This entry is part 10 of 10 in the series 18 அக்டோபர் 2026

–கோ. மன்றவாணன்–

நாம் பள்ளியில் கணக்குப் பாடம் படிக்கும் போது Compass என்ற ஒரு
கருவியை வைத்து வட்டம் வரைவோம். அந்தக் கருவிக்குப்
பொருத்தமான தமிழ்ச்சொல் என்ன?
கவராயம் என்று விக்சனரி சொல்கிறது. அது பொருத்தமாக
இல்லை. புரியும்படியும் இல்லை. வட்டம்வரை கருவி என்றும்
குறிப்பிடப்பட்டு உள்ளது. அது, அந்தக் கருவிக்கு விளக்கம்போல்
உள்ளது.
அண்மையில் தமிழ்நதி என்பவர் எழுதிய மாயக்குதிரை என்ற
சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். அதில் நித்திலாவின் புத்தகங்கள்
என்று சிறுகதையில் “அவள் ஊற்றும் தோசை வட்டாரியால்
வரைந்ததைப் போல வட்டமாக இருந்தது” என்றொரு வரியைப்
படித்து, அங்கேயே நின்றுவிட்டேன்.
அது என்ன வட்டாரி?
Compass கருவிக்குப் பொருத்தமான தமிழ்ச்சொல்தான், வட்டாரி.

Series Navigation2. வெங்கதிர் குறையக் கார் தொடங்கியதே