This entry is part 2 of 8 in the series 24 செப்டம்பர் 2023

ஆர் வத்ஸலா
ஒரு சாண் துணை தான்
அமையும்
உனது நங்கூரமாக
என
பூர்வ ஜென்மங்களில்
சலவை செய்யப்பட்ட மூளையுடனேயே பிறந்தேன்
பணி, அண்ணனுக்குப் பிறகு
கவனித்தார் சற்று
என்னை
தந்தை
அளவாய்
பாசம் செலுத்தினர்
சகோதரர்கள்‌
தங்களுக்கு மணமாகும் வரை
கொண்டவனும்
கூரையும்
தூற்றினர் கைகோர்த்து
ஆண் பெண் நட்பிலக்கணமறியா
மடையரை
புறந்தள்ளி
தோழியர் உதவியுடன்
உற்பத்தி செய்து நானே
பாய்ச்சிக் கொண்டேன்
எனது நங்கூரத்தை

Series Navigationநங்கூரம் 1இரா.முருகன் படைப்புகள் கலந்துரையாடல் 24 செப்டம்பர் 2023