ரவி அல்லது கரைதலின் மீட்சி சற்றேனும் பிடித்து நிறுத்திட முடியாத இம்மனம்தான் சிலரை கோவிக்கிறது. சிலரை வெறுக்கிறது. சிலரை துதிக்கிறது தலைக்கேறிய கௌரவ தொனியில். அந்தியின் மோனத்தில் யாவும் கூடடைய. இதன் தொண தொணப்புதான் நின்றபடியாக இல்லை மேவும் கலைப்பில். சொல் கேளா அதனுடன் இனியொரு பொழுதும் துயருறுவதாக இல்லை குடை பிடிப்பதான அக்கரை அழைப்பில். சிறுமையின் செருப்பெனக் கொண்டாலும் கருணையினால் கரைவதைத் தவிர யாதொரு சுகமுமில்லை முன்கணம் வரை. *** புரை தீர்க்காதப் புண். அன்று […]
அங்காடி வண்டியை வீட்டுக்குத் தள்ளிவந்து வீதியில் விட்டேன் வெயிலில் மழையில் பனியில் கிடந்தது துரு தின்றது குப்பைகள் கொண்டது காலவீச்சில் அதன் கால்கள் முறிந்தது வண்டிக்கும் வலியுண்டோ? என்னால்தான் இக்கதி தப்புதான் வண்டியே மன்னிப்பாயா? வண்டி சொன்னது தொழுது வாழ்ந்தேன் இன்று தொழுநோய் கொண்டேன் சித்திரமாயிருந்தேன் சிதைத்தாய் என் சாபம் தொடரும் தர்மம் தண்டிக்கும் நீ தீயில் முகம் கழுவும் தேதிக்குக் காத்திரு அமீதாம்மாள்
ச.சிவபிரகாஷ் ஏழரை சனி வந்து, எழுச்சி மிக காட்டவே, உக்கிரம் தணிக்க, உத்தேசமாக பரிகாரம் சொன்னார்., ஊரறிந்த சோதிடர். சனிக்கிழமைகளில், காகத்துக்கு… எள்ளு சாதமும், சதா…நாட்களில், சாதமும் வைக்க… சுயநல சூழ்ச்சியறிந்து காகம் – அதை மன்றாடியும், மனதிறங்கி, வரவே இல்லை. கரிசனம் காட்டுமா? கடவுளான கிரகமும், தொண்டை கமறிய, காரியும். வெட்டப்பட்ட மரத்தில் – முன் கூடுகட்டி வாழ்ந்த, காகத்தையும், கடைசி வரை, காணவே இல்லை. காய வைத்த, வத்தல்,வடாமை வாயில் கவ்வ, வட்டமடித்து வந்த […]
அந்தச் செடியின் புதிய துளிர் எனைப் பார்த்து புன்னகைத்தது நானோ அதைக் கிள்ளிப் பறித்து மகிழ்ந்தேன் அதன் கவலையோ கண்ணீரோ வலியோ நான் அறியேன் அடுத்தநாள் அதே செடியின் புதிய துளிர் எனைப் பார்த்து புன்னகைத்தது அமீதாம்மாள்
குறுக்கு வெட்டாய் பிளந்து போட்டார்கள். ஓ! வென அலறி தலை சாய்ந்து கிடந்தது உடல் மரம்! தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம். கா!கா! வென கதறி அழுத காக்காய் கூட்டம். கிரீச்……கீரீச்… என குருவிகள் ஓலம். ட்விட்….ட்விட்…. கருங்குருவி கதறல், டக் டக் .டக்,,,,, என மரங்குத்தி துக்கம். கூடுகளை தேடி தூக்கனாங் குருவிகள் கூட்டம். மரண ஓலம் பூமியெங்கும் மரித்துப்போனது ஆலமரம். மெளனமாய் சினுங்கியது மண்! “எல்லாம் முடிந்துவிட்டது” வேர்! தூரத்தில் புல்டோசர் […]
தொலைந்து போன ஒத்தை கொலுசில்தான் ஜானுவின் வாழ்க்கை நீள்கிறது. முந்தானை முடிச்சில் தொங்கும் பத்து ரூபாயில்தான் சிசுக்களின் மூச்சுக்காற்று தொடர்கின்றது. வறண்டுபோன திண்ணைகளில்தான் தாத்தாக்களின் பெருமூச்சு கேட்கின்றது. பலூன்காரனுக்கு- எப்போதும் பத்துவீதிகளே போதும். பஞ்சு மிட்டாய்க்காரனிடம் எப்போதும் குழந்தைகள். சிவன்கோயில் அய்யருக்கு தட்டுகளில் ஜீவனம். பலாச்சுளை விற்பவனுக்கு பத்து ஈக்கள் சொந்தம். குருட்டு பிச்சைக்காரிக்கு கோவில் வாசலே சுவர்க்கம். வரும்போகும் வாழ்கைக்கு யாரிடம் கேட்பது முகவரி!. […]
தோப்பின் நடுவே ஒரு செல்ல மரம் அணில்கள் குருவிகள் பூச்சிகள் வாழ்த்தின கும்மியடித்தன குறுஞ்செடிகள் ஆரத்தி சுற்றின மற்ற மரங்கள் செல்ல மரத்தின் பூக்கள் சிரித்ததில் சுரந்த தேனை வண்டுகள் மேய்ந்தன வழிந்த தேனை எறும்புகள் செரித்தன-அதன் பிள்ளை பேரர்கள் காடுகள் வளர்த்ததில் மழைகள் வாழ்த்தின ஒரு பொட்டல் வெளியில் தனிமரம் ஒன்று ஒத்தையாய் நின்று ஒத்தையாய் செத்தது அமீதாம்மாள்
வெங்கடேசன் நாராயணசாமி யுகள கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா.10.35.2,3] இடது கன்னம் இடது தோளில் சாய்த்து வில்லாய் புருவம் வளைத்தசைத்து மெல்ல உதட்டைக் குழலில் வைத்து தளிர் திருவிரல்கள் துளைகளில் பரவ முகுந்தனின் இன்னிசை திசையெலாம் நிறைய, ஆய்ச்சிகாள்! வானுறை வனிதையர் வல்லினரொடு வானளாவி வியந்து வேணு காணமதில் மயங்கி காமன் கணையொறுத்த சித்தம் கலங்கி வெள்கி அரையிடை அழுக்காடை அவிழ்வதையும் அறியாதசையா நின்றனரே! [ஶ்ரீம.பா.10.35.4,5] நங்கைமீர்காள்! இந்நந்தகுமாரர் நலிந்தோர்க்கு நலம்பல செய்து தேற்றும் வெண்முத்துச்சர சிரிப்பழகர், […]
—-வளவ. துரையன் மௌனத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன். அதற்குச் சைகை மொழிதான் பிடிக்கும். எப்பொழுது அழைத்தாலும் வந்து சேர்ந்துவிடும். எதிர்வார்த்தைகள் ஏதும் பேசாது. ஆழத்தைக் காட்டும் தெளிவான நீர்போல மனம் திறந்து காட்டும். சில நேரம் ஆர்ப்பரிக்கும் அலைகள் போலவும் கூக்குரலிடும். அதன் செயல்களுக்குக் காரணங்கள் கேட்பது அறிவீனம். விளைவுகளுக்குப் பின் […]
வளவ. துரையன் வேண்டும் வேண்டும் வேண்டும் வாழ்க வாழ்க வாழ்க ஒழிக ஒழிக ஒழிக இவை போன்று ஒவ்வொரு இடங்களிலும் தனித்தனியாகக் கூட்டங்கள் கோஷங்கள் போட்டார்கள். பேருந்துகளில் மனிதர்கள் மிகக் கவனத்துடன் பார்த்தபடிச் செல்கின்றனர். பிச்சைக்காரர்கள் நின்று நோக்கியபின் நகர்ந்து போகிறார்கள். அங்கங்கே தேநீரும் குளிர்பானமும்தான் போட்டிபோட்டுக்கொண்டு அழைக்கின்றன. கூட்டங்களில் […]