நடராஜன்     1.   நான் என் மனைவியைச் சந்தித்தேன் காத்மாண்டுவில். நாங்கள் இருவரும் சேர்ந்து பல மாதங்கள் பிரயாணித்தோம். கனடாவை அடைந்து நின்றோம். அங்கேயே தங்கி விட்டோம். மூன்று குழந்தைகளை வளர்த்த பின்பும் பிரயாணிகளைப் போலவே இருந்தோம். கஃபேக்களில் திரிவதும் தெருக்கடைகளை வலம் வருவதுமாக அக்கம்பக்கத்தில் நடமாடினோம். செல்வதற்கு வேறு இடமின்றி.     2.   என் மனைவி சொல்லுகிறாள்,  நீ எப்போதும்  உன் மேஜை முன் இருக்கிறாய். […]


 • சொல்லாய் அர்த்தமாகும் கல்

  சொல்லாய் அர்த்தமாகும் கல்

          சிறு கல்லொன்றைச் சீறும் கடல் மேல் எறியும் குழந்தை.   நீலநெடுங் கடல் நீட்டி ஆயிர அலைக் கைகளை உயர்த்திப் பிடிக்கப் பார்க்கினும் பிடி தவறி விழும் கல்.   குழந்தை கைதட்ட கூடக் கடலும் கை தட்டும் குழந்தை முன் குழந்தையாகி.   ஆழ ஆழும் ஆழ்கடல் இதயத்தின் ஆழம் தொட குழந்தைக்கு மட்டுமே அர்த்தமாகும் ஒரு சொல்- கல்.             கு.அழகர்சாமி


 • கேதார்நாத் சிங் கவிதைகள்

  (1) துக்கம் (Sorrow)   துக்கங்களின் குன்றென்றிலை துயர்களின் கடலென்றில்லை ஒரு கட்டிலின் கயிறு போல் நாள் முழுதும் துக்கத்தை நெய்கின்ற சிறிய கைகள் மட்டுமே இருக்கின்றன   யாருக்கும் தெரியாது எத்தனை காலமாக என் நகரத்திலும் உன் நகரத்திலும் சிறு துக்கங்களும் துயர்களும் இப்படி நெய்யப்படுகின்றன ஒரு முடிவற்ற கட்டிலின் மேல் பின்னுவதற்காய்   அந்தியில் அக் கைகள் நெய்யக் களைத்து தொடக்கமும் முடிவுமில்லாது இந் நாள் வரைக்கும் அவை நெய்வதை முடித்திருக்காத கட்டிலின் மேல் […]


 • நிரம்பி வழிகிறது !

  நிரம்பி வழிகிறது !

  அவன் மனம் முழுவதும்  பணத்தாட்கள்  முளைத்துக் கிடக்கின்றன தன்னை  ஒரு கஜானாவாக எண்ணியெண்ணி அவன் மகிழ்கிறான் பணத்தேடலில் அவன் கோரமுகம் பரிதாபமாய்ச் சிரிக்கிறது தலை சீவி முயலும் போது கொம்புகள் தடுக்கின்றன கற்ற கல்வியோ அவனிடமிருந்து விலகியே நிற்கிறது  பிறர் உழைப்பின் பயன் அவனும் நிரம்பி வழிகிறது …


 • சத்திய சோதனை

  சத்திய சோதனை

  உண்மை சுடும். உண்மை சுடப் படலாம். வலி நாட்டிற்கு… தன்னைச் சுடும் உண்மை தங்கமாக மாறும் யாரையும் சுடாத உண்மையின் பெயர்தான் அன்பு.