This entry is part 1 of 2 in the series 21 ஜனவரி 2024

ஆர் வத்ஸலா

சோகங்களை  பகிர்ந்து கொள்ள

இனி யாரும் இல்லை தான் 

வெற்றிகளை 

கை தட்டிக் கொண்டாட என்னோடு

இனி யாரும் இல்லை தான்  

மரங்களின் குளியலை

இலைகளின் ஆட்டத்தை

உதிரும் பூக்களால் சிலிர்த்து அடங்கும்

வேர்களின் மெல்லதிர்வை

காற்றின் கவிதையை

என்னுடன் சேர்ந்து ரசிக்க இனி யாருமில்லை தான்

கண்ணீரில் பார்வை மங்கியிருப்பது உண்மை தான்

ஆனாலும் 

உயிர்த்திருக்கிறேன் நான்

எனது ரசனையின் கதகதப்பில்

Series Navigationஏ ஜெ கனகரத்னா நூல் பற்றி அம்ஷன்குமார்