This entry is part 2 of 5 in the series 14 டிசம்பர் 2025

தகவல் தொழில் நுட்பம்
***************************
குளிரில் வெடவெடத்து
குளிரிலேயே காய்ந்து பிறகு மீண்டும் குளிர்ந்து
இனி ஒரு நிமிடம் நிற்க முடியாதென
பொத்தல் குடிசையின் ஈரத்தரை தாண்டி
ஊறிச் சொட்டும் மரத்தின் அடிபுறத்துக்கு
ஓடி வந்த கோவணச் சிறுவன்
செவியில் அறிவித்தது
டீக்கடை வானொலி:
“இன்னும் மூன்று நாட்கள் மிக கனத்த
பெருமழை நீடிக்கும்”
குளிர் முடிந்தும் முடியாமலும்
ஈரமான வயிறு
பசியில் வெப்பமுடன் கொதித்தபோது
சாப்பிட ஏதாவது கிடைக்குமென வெம்பிய தருணம்
“கம்யூட்டர் சிப்ஸ்! தின்னு தம்பி!” என்றது
இருபத்தோராம் நூற்றாண்டு
குளிரையும் கிள்ளும் பசியையும் தீர்க்கும்
A.I.தகவல் தொழில் நுட்பம் ரோபாட் பற்றி
சிறுவனுக்கு ஏன் கொஞ்சமும் புரிவதில்லை? முட்டாள்!
மூன்று நாட்களுக்கு மேலும் தொடர் மழை
அடர் மழை ஆயிற்று
மரத்தின் இலைகள் நைந்தது போலவே ஆடி
விழுந்தான் சிறுவன் வேர்கள் ஓர மண்ணில்
நல்ல விதமான புகைப்படம் எடுத்தால்
கம்யூட்டர் பிரிண்ட்டில்
நன்கு கலரில் தெரியும் சிறுவனின் பிணம்
***

Series Navigationகலந்துரையாடலும் கலந்துறவாடலும்கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் கலந்துரையாடல்