Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category

 • இயேசுவின் சீடர்கள் அவுஸ்திரேலியாவில் (12 Apostles) 

    ———————————————————————- அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த காலத்தில்  மூன்று  வருடங்கள் வேலை –  படிப்பு என  மெல்பன்,  சிட்னி நகரங்கள்  எங்கும்  அலைந்து திரிந்தபோது,  ஒரு நாள் எனது மனைவிக்கு வார்ணம்பூல்  மருத்துவமனையிலிருந்து வேலைக்கு வரும்படி தகவல் வந்தது.    வார்ணம்பூல் என்ற இடத்தை அவுஸ்திரேலியா வரைபடத்தில் அதுவரையும் கேள்விப்பட்டதே இல்லை . அக்காலத்தில் நான் வேலையின்றி,  எனது  மிருக வைத்திய செய்முறைப்  பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தேன். மனைவியை வேலைக்கு அழைத்ததும், பரபரப்பாக சிட்னியிருந்து மெல்பன் வந்து,   அதன்பின்பு  […]


 • ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு  இன்று  93  ஆவது பிறந்த தினம்

                                                                    முருகபூபதி முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை  நகர்ந்துள்ளார்.   உரும்பராய் கிராமத்தில்  செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும்  அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில்  ஆறாம் தரம் வரையிலும்  கற்றபின்னர்,  யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை […]


 • அருணாசலக் கவிராயரின் ராம நாடகம்

  அருணாசலக் கவிராயரின் ராம நாடகம்

   டி வி ராதாகிருஷ்ணன் பேசுவது எளிது.அதையே உரைநடையாய் எழுதுவது அரிது.அந்த உரைநடையை இசையுடன் கூடிய கவிதையாக ஆக்குவது என்பது அதனெனினும் அரிது.பாமரர்களுக்கும் புரியும் வகையில் பாடல்களை எழுதுபவரே மக்கள் கவிஞர் எனப் போற்றப்படுபவர்கள். அப்படிப்பட்ட மக்கள் கவிஞர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டின்இடைப்பகுதியில்..தமிழகத்தில் பிறந்து..வளர்ந்த அருணாசலக் கவிராயர்ஆவார்.இவர் தன் வாழ்நாள் முழுதும் கம்ப ராமாயணம்படித்தும்,பாடியும்,சொற்பொழிவு ஆற்றியும் வந்தவர்.இவரது ராம நாடகத்தில்சூர்ப்பணகையின் காமவெறியை நகைச்சுவைக் கலந்துக் கூறுகிறார்.அதைப்பார்ப்போம். கம்ப ராமாயணத்தில் கம்பர் காதலுணர்வின் சிறப்பினைச் சீதையின்வாயிலாகவும்..காமவெறியின் இழிவினை சூர்ப்பணகையின் வாயிலாகவும்புலப்படுத்தியுள்ளார்.அவற்றையே காண்போர் […]


 • ஒரு கதை ஒரு கருத்து – ஸ்டெல்லா புரூஸ்ஸின் ஐ லவ் எவ்ரிதிங் அண்டர் த ஸன்

       அழகியசிங்கர்  (ஸ்டெல்லா புரூஸ்)           மார்ச் ஒன்றாம் தேதி ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்துகொண்ட தேதி.           18.05.1995ஆம் ஆண்டு ஸ்டெல்லா புரூஸ் ஒரு புத்தகம் கொடுத்தார்.  அது ஒரு சிறுகதைத் தொகுப்பு.  அப்புத்தகத்தின் தலைப்பின் பெயர் கற்பனைச் சங்கிலிகள்.            10 கதைகள் கொண்ட தொகுப்பு நூல்.  நான் உண்மையிலேயே இந்தப் புத்தகத்தை மறந்து விட்டேன்.  இது ரொம்ப மோசமான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது.           95ல் கொடுத்த புத்தகத்தை ஏன் படிக்காமல் விட்டேன்? இது மாதிரி பல புத்தகங்களை நான் […]


 • கீழடி அகழாய்வு : பதிப்பும் பதிப்புச் சிக்கலும்

    முனைவர் ம இராமச்சந்திரன் உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். ramachandran.ta@gmail.com     மதுரை மாவட்டம் வைகை ஆற்றின் கரையிலிருந்து வடக்கே 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கீழடி. மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு பிரிவைச் சேர்ந்தவர்கள் 2014 தொடங்கி 2017 வரையில் மூன்று கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டனர். பலவகை  அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் […]


 • கதை சொல்லல் -சுருக்கமான வரலாறு

  கதை சொல்லல் -சுருக்கமான வரலாறு

   . நடேசன் மனிதர்களது பிரயாணங்கள் கால்நடை மற்றும்    குதிரைகளில்   தொடங்கி கப்பல்,  ஆகாயவிமானம், ஏவுகணை என மாறுவதுபோல் பயணங்களின்  வடிவங்கள்  மாறுகின்றன. கதை சொல்வது கற்காலத்திலிருந்து தொடரியாக வந்தபோதும், வடிவம் மாறுகிறது.  கதை சொல்வதை நான்  பயணத்திற்கு ஒப்பிடுவது  இங்கு உதாரணத்திற்கு  மட்டுமல்ல,  ஒரு தொடர்ச்சியான படிமமாகவும் (Allegory) புரிந்து கொள்ளவேண்டும். கதை சொல்பவர்கள் , கேட்பவர்களை புதிய இடம் ,  தேசம் ,   ஏன்  புதிய உலகிற்கே அழைத்துச் செல்கிறார்கள்  ., இலங்கையைப் பற்றிய கதை […]


 • கவிதையும் ரசனையும் – 12 – க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’

  25.02.2021   அழகியசிங்கர்           44வது புத்தகக் காட்சியை ஒட்டில் 100 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன என்ற குறிப்பை முகநூலில்  படித்தேன்.  பல பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றன.             இதைத் தவிரப் பலர் தனிப்பட்ட முறையில் கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள்.  எந்த விளம்பரமும் இல்லாமல் இந்தப் புத்தகங்களும் வராமலில்லை.           டிசம்பர் 2013 அன்று வெளிவந்த க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’ என்ற கவிதைத் தொகுதி என் கவனத்திற்கு வந்தது.           பழனிசாமி ‘முழுமை பெறாத அனுபவங்கள்’ என்ற தலைப்பில் தன் […]


 • ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு

  ரவிசுப்பிரமணியன் “நினைவுக்கடலில் சேகரித்த கவி முத்துகள்” – நூல்மதிப்பீடு

  .                          ஜனநேசன் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர்.கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதிவருபவர்: சிறந்த படைப்பாளுமைளை ஆவணப்படங்களில் பதிவுசெய்பவராக, இசைஞராக. சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து பாடி மேடையேற்றியும்  வருகிறார். இன்றைய சிக்கலான வாழ்வியல் நிலையில் தொடர்ந்து கவிஞராக வாழ்ந்து இயங்குதல் அரிது .தூண்டிலைப் போட்டுவிட்டு ஐம்புலன்களின் கவனத்தைக் குவிமையப்படுத்தி தூண்டிலின் அசைவுக்காகக் காத்திருப்பவர் போல் […]


 • தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]

  வளவ துரையன்                                          பேய் முறைப்பாடு              =================================================   இந்தப் பகுதியில் தேவியின் முன் பேய்கள் சென்று தத்தம் குறைகளை முறையிடுகின்றன.                   என்று இறைவி நாமகட்குத் திருவுள்ளம்                         செய்யக் கேட்டிருந்த பேயில்                   ஒன்று இறையும் கூசாதே, உறுபசிநோய்                         விண்ணப்பம் செய்ய லுற்றே.                      222   [இறையும்=ஒரு சிறிதும்; கூசாதே=வெட்கப்படாமல்; உறுபசி-பெரும்பசி; விண்ணப்பம்=வேண்டுகோள்]   இறைவி நாமகளிடம் சொன்னதைக் கேட்டிருந்த பேய்களில் […]


 • ஒரு கதை ஒரு கருத்து  மா. அரங்கநாதனின் பூசலார்

  ஒரு கதை ஒரு கருத்து  மா. அரங்கநாதனின் பூசலார்

    அழகியசிங்கர்                     இந்தக் கதை சற்று வித்தியாசமானது.  இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை.           நான் பார்த்தவரை கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் மா.அரங்கநாதனின் உத்தி என்று தோன்றுகிறது.           பூசலார் என்ற கதையைப் படிப்பவருக்குப் பல சந்தேகங்கள் எழும்.  ஏன் மா. அரங்கநாதன் கதைகளில் பல சந்தேகங்கள் வரத்தான் வரும்.            முத்துக்கறுப்பன் என்ற பெயர் இவர் கதைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது.              […]