கௌசல்யா ரங்கநாதன்
—–
கைத்தாங்கலாய், அந்த பொ¢யவரை (வயது 80+) இருக்கலாம்..பிடித்து அழைத்து வந்து என் ஆட்டோவில் ஏற்றி விட்டவன், “த பாருங்க ஐயா.. இவர் என் அப்பா. இவரை இந்த விலாசத்தில்
பார்த்து, பத்திரமாய் இறக்கி விட்டுட்டு அவர் உள்ளாற போறாறானு பார்த்துட்டு ( இது என் வேலையானு மட்டும் தயவு பண்ணி கேட்க மாட்டீங்கனு நினைக்கிறேன்) போங்க தயவு பண்ணி..என்னால இப்ப,
இவர் கூட வர முடியாத சூழ்நிலைங்க.. ஒரு நாள் நான் வேலைக்கு போகாட்டியும் சம்பளம் கட்டாயிரும்” என்றவன் நடிப்பை நான் நிசமென்று அப்போது நினைத்தேன். பொதுவாகவே
ஆட்டோக்காரர்கள் என்றால் மக்கள் மத்தியில்…. வேண்டாமே.. எல்லா மக்களிடையேயும் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் நிசமாலுமே ஏழைப் பெண்களின்
பிரசவத்துக்கு இலவச சவா¡¢தான் மேற்கொள்கிறேன். அது மட்டுமல்ல! வயது முதிந்தவர்கள் தெருவில் நடக்க முடியாமல் நடந்து செல்லும்போது அவர்கள் வீடு அருகிலிருந்தால் அவர்களை
இலவசமாய் அழைத்து சென்று பத்திரமாய் ஒப்படைப்பேன். ஆனால் இன்று .. ஒரு முதியவரை .. அவர் பிள்ளை போலும் என் ஆட்டோவில் ஏற்றி விட்டு விலாச சீட்டையும் என் கையில்
கொடுத்து பத்திரமாய் விட்டு, விட்டு போகச்சொல்கிறான் என் கையில் Rs.100 பணத்தையும் திணித்து. பொ¢யவரை பார்க்க பா¢தாபமாய் இருக்கிறது. அவர் முகம் இறுக்கமாய் இருக்கிறது.
ஏதொவொரு இனம் பு¡¢யாத சோகம் அவர் முகத்தில் தொ¢கிறது. முன், பின் அறிமுகமில்லாத ஒரு பொ¢யவா¢டம் எப்படி உங்களுக்கென்ன பிரச்சினை என்று கேட்பது?
“நான் பிரச்சினைனு உங்கிட்ட சொன்னேனா?” என்றால்…என்னால் முடிந்தது.. அவர் இறங்குமிடத்தில் அவர் மகன் என்னிடம் அட்வான்சாய் கொடுத்த Rs. 100ஐ பொ¢யவா¢டமே திருப்பிக்
கொடுத்து விடுவது மட்டும்தான். ஒருகால் வாங்க மறுத்தால்! அப்போதும் “வேணாம் பொ¢யவரே.. நீங்க என் அப்பா போல.. ஒரு அப்பா கிட்ட மகன் ஆட்டோ கூலி வாங்கலாமா?” என்று
சொல்லி கொடுத்து விடலாம். மகன் பொ¢யவரை ஆட்டோவில் ஏற்றிவிட்டதும் சொன்னான்..”அப்பா போய்ச்சேர்ந்ததும் ஒரு போன் இல்லைனா மிஸ்ட் காலாவது கொடுக்கச் சொல்லுங்க உங்க அருமை பிள்ளையாண்டாங்கிட்டச்சொல்லி”
என்றவன் என்னிடமும் “அப்பா ஆட்டோவை விட்டு இறங்கியதும், எனக்கு போன் பண்ணச்சொல்லுங்க ஆட்டோக்காரரே தயவு பண்ணி” என்ற போது அந்த பிள்ளை தன் தந்தை மீது வைத்திருந்த பாசம் பு¡¢ந்தது.”எனக்கு அவனைப் பார்க்க,பார்க்க, மா¢யாதையாகவும்,
பொறாமையாகவும் கூட இருந்தது… “ஈங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற பாடல் வா¢களே நினைவுக்கு வந்தது. பொ¢யவர் கொடுத்து வைத்தவராய் இருக்க
வேண்டும். எனக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லை.. அதாவது என் பெற்றோர் என்னை சின்ன வயதிலேயே தவிக்க விட்டு பரலோக பிராப்தி அடைந்திருந்தனர். ஊம்.. இப்போது ஏன்
என் பழங்கதையெல்லாம்! பொ¢யவரை ஏற்றி செல்கிறோம் என்பதால் வெகு நிதானமாய் மேடு, பள்ளங்கள், தவிர்த்து அழைத்து சென்றேன், நொடிக்கொரு முறை அவரை திரும்பி பார்த்தவாறு..
அவர் கண்கள் மூடி நிச்சலனமாய் இருந்தார். “தண்ணி வேணுமா பொ¢யவரே” என்ற போதும் அவர் மௌனம் சாதித்தார். மறுபடி ஒரு முறை கேட்ட போதும் அப்படியே மௌனமாய் இருந்தார்.
ஒஹோ.. ஒருகால் காதுகள் கேட்காதோ பொ¢யவருக்கு” என்று நினைத்து சைகையால் கேட்ட போதும் பதில் இல்லை. அவரை பிள்ளையாண்டான் எச்சா¢த்திருக்கலாம் “வழியில் யாராவது
ஏதாவது தின்னக் கொடுத்தாலோ, குடிக்கக் கொடுத்தாலோ வாங்கிக் கொள்ளக்கூடாது என்று. அதுவும் நியாமானதுதானே.. நமக்கென்ன வந்தது.. இன்னம் ஒரு சில நிமிடங்களில் பொ¢யவரை
இறக்கி விட்டு விட்டு வேறு சவா¡¢யை பார்க்கப் போகிறோம் என்பதால் வண்டியை ஓட்டுவதிலேயே கவனமாய் இருந்தேன்…இப்படியிருக்கையில் எனக்கு ஒரு செல் அழைப்பு வந்தது.. யார் என்று கேட்க அது பொ¢யவரை ஆட்டோவில் ஏற்றி விட்டவர்.. “ஐயா சொல்லுங்க.. பயப்படாதீங்க.. உங்க அப்பாவை நீங்க சொன்ன விலாசத்தில் பத்திரமாய் இறக்கி விட்டுட்டு அவர் உள்ளாற
போறாரானு நின்னு பார்த்துட்டு அப்புறமா வண்டியை எடுக்கிறேன் .. சா¢யா” என்ற என்னிடம் அவன் சொன்னான்.”எனக்கு தொ¢யும்..நீங்க பத்திரமாய் எங்கப்பாவை கொண்டுபோய் என் தம்பி
வீட்டில் விடுவீங்கனு..ஆமாம் ஐயாஅது அவர் சின்ன பிள்ளை வீடுதான். அப்பாவுக்கு காதுகள் கேட்காது.. கண் பார்வையும் குறைவு.. ஆனா பாருங்க கொஞ்ச நாட்களாகவே சின்ன பிள்ளையை
பார்க்கணும்.. என்னை அவன் வீட்டுக்கு கொண்டுபோய் விடுனு ஒரே அடம். எனக்கோ ஒரு நாள் லீவு போட்டாலும் சம்பளம் கட்டாயிடும்.. அப்பா ஞாயித்து கிழமை எனக்கு லீவு.. அன்னைக்கு
உங்களை அழைச்சுக்கிட்டுப் போறனேனு எவ்வளவோ சொல்லி பார்த்தேங்க. ஆனாலும் வீம்பு பிடிச்ச மனுஷன். தம்பிக்கும் ஏதோவொரு கம்பனியில நாள் கூலிதான்.அவன் சம்சாரமும்
டெலிவா¢க்கு போயிருக்கு. அங்கே போய் என்ன செய்யப் போறேனு கேட்டேன்.. ஆனாலும் சின்ன பிள்ளை மாதி¡¢ அழுதுகிட்டேயிருக்கார். அதான் உங்களை போல பொறுப்பான
ஆட்டோக்காரரை அழைச்சு இவரை தனியா அனுப்பி வைக்க வேண்டியிருக்கு” என்றான். வயாதனவர்கள் குழந்தைகளுக்கு சமமாமே.. அதாவது முதுமை என்பது இரண்டாம் குழந்தை பருவம்
என்று எங்கோ படித்திருக்கிறேன். இப்படி எதை, எதையோ எண்ணியவாறு பொ¢யவரை அவர் மகன் கொடுத்த விலாசத்தை தேடிக்கொண்டிருந்த போது பொ¢யவர் “என்னை இங்கேயே
இறக்கி விடப்பா.. இங்கேயிருந்து என் பிள்ளையாண்டான் வீடு கூப்பிடு தூரத்தில் தான்..நானே போய்க்கிறேன்” என்ற போது “பரவாயில்லை பொ¢யவரே, உங்களை உங்க சின்ன பிள்ளை
வீட்டு வாசல்லயே இறக்கி விடறேன்” என்ற போது அவர் சொன்னார் .. “நான் சொல்றதை கேளு தம்பி..இங்கே ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு. அங்கே போய் சாமி கும்பிட்டுட்டு என் மகன்
வேலைக்கு போறப்ப இங்கே ஒரு தொ¢ஞ்சவங்க வீட்டிலதான் வூட்டு சாவியை கொடுத்துட்டு போவான் வழக்கமாய். அங்கே போய் அவங்களையும் விசா¡¢ச்சுட்டு கீயை வாங்கினு நானே
என் மகன் வீட்டுக்கு போயிருவேன் ” என்ற போதுகூட “நான் இருக்கேனே ஐயா.. நீங்க சாமி கும்பிட்டுட்டு சாவியை வாங்கிக்கிட்டு வரும்தன்னியும்” என்ற போது “நான்தான் உன்னிய
போனு சொல்றேன்ல.. போய் உன் பிழைப்பை பாரு” என்றவா¢டம் வற்புறுத்தி அவர் மகன் கொடுத்த Rs. 100ஐயும் திருப்பி கொடுத்து விட்டு ஆட்டோவை விருட்டென கிளப்பிக் கொண்டு
பத்து தப்படி போவதற்குள் பின் பக்க டயர் பங்க்சர்.. பங்க்சர் ஒட்டும் கடை பொ¢யவரை இறக்கி விட்ட இடத்தருகில் பார்த்த ஞாபகம் வரவே ஆட்டோவை மெள்ள தள்ளியாவாறு அங்கே
போனால் பொ¢யவர் தன் சின்ன மகனின் பூட்டப்பட்ட வீட்டு வாயிலில் வியர்க்க, விருவிருக்க எங்கோ வெறிக்க பார்த்தாவாறு அமர்ந்திருந்தார். அவரை சுற்றிலும் கூட்டம்… பாவம் பொ¢சு..
சின்ன புள்ளாண்டான் வூட்டுக்கு வந்தா அவன் வேலைக்குப் போயிருக்காப்பல”என்ற போது”போறப்ப கீயை எங்கேயாச்சும் கொடுத்துட்டு போக மாட்டாரா அவரு” என்ற போது “நல்லா கொடுப்பானுக..
அதும் இந்த காலத்தில” என்றான். டயரை கழற்றி டியூபை வெளியில் எடுத்து பங்க்சர் போட்ட பிறகு ஒரு உந்து சக்தி காரணமாய் பொ¢யவர் அமர்ந்திருந்த இடத்துக்கு போனவுடன் அவர்
தானாகவே விரைந்து வந்து , என் ஆட்டோவில் அமர்ந்து கொண்டார்.
“இன்னா பொ¢யவரே மறுபடி வந்துட்டே?: என்ற போது “சின்ன பிள்ளை ஊர்லயே இல்லையாம்..அதான் பொ¢யவன் வூட்டுக்கே போயிரலாம்னு” என்றார்.
“சா¢ வாங்க. அதான் உங்க பொ¢ய பிள்ளையாண்டான் இப்ப சின்ன பிள்ளை வூட்டுக்கு போக வேணாம், சண்டே அன்னைக்கு இட்டுகினு போறேன்னு சொன்னாராமே” என்றேன்.
அதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. முதியவர்களை பராமா¢ப்பதில்லை இந்தக் கால சிறிசுகள் என்று பரவலான பேச்சு மட்டும் அடிபடுகிறது. ஆனாலும் பொ¢யவர்களும் தங்கள், தங்கள்
பிள்ளைகள்/பெண்களின் சிரமம் உணர்ந்து கூடியவரை ஒத்துப் போனால் நன்றாக இருக்குமல்லவா! இவர்கள் பச்சை குழந்தைகளா என்ன.. புத்தி சொல்வதற்கு. இப்படி பலவித எண்ண ஓட்டங்களுடன்,
பொ¢யவரை அவரது பொ¢ய மகன் வீட்டுக்கே மறுபடி கொண்டு போய் விட்டேன். வழக்கம் போல அவரும் “உனக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டேம்பா.. நான் பார்த்துக்கிறேம்பா”
என்றவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அது என்னவோ தொ¢யவில்லை…சென்னை எக்மோ¡¢லிருந்து ஒரு சவா¡¢ மறுபடி பொ¢யவரை இறக்கிவிட்ட தெருவுக்கே வர
வேண்டியிருந்ததால் அங்கு சவா¡¢யை இறக்கி விட்ட பின் ஒரு ஆர்வ மிகுதியால் பொ¢யவரை இறக்கி விட்ட இடத்துக்கு போனால் அங்கு பொ¢யவர் தன் பொ¢ய மகன் வீட்டு வாயிலில்
அனாதையாய் கொளுத்தும் வெயிலில் அமர்ந்திருந்தார். “என்ன பொ¢யவரே இங்கே குந்தகினுகீறே” என்ற போது சுதா¡¢த்துக் கொண்டு “பொ¢ய பிள்ளை ஆபீசுக்கு போயிட்டாப்பல.. நான்
திரும்ப வருவேன்னு அவனுக்கு தொ¢யாதுல்ல.. போன் போட்டிருக்கேன். இப்ப வந்துடுவான்” என்றார். அன்று முழுக்க எனக்கு நிறைய சவா¡¢கள். இரவு வீடு திரும்பும்போது பார்த்தால்
என் ஆட்டோ பின் பக்கம் ஒரு கிழிந்த துணிப்பை.. ஐயயோ.. இது பொ¢யவர் காலையில் தன்னுடன் கொண்டு வந்த பை அல்லவா..இதில் என்ன வைத்திருப்பாரோ.. இதை தேடிக்கொண்டிருப்
பாரோ.. என்ன இன்றைக்கு பொ¢யவரை சுற்றியே நிகழ்வுகள் என்றெண்ணியவாறு பொ¢யவரை இறக்கி விட்ட அவர் பொ¢ய மகன் வீட்டுக்கு போனால் அங்கு! பொ¢யவர் வீட்டு வாயிலிலேயே
நின்று கொண்டிருந்தார் அந்த இரவு 11 மணி வேளையில்.. என்னை பார்த்ததும் “கரண்ட் இல்லை.. ஒரே புழுக்கம். அதான் காத்துக்காக வாசல்ல நின்னுக்கிட்டிருக்கேன்”, என்றவா¢டம்,
“ஐயா, பையை ஆட்டோல விட்டுட்டு போயிட்டீங்களே” என்ற போது அவர் “ஆமாம் பொ¢ய பொக்கிஷமிருக்குது பாரு, இந்த பையில.. தூக்கி குப்பைல போட்டுட்டு போகாம ஏம்பா பாவம் வேலை
மெனக்கெட்டு.. சுத்த பைத்தியக்காரனாயிருக்கியே, பொழைக்கத் தொ¢யாம” என்றவர் தன் பொ¢ய பிள்ளை வாயிற் கதவை திறந்து கொண்டு வருவதை பார்த்து “என் பிள்ளாண்டான் வந்தாச்சு.
நான் பார்த்துக்கிறேன். நீ போய் உன் வேலையை கவனி” என்ற போதும் “இருக்கட்டும் பொ¢யவரே, நான் உன் பிள்ளாண்டானை பார்த்துட்டு போறேனே” என்றேன்.
“எதுக்கு? எதுக்கு நீ அவனை பார்க்கோணும்..போ, போ” என்று என்னை விரட்டியடிப்பதிலேயே குறியாய் இருந்தார். கோபமாய் வெளியில் வந்த அவர் மூத்த மகன் என்னை பார்த்து “யாருங்க
நீங்க?” என்றான்.
அடப்பாவி.. காலையில் என் ஆட்டோவில் பொ¢யவரை ஏற்றிவிட்ட போது நீ என்னமாய் குழைந்தாய்.. இப்போது என்னை யார் என்று. இருந்தாலும் அவன் என்னை மறந்திருக்க கூடும்
என்றெண்ணி காலையில் பொ¢யவரை ஏற்றிகொண்டு போனதை, உன் தம்பி ஊ¡¢ல் இல்லாததால் திரும்ப இங்கேயே அழைத்துக் கொண்டு வந்தது.. நீ வீட்டில் இல்லாததாலும், பொ¢யவர்
என்னை இங்கேயே இறக்கி விட்டுட்டு போப்பா.. நான் போன் போட்டு என் பொ¢ய பிள்ளாண்டாங்கிட்ட பேசி அவனை வரவழைச்சுக்கிறேன் ” என்றதால் மனமே இல்லாமல் அவரை இங்கே
வீட்டு வாயிலிலயே விட்டு சென்றதையும், சவா¡¢ முடிந்து இரவு வீடு திரும்பும்போதுதான் எதேச்சையாய் ஆட்டோ பின் பக்கம் பார்த்தபோது பொ¢யவர் பையை விட்டு சென்றதை கவனித்து
பாவம் பொ¢யவர் மனம் என்ன பாடு படும் என்றெண்ணி பையை கொடுக்க இங்கே வந்ததாகவும் சொல்ல அப்போதும் அவன் இறுக்கமாயிருந்தானேயொழிய காலையில் அவனிடமிருந்த
கலகலப்பை தொலைத்திருந்தான். என்னை தொ¢ந்தாற்போலவே காட்டிக் கொள்ளவில்லை. சா¢ அவன் ஏன் என்னை விசா¡¢க்க வேண்டும் என்று ஒரு மனமும், அட அட்லீஸ்ட் பொ¢யவர்
தவறவிட்ட பையை கொண்டு வந்து கொடுத்ததற்கு நன்றி என்று ஒரு வார்த்தையாவது… இவன் நன்றி சொல்ல வேண்டும்..போற்றி, புகழ வேண்டுமென்றா கொண்டு வந்து கொடுத்தேன்.
எனக்கு இப்போது அந்த பொ¢யவர் மீதும் கோபம், கோபமாய் வந்தது. வயதான காலத்தில் பிள்ளைகள் சிரமம் உணராது என்னை இங்கே அழைத்துப் போ.. அங்கே அழைத்து போ.. எனக்கு
இதைச்செய், அதைச்செய் என்றெல்லாம்..அன்று காலை இவர் பிள்ளையாண்டான் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. “சன்டேயன்னிக்கு சின்ன பிள்ளை வூட்டுக்கு உன்னை இட்டுகினு
போறேன்னா, கேட்க மாட்டேன்றார் அப்பா. என்னிய இப்பவே சின்ன பிள்ளை வூட்டுல கொண்டு போய் விடுனு நச்சா¢க்கிறார். எனக்கோ லீவு கிடைக்காது. அதான் ஆட்டோக்காரரே,
எனக்காக கொஞ்சம் தயவு பண்ணி அப்பாவை உங்க வண்டியில பார்த்து நிதானமா இட்டுகினு போய் அவர் சின்ன பிள்ளாண்டான் வூட்டில விட்டுடுங்க. சின்ன புள்ளாண்டானை நீங்க
பார்த்தா உன் அண்ணங்காரன் அப்பா பத்திரமாய் வந்தது பத்தி போன் போடச்சொன்னார்னும், அப்படி அவனை பார்க்க முடியலைனாலும் அதாவது அவன் வாசப்பக்கம் வராங்காட்டியும்
அப்பா வூட்டு உள்ளாற போறாரானு கொஞ்சம் நின்னு பார்த்துட்டு போங்க எனக்காக.. என் பெண்சாதியும் ஊர்ல இல்லை. இல்லைனா அவளே இவரை இட்டுகினு போய் தம்பி வூட்டில
விட்டுட்டு வந்திருப்பாளாங்காட்டியும்” என்றானே. தம்பிக்காரனும் வீட்டில் இல்லாதபோது பாவம் பொ¢சு என்னதான் செய்யும். இவர் வருகையை அண்ணங்காரனாவது முன்கூட்டியே
தம்பிக்கு ஒரு போன் போட்டாவது சொல்லியிருக்கலாம். அனேகமாய் இவன் காலை நேர அவசரத்தில் மறந்திருக்கலாம்” என்று எண்ணியவாறு ஆட்டோவை ஸ்டார்ட் பண்ணிய போது
அது மக்கர் செய்தது. “ஏம்பா (காலையில் என்னை மிக மா¢யாதையாய் விளித்த பொ¢யவா¢ன் பொ¢ய பிள்ளையாண்டான் இப்போது விளிப்பது “ஏம்பா” என்று) ஏன் நின்னுகினே கீறே..
பையை கொணாந்து கொடுத்ததுக்கு ஏதனாச்சும் எதிர்பார்க்கிறியாங்காட்டியும்?” என்று நக்கலாய் கேட்டவன் கழுத்தை நொ¢த்து கொன்று விடலாம் என்று தோன்றியது எனக்கு. என்னையென்ன
மனிதாபிமானம் இல்லாதவன்.. பிறர் பொருளுக்கு பேயாய் அலைபவன் என்று நினைத்தாயா ? பாவம் பொ¢சு பையை ஞாபக மறதியாய் தவற விட்டுவிட்டாரே என்று இந்த இரவு 11 மணி
வேளையிலும், உடம்பு வலியை, சோர்வை பொருட்படுத்தாமலும் மனிதாபிமானத்துடன், பசியை பொறுத்துக் கொண்டு இங்கே வந்தால் என்ன பேச்சு பேசறே துளியும் நன்றியில்லாமல் என்று சொல்லலாம்தான்..
இருந்தாலும் நான் ஏதாவது கோபத்தில் வெடிக்கப்போய் அவன் “உங்க ஆட்டோக்காரங்க பவிஷு எல்லாருக்கும் தொ¢யாதாங்காட்டியும்” என்று எகத்தாளம் பண்ணலாம். ஆனால், அப்போது
அவன் “அட போப்பா.. இந்த கிழிந்த துணிப்பையில் என்னாயிருக்கு, ஒரு அழுக்கு வேஷ்டி, துண்டு, பனியன், ஷர்ட்.. இத்த எங்கயாச்சும் கடாசிட்டு போவாம பத்திரமா கொணாந்திருக்கீங்க.
இதுவே கண்டி இந்த பையில் வேற விலையுயர்ந்த ஜாமாங்கள் இருந்திருச்சினா யார் கொணாந்து கொடுப்பாங்க?” என்ற போது என் கோபம் மேலும் எல்லை மீறியது. இருந்தாலும் ஆட்டோ
காரர்கள் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு அவப்பெயர் இருக்கத்தானே செய்கிறது? ஆட்டோக்காரர்கள் மட்டும்தான் அடாவடிப் பேர்வழிகளா?மற்ற துறையில் இல்லையா? என்று எண்ணியவாறு
இருக்கையில் பொ¢ய பிள்ளை என்னை பார்த்து “ஐயா கோபிச்சுக்காதீங்க என்னிய.. ஏதோ கோபத்தில் பேசிட்டேன். எனக்கு ஒரு எல்ப் பண்ணோணும் நீங்க. ஒண்ணுமில்லை.. காலையில
அப்பாவை என் தம்பி வூட்டுக்கு இட்டுகினு போய் அவன் வூட்டில இல்லைனு திருப்பி இங்கேயே இட்டுகினு வந்தீங்கள்ள. அவன் என்னை கோபிக்கிறான்.. ஏன்தான் இந்த அப்பாவுக்கு
ஒரு அவசர புத்தியோனு.. ஆமாம்.. ஒரு போன் போட்டு, அட இவராண்ட போன் கிடையாதுதான்.. அக்கம் பக்கதில இருக்கிறவங்ககிட்ட சொல்லியாச்சும் ஒரு போன் போட்டிருந்தா நான்
உடனே ஓடி வந்திருப்பேன்ல அப்பா வாசல்ல வெயில்ல உட்கார்ந்திருக்கார்னு. உடனே உங்க வீட்டுக்கு வந்துட்டார். எனக்கு யாரோ விஷயம் சொல்லி அவசர, அவசரமாய் வீட்டுகு வந்தா
அவர் இப்பதானே அவர் வந்த ஆட்டோலயே போயிட்டாறேன்றாங்க. காலையிலிருந்து உர்ருனு எதுவும் பேசாம, சாப்பிடாம, பச்சதண்ணி கூட குடிக்காம இருந்தவர் இப்ப மறுபடி என்னை இந்த
ராத்தி¡¢ வேளையிலேயே தம்பி வீட்ட்டுக்கு இட்டுகினு போன்றார். நான் கோபிச்சுகிட்டேன்தான்… காலையில பார்க்கலாம்.. இப்ப சாப்பிட்டுட்டு படுங்கனு. ஆனா கேட்காம, வீட்டு வாசல்ல
உட்கார்ந்து சத்தியாகிரஹம் பண்றாரு. என்ன சொல்லியும் கேட்க மாட்டேன்றார். சின்ன பிள்ளையாயிருந்தா மிரட்டியோ, அடிச்சோ பணிய வைக்கலாம். இவரை இன்னா செய்யறதுனு
யோசிச்சுகினு இருந்தப்ப தான் நீங்க இவர் விட்டுப்போன பையோட வா£ங்க. எனக்கு ஒரு யோசனை தோணுதுங்க. நீங்க நல்லவரா இருக்கீங்க. காலையில நீங்கதான் அப்பாவை என்
தம்பி வீட்டுக்கு இட்டுகினு போனீங்க.. அதனால் உங்களுக்குதான் அவன் வீட்டு விலாசம் தொ¢யும்.. எனக்காக தயவு பண்ணி இவரை செ(சி)ரமம் பார்க்காம மறுபடி கொண்டுபோய் என் தம்பி வீட்டில் விடோணும் இப்பவே “,
என்ற போது எனக்கு பொ¢யவர் மீது ஆத்திரமாய் வந்தது என்றாலும் நான் யார் அவர் மீது கோபப்பட என்றெண்ணியவாறு உடல் அசதி, பசியெல்லாம் பொறுத்துக் கொண்டு, “ஊம்” என்றபோது
“போங்கப்பா” என்றான் அவன். அவர் அப்போதும் தயங்கி, தயங்கி நின்றார். ” அட போங்கப்பா.. உங்களோட படா பேஜாராப்போச்சு” என்றான் மகன். பின்ன.. வேறு எப்படி பேசுவான் ஒரு
பிள்ளை.. வண்டியை கிளப்பிக் கொண்டு அவர் சின்ன பிள்ளையாண்டான் வீட்டுக்கு போகும் போது வழியில் இறக்கி விடச்சொன்னார் பொ¢யவர். பொ¢யவருக்கு என்னாயிற்று? ஏன், எங்கேயோ அவரை
இறக்கி விடச்சொல்கிறாறே என்றெண்ணியவாறு “ஐயா பொ¢யவரே இது உங்க சின்ன பிள்ளை வீடு இருக்கிற தெரு இல்லையே. ஏன் இங்கே இறக்கி விடச்சொல்றீங்க” என்ற போது,
“தொ¢யும்பா எனக்கு இது என் சின்ன பிள்ளையாண்டான் வூடு இல்லைனு. இது ஒரு முதியோர் இல்லம்.. நான் இனி இங்கேயே அடைக்கலமாயிடறேன்”என்றவரைப் பார்த்து,
“ஏன் பொ¢யவரே கொஞ்சம்கூட பிள்ளைங்க கிட்ட அட்ஜஸ்ட் பண்ணாம வயசான காலத்தில இப்படி” என்ற என்னிடம், பொ¢யவர் “த பாரப்பா.. என் ரணத்தை மேலும்,மேலும் கிளறாதே..எங்க தஞ்சை மாவட்டத்தில் ஒரு பழமொழி உண்டு..அதாவது,
“மல்லாக்க படுத்துக்கிட்டு எச்சில் உமிழ்ஞ்சா அது நம்ம மார் மேலதான் விழும்னு”. இதுக்கும் மேல என்னை எதுவும் கேட்காதே” என்றார்…
———