மதுராந்தகன்
1. கரவொலி பெறுவதற்காகவே
கத்திப் பேசினார் பேச்சாளர்.
எனக்குள் இருக்கும் சொற்களை
வார்த்தையாகினால் உறவுகள் கூட மதிக்காது
தலைவலி என்று மருத்துவமனை சென்று
நீண்ட பரிசோதனைக்குப் பின்
இது மூளை வளர்ச்சி உடனடியாக ஆபரேஷன் பண்ணுங்கள் இல்லையென்றால்
மிகவும் துன்பப்படுவாய் என்றார் மருத்துவர்.
நீ எல்லாம் மனுஷனா என்றாள் மனைவி.
“ ஏண்டி உனக்கு இந்தச் சந்தேகம் “
பக்கத்து வீட்டுக்காரன் செய்யற வேலையிலெ பாதியாவது நீ செய்யறையா என்றாள் மனைவி .
2.
ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி விமர்சித்து
மக்கள் கூட்டம் ரசித்தது.
கூட்டத்தில் ஒருவன் சொன்னான்
” ரொம்ப நல்லா நடிக்கிறாங்கப்பா”
3.
சிறந்த மனிதர் என்று பாராட்டினார்கள்
பொன்னாடை போற்றினார்கள்
மாலை அணிவித்தார்கள்
நீண்ட நேரம் புகழ்ந்தார்கள்
விழா முடிந்து வீடு திரும்பியவர்
சுருண்டு வீழ்ந்தார்
இரண்டு நாள் பட்டினி.
- பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம். 13
- அக்கா
- தருணம்
- அதென்ன நியாயம்?
- யாப்பிலக்கண நூல்கள்: ஓர் அறிமுகம்
- நிர்மலன் VS அக்சரா – சிறுகதை
- கவிதை
- ‘ஆறு’ பக்க கதை
- அருளிசெயல்களில் பலராம அவதாரம்
- கவிதைகள்
- பரகாலநாயகியும் தாயாரும்
- ஒப்பீடு ஏது?
- புஜ்ஜியின் உலகம்
- எஸ் பி பாலசுப்ரமணியம்
- ஒரு கதை ஒரு கருத்து…. அசோகமித்திரனின் ‘இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை’
- பாலா