தாகூரின் கீதப் பாமாலை – 44 உன்னுள்ளே கலந்து விட்டது என்மனம் !

This entry is part 21 of 31 in the series 16 டிசம்பர் 2012

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நீ யிங்கு வர இயலாது  போயினும்
அது ஓர் காரண மாகுமா
நீ என்னை ஒதுக்கிட ?
என் உள்ளத்தில் நீ இல்லையா
என்முன் நீ நில்லா திருப்பினும் ?
உன்னுள்ளே கலந்து விட்டது
என்மனம்
எப்படி நீ எனை நீக்கி விட முடியும் ?
வெறுப்பு மௌனத்துடன் நான்
வெளியேறி விட்டாலும்
வஞ்சிக்கப் படாது  என் காதல் !
ஊசியால் குத்துவதை
எண்ணிட முடியாமல்
நம்பிக்கை இல்லா நீண்ட
ஏக்கக் குளத்தில்
கண்ணீர் அலைகள் மீது
ஊஞ்சல் ஆடுது உறவுத் தாமரை !
ஆயினும்  தாகக் கண்களுடன்
ஆவலாய்க் காத்துள்ளேன்
உன் தெரிசனம் காண !
என்னிரு
விழிகளுக்கு நான் உன்னை
விருந்தாய் வைக்க வில்லையா
ஒளிந்திருக்கும் எனக்குள்
நீ என்னும்
ஒரே காரணத்தால் !
+++++++++++++++++++++++++
பாட்டு : 265  தாகூர்  61 வயதினராய் காசில் இருந்த போது  1923 மார்ச் 23 இல்  எழுதி சாந்திநிகேதன ப் பதிப்பிதழில் வெளியிட்டது.
+++++++++++++++++++++++++
Source
1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com]  December 12 , 2012
Series Navigation101 வெட்டிங்ஸ் ( மலையாளம் )பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒளிமிகுந்து சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star] கண்டுபிடிப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *