ஆசிரியர்களை நோக்கி ஒரு ஆசிரியப்பா!

This entry is part 26 of 28 in the series 9 செப்டம்பர் 2012

ருத்ரா இந்த நாட்டின் முதுகெலும்பு நீங்கள் டிசைன் செய்தது. இளைஞர்களின் மூளை நீங்கள் பதியம் இட்டது. நீங்க‌ள் அக‌ர‌ முத‌ல ஒலித்துக்காட்டிய‌பின் எங்க‌ள் அறிவு நீள‌மாயும் அக‌ல‌மாயும் ஆழ‌மாயும் பாய்ந்து சென்ற‌து. உங்க‌ள் கையில் சாக்பீசும் பிர‌ம்பும் இருந்தாலும் கூட அதில் ச‌ங்கு ச‌க்க‌ர‌ம் ஏந்திய‌வ‌ன் தான் எங்க‌ளுக்கு காட்சி த‌ந்தான். குரு என்னும் சுட‌ரேந்தியாய் நீங்க‌ள் வெளிச்சம் த‌ந்த‌தால் தான் உங்க‌ளுக்கு பின்னால் இருப்ப‌வ‌னின் முக‌ம் தெரிந்த‌து. மாதா பிதா குரு.. அப்புற‌ம் தானே தெய்வ‌ம்! […]

35 ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பு கடந்து புதிய மைல் கல் நாட்டிய நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.

This entry is part 25 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா முப்பத்தைந் தாண்டுகள் பறந்து இரு வாயேஜர் விண்வெளிக் கப்பல்கள் பரிதி மண்ட லத்தின் விளிம்புக் கோட்டையைக் கடக்கும் ! பக்கத்து விண்மீன் மண்டலத்தில் பாதம் வைக்கும் ! நேர்கோட் டமைப்பில் வந்த சூரியனின் வெளிப்புறக் கோள்களை விண்கப்பல் கள் உளவுகள் செய்யும் ! நெப்டியூனின் நிலவை, கருந் தேமலை, பெரும் புயலைக் காணும் ! நாலாண்டு திட்டப் பயணம் நீள்கிறது நாற்பது ஆண்டுகளாய் ! அடுத்த […]

இஸ்லாமிய பெண்ணியம்

This entry is part 24 of 28 in the series 9 செப்டம்பர் 2012

ஹெச். ஜி. ரசூல் 1) பெண்ணின் உடல் – உயிரியல் உடல் கூற்றின் அடிப்படையில் ஆணின் உடலிலிருந்து வேறுபடுகிறது. மார்பகங்கள், பிறப்புறுப்பு, கருவயிறு இவற்றில் முக்கியமானதாகும். இயற்கைத் தன்மையும், இயல்பும் கொண்ட இந்த வேறுபடுதல் பெண்ணின் உடலை சிறு உயிரியை ஈன்று தரும் உயிர்ப்புத் தன்மை, வளம், மற்றும் மாறும் வடிவம் கொண்ட ஒன்றாக உருமாற்றுகிறது. ஆணின் உடலோ இதற்கு மாறாக மலட்டுத்தன்மை பொருந்தியதாக மட்டுமே இருக்கிறது. இத்தகு உயிரியல் உடல்கூறு தாண்டி வாழ்வின் இயக்கப்போக்கில் உருவாக்கப் […]

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!

This entry is part 23 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் பொருட்டு காத்திருந்து அதன் அலைவரிசையில் நம்மைத் திருத்தி வைத்துக்கொண்டால் அந்த இசை நம்முள் புகுந்து செல்களின் சுவர்கள் வரை சென்றடைந்து நம்மை உள்ளிருந்து சிலிர்க்கச்செய்யும். இப்படிப்பட்ட உணர்கொம்புகள் அத்தனை எளிதில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. சில உயிர்கள் அந்த அதீத உணர்கொம்புகளை தன்னகத்தே கொண்டு இசையை அதன் பிரபஞ்சத்தில் இருந்து உறிஞ்சி எடுத்து  தாமும் […]

காலம்….!

This entry is part 22 of 28 in the series 9 செப்டம்பர் 2012

ஜெயஸ்ரீ ஷங்கர். வாழ்க்கையை உழும்… காலம்..! ———————— தன்னை யாரெனக் உணர்த்திடும் காலம்..! ————————- பூமியை சிக்க வைத்த சக்கரம்..! காலம்..! ————————— இன்று…! என்பதை நேற்றாக மாற்றும் காலம்..! —————————– பூமி கடந்து சென்ற பாதை காலம். ——————————— கலி முத்தியதால்… அலங்கோலமாய் சிரித்தது… காலம்..! —————————- விதைத்ததை அள்ளிக் கொடுத்தது காலம்..! ——————————– காலன் பார்ப்பதில்லை காலம்..! ——————————— மன ரணத்தை ஆற்றிடும் அருமருந்து காலம்..! —————————– கருவை வளர்த்து கிழமாக்கும் காலம்..! ——————————— […]

திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு

This entry is part 21 of 28 in the series 9 செப்டம்பர் 2012

மலர்மன்னன் மத்திய அரசின் 12ம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி இடம்பெற்ற செய்திகளும் கேலிச்சித்திரமும் பிழையானவை என்று தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்களும் விவாதங்களும் வலுத்தன. இது பற்றிய சரியான புரிதலை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் வரலாற்றின் கடந்த கால பக்கங்களை மீண்டுமொருமுறை புரட்டிப்பார்க்கவேண்டும். தமிழக அரசியலில் அப்போதுதான் நடை பயிலத் தொடங்கியிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது இருப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்முனைப் போராட்டம் […]

(99) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 20 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. அப்படியும் இருந்ததா என்று. அப்படித்தான் இருந்தன. நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்த அனுபவங்களாயிற்றே.   ஹிராகுட்டிலிருந்து புர்லாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நடந்து. ஹிராகுட்டிலிருந்து சம்பல்பூர் பத்து மைல் தூரம். அந்த ரோடிலேயே சுமார் மூன்று மைலோ அல்லது நாலோ நடந்து பின் வலது பக்கம் கிளை பிரியும் ரோடில் போகவேண்டும் அதில் சுமார் இர்ண்டு மைல் […]

தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி.

This entry is part 19 of 28 in the series 9 செப்டம்பர் 2012

தாகூரின் கீதப் பாமாலை – 30 கடற் பயணி. மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எந்தப் பாதையில் நீ வந்தாய் என்று நான் அறியேன், நீ வந்ததையும் நான் காண வில்லை பயணியே ! கனவுபோல் திடீரெனத் தோன்றினாய் கானகத்தின் அதே மூலையில்  ! பங்குனி மாதம் அது, புது வசந்தம்  கொணர்ந்த திங்கே புவிக் கடலில் பொங்கிடும்  அலை மட்டம்  ! உன் பச்சைப் படகில் காற்று வீசிக் […]

சத்யானந்தன் மடல்

This entry is part 18 of 28 in the series 9 செப்டம்பர் 2012

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். முள்வெளி நாவலை தொடராக வெளியிட்ட திண்ணை இணையத்தாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். முள்வெளி நாவலின் அனைத்து அத்தியாயங்களும் திண்ணையில் வெளி வந்த மற்ற படைப்புக்களும் http://tamilwritersathyanandhan.wordpress.com என்னும் வலைப் பூந்தளத்தில் (திண்ணையில் வெளியாகி ஓரிரு நாட்களுக்குப் பிறகு ) வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. கணையாழி மற்றும் சிறுபத்திரிக்கைகளில் வெளிவந்த படைப்புகளும் வாசிப்புக்கென அத்தளத்தில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளன. வாசிப்புக்காகவே எழுதுகிறான் எழுத்தாளன். வாசகர் அனைவருக்கும் நன்றிகளும் வணக்கமும். அன்பு சத்யானந்தன்.   Regards Sathyanandhan http://tamilwritersathyanandhan.wordpress.com sathyanandhan.mail@gmail.com tamilwriter_sathyanandhan@yahoo.com

முள்வெளி-அத்தியாயம் 25 (நிறைவுப் பகுதி)

This entry is part 17 of 28 in the series 9 செப்டம்பர் 2012

சத்யானந்தன் அலுவலக வளாகத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகள் ஆழ்ந்த உட்காயங்களை விளைவிக்கின்றன. ரணத்தில் மன மூட்டுக்களில் ரத்தம் கட்டிக் கொள்கிறது. மனம் நொண்டுகிறது. வார்த்தைகளில் வலி எச்சரிக்கைகளை மீறி வெளிப்பட்டு விடுகிறது. “ஸ்கூட்டரை” நிறுத்தும் போதே “ப்ரிட்ஜில்” முட்டை இருக்குமா என்று யோசித்ததில் நினைவுக்கு வரவில்லை. எதிரில் இருந்த பெட்டிக்கடையிலேயே நான்கு முட்டைகளை வாங்கிக் கொண்டான். சாந்தியாயிருந்தால் “சிரமம் பாக்காம் நடந்தா நாடார் கடையில சல்லிஸா வாங்கலாம். இவன்கிட்டே ஒரு முட்டைக்கி அம்பது பைசா அதிகம் ” என்பாள். […]