அத்தியாயம்-8
துவாரகா வாசம்.
ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையின் தனிப் பெரும் அரசர் இல்லை. நமக்குக் கிடைக்கும் தகவல்களின்படி துவாரகை பல சிற்றரசர்களால் ஆளப்பட்ட ஒரு சமஸ்தானம் ஆகும்.. அதனால்தான் அங்கு வலிமையான மன்னர்கள் இருந்தனர். அந்த சமஸ்தானத்தில் மூத்த மன்னர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டன. இந்த ஒரு காரணத்தால்தான் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனை வென்றாலும் கூட மூத்த மன்னரான ஸ்ரீ கிருஷ்ணரின் தாத்தாவான உக்கிர சேனனுக்கு மகுடம் சூட்டப் படுகிறது. அரசு மேற்பார்வை என்று வரும்பொழுது எவரிடம் புத்தி சாதூர்யமும் உடல் வலிமையையும் உள்ளதோ அவர்களிடமே தலைமைப் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது. எனவேதான் ஸ்ரீ கிருஷ்ணர் யாதவ குல தலைவனாகப் போற்றப் படுகிறான். அவரது மூத்த சகோதரரான பலராமரும் மூத்தவரான கிருதவர்மனும் ஸ்ரீ கிருஷ்ணர் இளையவர் என்று கருதாது அவருடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்கின்றனர்.
இருப்பினும் எல்லா ராஜ்ஜியங்களில் இருப்பது போல ஓரிருவர் ஸ்ரீ கிருஷ்ணரின் மேன்மையைக் கண்டு பொறாமை கொண்டனர். மகாபாரதத்தில் இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணரே கூறுவது போல ஒரு இடம் வருகிறது. அது நிஜமாகவே மூல உரையா அல்லது பிற்சேர்கையா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் அந்த கால சமூக நிலையினை விளக்கும் மிக சுவாரஸ்யமான பகுதியாகும்.
நாரதர் ஸ்ரீ கிருஷ்ணர் வாயிலாக கேட்ட தகவலை பீஷ்மருக்குக் கூற அதை பீஷ்மர் அர்ஜுனனுக்குக் கூறுகிறார்.” என் சொத்துக்களில் சரி பாதியை என் உறவினர்களுக்கு நான் பிரித்துக் கொடுத்து விட்டேன். இருப்பினும் நான் அவர்கள் நடுவில் ஒரு யாசகனைப் போல வாழ்கிறேன். மீண்டும் மீண்டும் அவர்களது வினர்சனங்களுக்கு உள்ளாகிறேன். பலராமன் பிரத்தியும்னன் போன்ற வீரர்கள் சூழ்ந்திருந்தும் நான் தனிமையை உணர்கிறேன். ஆகுகனும் அக்ரூரனும் எனது ஆருயிர்த் தோழர்கள்தாம். இருப்பினும் நான் ஒருவனிடம் பிரியமாக பேசினால் அடுத்தவனுக்கு ஆக மாட்டேன் என்கிறது. எனவே இருவரிடமும் அன்பு செலுத்துவதை நிறுத்திக் கொண்டு விட்டேன். இருவர் நடுவில் என் காரணமாக எழுந்துள்ள பகைமையை என்னால் தடுக்க முடியவில்லை.”
ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவிமார்கள்
ஸ்ரீ கிருஷ்ணரின் முதல் மனைவி ருக்குமணி ஆவாள். விதர்ப நாட்டு மன்னர் பீஷ்மகரின் புதல்விதான் இந்த ருக்மிணி. அவளுடைய மனைப்பாங்கினையும் அழகையும் கேள்விபட்டதும் ஸ்ரீ கிருஷ்ணர் அவள் மேல் மையல் கொள்கிறார். மையல் மிகவே ருக்மிணியின் தந்தையிடம் சென்று அவளை மணம் முடித்துக் கொடுக்குமாறு கேட்கிறார். கெஞ்சவே செய்கிறார். ருக்மிணிக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் மேல் மையல் ஏற்ப்படுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணரின் பிரதம எதிரியான ஜராசந்தனின் வேண்டுகோளின்படி பீஷ்மகர் தன மகள் ருக்மிணியை ஸ்ரீ கிருஷ்ணருக்கு பாணிகிரகணம் செய்து வைக்க மறுக்கிறான். மறுத்ததோடு நில்லாமல் தன மகளை சிசுபாலனுக்கு மணம் முடிக்க முன் வருகிறான். சிசுபாலன் ஸ்ரீ கிருஷ்ணரின் பரம வைரி. அவன் ஒரு கிருஷ்ணா துவேஷியும் கூட.. திருமண நாள் நிச்சயிக்கப் பட்டு யாதவ தேசத்தில் உள்ள அனைத்து அரசர்களுக்கும் அழைப்பு அனுப்பப் படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு மட்டும் அழைப்பு அனுப்படவிலை.
அழையாத விருந்தாளியாக பீஷ்மகன் மாளிகைக்கு செல்ல ஸ்ரீ கிருஷ்ணர் உத்தேசிக்கிறார். யாதவ நண்பர்களின் உதவியுடன் ருக்மிணியை சிறை எடுக்க முடிவு செய்கிறார்.
திருமண நாளின்பொழுது துர்கா கோவிலில் பூஜையை முடித்து விட்டு வெளியில் வரும் ருக்மிணியை ஸ்ரீ கிருஷ்ணர் தனது தேரில் கவர்ந்து செல்கிறார்..ஸ்ரீ கிருஷ்ணர் பீஷ்மகரின் ராஜியத்திற்குள் பிரவேசித்ததுமே இது போன்ற அசம்பாவிதத்தை எதிர் நோக்கியிருந்த பீஷ்மகன், அவன் மைந்தன் ஜராசந்தன் மற்றும் வேறு சில நட்பு அரசர்களும் தயார் நிலையில் இருந்தனர். இவர்கள் பின் தொடர்ந்தும் பலன் இல்லாமல் போனது. ஸ்ரீ கிருஷ்ணரையோ அவனது நண்பர்களையோ துரத்திப் பிடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவினர். ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மிணியை துவாரகைக்கு அழைத்து சென்று உரிய முறையில் மணம் புரிந்து கொண்டார்.
ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் இது போல் மணமகளைக் கவர்ந்து சென்று திருமணம் செய்து கொல்வதற்கு ஹரணம் என்று பெயர். இந்த முறை திருமணத்தில் மணப்பெண் எவ்வித துன்புறுத்துதல்களுக்கும் ஆளாக்கப்படுவதில்லை. மேலும் ருக்மிணி கல்யாணத்தில் மணமகளுக்கு மணமகன் மேல் மையல் என்னும்பொழுது கேட்பானேன். இனிவரும் பகுதிகளில் எவ்வாறு அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சுபத்திரையை கவர்ந்து சென்று திருமணம் செய்து கொண்டான் என்பதைப் பாப்போம்.
இந்த விஷயத்தில் ஒரு தீர்மானமான முடிவை எட்டும் முன்பு நமது முடிவுக்கு சாதகமான விஷயங்களைப் பார்ப்போம்.
அந்த காலத்தில் சத்திரிய வீரர்கள் சத்திரிய குலப் பெண்களை ஒன்று சுயம்வரம் மூலமாகவோ அல்லது ஹரணம் என்ற முறையின் மூலமாகவோ மணந்து கொள்வது வழக்கம். சில நேரங்களில் இரண்டும் கலந்த முறையில் திருமணம் நடப்பதும் உண்டு. பீஷ்மரை எடுத்துக் கொள்வோம். காசிராஜனின் புதல்விகளை தனது சகோதரர்களுக்குப் பெண் கேட்டு சிறந்த ப்ருமச்சரிய சத்திரியரான பீஷ்மர் சுயம்வர மண்டபத்திற்குள் பிரவேசிக்கிறார். ஆனால் சந்தர்ப்பம் காரணமாக அம்பை, அம்பிகா மற்றும் அம்பாலிகாவை ஹரண முறைப்படி கவர்ந்து சென்று தன் சகோதர்களுக்கு மணம் முடித்து வைக்கிறார். இதில் அம்பையின் கதை தனிக் கதை.
சத்திரிய வீர்கள் எப்பொழுதும் ஆவேசப் படும் வகையினர் என்பதால் ஒரு குறிப்பிட்ட மணமகள் மேல் கடும்போட்டி இருக்கும். தான் விரும்பும் யுவ ராணியை சத்திரிய வீரன் சுயம்வரம் மூலமாகவோ ஹரண முறையிலோ கவர்ந்து சென்றால் ஆயுதம் ஏந்தி போர் புரியவும் ஒரு உண்மையான சத்திரியன் தயங்குவது கிடையாது. சில நேரங்களில் மணமகளை கவர்ந்து செல்லும் முன்பாகவே கூட யுத்தம் துவங்கி விடும்.
மகாபாரதத்தின் மூல நூலில் இருந்து கூறப்பட்டது என்று நம்பப்படும் எந்த பகுதியிலும் ஸ்ரீ கிருஷ்ணர் ஹரண முறைப்படி ருக்மிணியை கவர்ந்து சென்று திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் ருக்மிணியின் திருமனத்தின்பொழுது ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ருக்மிணி சகோதரர்களுக்கும் கைகலப்பு நிகழ்ந்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
ருக்மிணியின் ஹரண மணம் பற்றிய குறிப்பு மகாபாரதத்தில் 157வது அத்தியாயமான உத்தியோக பர்வத்தில் வருகிறது. இந்தப் பகுதி வலியச் சேர்க்கப்பட்ட இடைச் செருகல் என்பது தெளிவாக தெரிவதால் இது மகாபாரதத்தின் மூல நூலை சேர்ந்தது எனக் கொள்ளமுடியாது.
மகாபாரதத்தில் உள்ள உத்யோகபர்வத்தில் மொத்தம் 197 அத்தியாயங்கள் உள்ளன. மகாபாரதத்தின் ஆதிபர்வத்தில் நூலில் உள்ள மொத்த பர்வங்கள் குறித்தும் அதில் வரும் அத்தியாயங்கள் குறித்தும் தனிக் குறிப்பு உள்ளது. அதன்படி உத்தியோக பர்வத்திற்கு மொத்தம் 186 அத்தியாயங்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 11 அத்தியாயங்கள் பிற்சேர்க்கை என்றே கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. அவற்றில் ஒன்றுதான் ருக்மிணி கல்யாணம் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவியர் குறித்த ஒரு பழங்கதை.
ஒரு கர்ணபரம்பரைக் கதையில் பூமாதேவியின் மகனாக நரகாசுரன் பிறக்கிறான். பிரக்போதிஷம் என்ற பகுதியை ஆண்டு வருகிறான். அவனது அடாத செயல்களைப் பொறுக்க முடியாமல் இந்திரனே அவனைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணரிடம் எடுத்துரைக்க துவாரகை வருகிறான். அவனுடைய பல அட்டூழியங்களில் ஒன்று அவன் தேவர்களின் தாய் என்று கருதப்படும் அதிதியின் குண்டலங்களை கவர்ந்து சென்றதாகும்.அந்த குண்டலங்களை மீட்டுத் தர கிருஷ்ணர் சம்மதிக்கிறார். நரகாசுரனை அழிப்பதாக வாக்கு கொடுக்கிறார். அதன் பிறகு அவர் பிரக்போதிஷபுரம் சென்று நரகாசுரனைக் கொல்கிறார். நரகாசுரனின் பதினாயிரம் பெண்களையும் திருமணம் புரிந்து கொள்கிறார்.
சத்யபாமா
சத்ராஜித் என்ற ஜாதவ அரசன் ஷ்யாமாந்த்கம் என்ற சக்தி வாய்ந்த மணி ஒன்றினை வைத்திருந்தான். ஸ்ரீ கிருஷ்ணருக்கு அந்த மணியின் அருமை தெரிய வந்ததும் அந்த ஷ்யாமந்தகம் உக்கிரசேணனின் அரசவையை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்பினார். இதை அறிந்துகொண்ட சத்ராஜித் அந்த மணி பறி போய் விடாமல் இருக்க அதனை தனது சகோதரன் ப்ரோசேனனிடம் கொடுத்து வைத்தான். துரதிர்ஷ்டவசமாக ப்ரோசேனன் ஒரு நாள் காட்டில் சிங்கத்தால் கொல்லப்பட்டு இறந்து கிடக்கிறான். துவாரகை மக்கள் ஸ்ரீ கிருஷ்ணர் அந்த ஷ்யாமந்தக மணியின் பொருட்டு ப்ரோசேனனைக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகப் பட்டனர்.
தன் மீது விழுந்த பழியை போக்கிக் கொள்ள ஸ்ரீ கிருஷ்ணர் அந்த மணியை தேடி காட்டிற்குள் நுழைந்தார். எந்த இடத்தில் ப்ரோசேனன் ஒரு சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தானோ அந்த இடத்தின் அருகில் வசித்து வந்த ஜாம்பவான் தன் குகைக்கு அந்த மணியை எடுத்துச் சென்று விடுகிறார். மணியின் மீதிருந்து வந்த ஒளியின் மூலம் இதனை அறிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணருடன் 12 நாட்கள் ஜாம்பவானுடன் போர் புரிந்து அந்த மணியை மீட்டு வந்து சத்ராஜித்திடம் சேர்ப்பிக்கிறார். வீண்பழி சுமத்தியதற்கு வெட்கப்பட்ட சத்ராஜித் அதற்கு பரிகாரமாக தன ஒரே மகளான சத்யபாமாவை ஸ்ரீ கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்.
இதே கதை ஹரிவம்சத்திலும் கூறப் பட்டாலும் சத்ராஜித்திற்கு மூன்று புதல்விகள் இருந்தனர் என்றும் மூவரையும் ஸ்ரீ கிருஷ்ணர் மணந்து கொண்டார் என்று கூறப் பட்டுள்ளது.
கர்ண பரம்பரை கதைகளில் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவிமார் பதினாயிரம் என்பதாகும். ஹரிவம்சம் விஷ்ணுபுராணம் மகாபாரதம் ஆகிய நூல்களில் ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவிமார் பட்டியல் எண்ணிக்கை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவே உள்ளது. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெயர் இடம் பெறுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஒரே ஒரு மனைவிதான் இருந்திருக்க வேண்டும்.இதனை பல்வேறு நூல்களிலிருந்து கிடைக்கும் போதுமான ஆதாரங்கள் மூலம் நிரூபித்து விடலாம். சத்யபாமையின் மகன் ஷன்னி என்பவனுக்கு எந்த நூலிலும் அத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால் ருக்மிணியின் மகனான பிரத்யும்னன்தான் யுவராஜாவாக சித்தரிக்கப் படுகிறான். மகாபாரதத்தில் சத்யபாமாவை பற்றி வரும் குறிப்புகலைப் பார்க்கும்பொழுது அவை பிற்காலத்தில் இடை செருகப் பட்டவை என்பது விளங்கும். உபபல்யம் என்ற ஊருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களைப் பார்க்க வருகிறார். அப்பொழுது சத்தியபாமையும் உடன் வருகிறாள். பாண்டவர்களுடனான இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. வருகின்ற குருக்ஷேத்திரப் போரில் தான் பானடவர்கள் பக்கம் இருக்கப் போவதை ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதற்காகவே உபபல்யம் வருகிறார். அப்படி ஒரு சந்திப்பின்பொழுது சத்தயபாமையையும் உடன் அழைத்து வருவாரா என்பது கேள்விக்குரியதுதான்.
முடிவாக ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஒன்றுக்கு மேலாக மனைவிமார்கள் இருந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் மறுப்பதற்கில்லை.காரணம் பலதார மணம் என்பது அந்த காலத்தில் அனுமதிக்கப் பட்ட ஒன்று.காலத்திற்கேற்ப இருப்பதில் தவறில்லை என்று ஸ்ரீ கிருஷ்ணரும் நினைத்திருக்கலாம்.
- சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013
- மரண தண்டனை எனும் நரபலி
- BISHAN-TOA PAYOH DEEPAVALI FIESTA 2013 Date: 24 November 2013, Sunday – Singapore
- க லு பெ (தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி , தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்)
- நான் யாரு?
- மருத்துவக் கட்டுரை – கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver
- அட்டை
- புகழ் பெற்ற ஏழைகள் 32.உலகின் சிறந்த சிறுகதையாசிரியராகத் திகழ்ந்த ஏழை……..
- வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1
- திருவருட்பா முற்றோதல் நிகழ்வின் அறிக்கை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!
- பனம்பழம்
- அதிரடி தீபாவளி!
- சீதாயணம் படக்கதை -6 [சென்ற வாரத் தொடர்ச்சி]
- தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
- 90களின் பின் அந்தி –
- நெய்தல் நிலத்து குறுந்தொழில்கள்
- ஜாக்கி சான் 15. நரகமாகிப் போன மாயலோகம்
- தமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்
- நுகம்
- திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-8 துவாரகா வாசம்.
- மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
- தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை
- என்னுலகம்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 24
- விளம்பரக் கவிதை
- படித்துறை
- மருமகளின் மர்மம் – அத்தியாயம் 2
- நீங்காத நினைவுகள் – 22
- பேனா பதிப்பகம் வழங்கும் பேனா கலை இலக்கிய விருது-2013
- அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
- ஆசியாவிலே முதன்முதல் செந்நிறக் கோள் நோக்கிச் செல்லும் இந்திய விண்ணுளவி
- Shraddha – 3 short plays from Era.Murukan