வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ
ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5
[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]
தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++++++++
அங்கம் -2 காட்சி -1 பாகம் : 5
++++++++++++++++
நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]
ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய ராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது]
மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]
புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது]
காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]
ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]
சிசாரோ : மோனிகாவின் தந்தை. வெனிஸ் செனட்டர் [60 வயது]
எமிலியோ : புருனோவின் மனைவி.
மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.
பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.
மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.
நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு
இடம் : சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம்
நேரம் : பகல் வேளை
பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.
[ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.]
புருனோ: [ஷைலக்கை நோக்கி] மக்கள் சொல்வார். காதல் நோயில் வெந்து போனவன் பிறகு செம்மை அடைவான் என்று. மனதில் மோனிகா மீது காதல் உறுதியாக இருந்தால் நான் சொல்வது போல் நட. லெஃப்டினன்ட் காஸ்ஸியோ இன்று இரவு கோட்டைக் காவல் பார்க்கிறான். இதை நான் உனக்குச் சொல்ல வேண்டும். தெரியுமா ? மோனிகா வாலிப காஸ்ஸியோவை காதலிக்கிறாள் ! இது ஜெனரல் ஒத்தல்லோ வுக்கும் தெரியாது. ஆனால் மோனிகாவின் தந்தைக்கு எப்படியோ தெரிந்து உள்ளது. இந்தக் காதல் சூதாட்ட விளையாட்டில் யார் வெவார், யார் தோற்பார் ? யார் சாவார் ? யார் பலியாவார் ? யாருக்கும் தெரியாது.
ஷைலக்: [மனம் குழம்பி தடுமாற்றமாய்] பொடியன் அவனோடா ? இருக்க முடியாதே. ஏன் அப்படிச் சொல்கிறாய் ? மோனிகாவைச்
சுற்றி மொய்க்கும் தேனீக்கள் இத்தனையா ?
புருனோ: மௌனமாய் கேள். உனக்கு என் ஆலோசனை இது. மோனிகா முதலில் எவ்வளவு ஆவேசமாய் கரு மூர்க்கன் ஒத்தல்லோவை
காதலித்தாள் என்று சொல்கிறேன். தளபதி ஒத்தல்லோ போரில் காட்டிய தன் வீர தீரச் செயல்களைப் பீற்றி தனக்கு நிகர் யாருமில்லை என்று புளுகியதில் மோனிகா மதி மயங்கிப் போனாள். இளங்குமரி மோனிகாவுக்கு கண்ணுக்கு அழகிய காளை வேண்டும். கரு வேதாளம்போல் இருக்கும் ஒத்தல்லோ ஒருபோதும் அவளுக்கு உடலின்பம் தர முடியாது. அவளது கனவில் வருபவன் வாலிப காஸ்ஸியோ. பார் போகப் போக அவளுக்கு கருமூர்க்கன் காதல் சலித்துவிடும். வெள்ளைப் பளிங்குபோல் இருக்கும் தேவதை அந்த காக்கை நிற மூக்கனை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பாளா ? உனக்கு ஒரு வாய்ப்பு வருது மோனிகாவை பறித்துக் கொள்ள. அந்த வாய்ப்பை விட்டு விடாதே. கருமை வேதாளம் அவன், கவர்ச்சி வாலிபன் நீ. செல்வக் கோமான் நீ. மோனிகாவுக்கு ஏற்றவன் நீ ! ஒத்தல்லோ அல்ல ! காஸ்ஸிக்கா இல்லை !
ஷைலக்: ஓ அப்படியா ? நான் அவளை பொன் ஆபரணங்களால் ஒளிபெற ஒப்பனை செய்வேன். தேன்மொழிகளால் பொழிந்து தேவதையாய் ஆக்குவேன். ஒத்தல்லோ ஆஃப்ரிக்கன் ஆண்டி! அடிமை இனத்தைச் சேர்ந்தவன் ! அதுபோல் செல்வம் இல்லாத சாதா சேவகன் காஸ்ஸியோ.
புருனோ: தளபதி ஒத்தல்லோ வெறுப்புள்ள, வெறுக்க கூடிய விஷ நாக்கு மூர்க்கன். அந்த முரடனோடு எந்தமாதும் இல்லத்தரசியாய் நெடுங்காலம் வாழ முடியாது.
ஷைலக்: மோனிகா ஒரு பச்சிளம் மாது, ஒரு தேவதை. முரடன் ஒத்தல்லோ அவளுக்கு ஏற்ற கணவன் அல்ல. வஞ்சகம் பேசி ஏமாற்றி மணந்த கள்வன்.
புருனோ: அவளா தேவதை ? பார்த்தாயா, காஸ்ஸியோவுக்கு கை கொடுக்க வந்த போது
மோனிகா உள்ளங் கையைத் தடவ, அவன் ரசித்து மகிழ்ந்ததை.
ஷைலக்: ஆம், நான் அதைப் பார்த்தேன், ஆனால் வெறுத்தேன், சகித்தேன். காலம் மாறி விட்டது. கதையும் மாறி நடக்குது. கவர்ச்சிப் பெண்ணுக்கு காதலர் சுற்றம் பெருகுது. அவள் தன் கருமைக் காதலன்,கணவனை நினைக்க நேரம் இல்லை. அவன் அருகில் இல்லை யென்றால் எவனாவது அழகியை தூக்கிக்
கொண்டு ஓடிவிடுவான்.
புருனோ: அது நடக்க நான் விட மாட்டேன். நான் தான் காவலன் மோனிகாவுக்கு. அவளை யாரும் தூக்கிச் செல்ல முடியாது. யார் பின்னாலும் அவள் செல்ல முடியாது.
ஷைலக்: இரவில் நீ தூங்கும் போது அவள் கடத்தப் பட்டால் ?
புருனோ: அதுவும் நடக்காது. என் மனைவி எமிலியோ மோனிகா படுக்கையில் கூட துணைக்கு இரவு முழுதும் இருக்கிறாள்.
ஷைலக்: புருனோ, நீ தான் எனக்கொரு வழி காட்ட வேண்டும். மோனிகாவை நான் வசீகரித்து என் கட்டிலில் அவளை அணைத்துக் கொள்ள முதலில் ஒரு சூழ்ச்சி செய்ய வேண்டும்.
[தொடரும்]
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ்
- 2023 ஆம் ஆண்டு, சித்திரை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 148)
- ஆண்டி, ராணி, அவ
- சன்மானம்
- எனது வையகத் தமிழ்வலைப் பூங்கா பார்வைகள் [ நெஞ்சின் அலைகள்]
- புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் !
- அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள்
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5
- பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன ?
- நாவல் தினை அத்தியாயம் பனிரெண்டு