This entry is part 4 of 6 in the series 12 அக்டோபர் 2025

பாசத்தியமோகன்

போர்த்திய
இருட்டின்  தோலில் ஊற்றத் துவங்கிற்று மழை

மென்காற்று
கூசாமல்
மழைத்துளிகளின் இடுக்கில் நடக்கிறது

தீவிர சமயத்தில்
மழையைத் தன் தோளில் தூக்குகிறது மென்காற்று

மரக்கூட்டம்
ஊமை ஒருவன்
சவுக்கால் அடி பெற்றதுபோல் வாங்கிக் கொள்கின்றது

மண் நனைதல் என்பது
முதலில் வெப்பம் கிளம்பி
உள்ளே குளிரத்தான்

ஒரு சந்தேகம்
 மழையில் ஊறினாலும்
மறுநாளே கெட்டிதட்டிப் போகும்
இந்தப் புற்றுகளின் கூட்டத்தை
ஒன்றும் செய்ய முடியாது போனாலும்
ஏன் நனைத்துக் கொண்டிருக்கிறது இப்பெரும் மழை?

***

Series Navigationஅதெப்படி?  எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே?வெறிச்சாலை அல்லது பாலைவனம்