ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி என்னங்க எப்படி இருக்காங்க? குளுகோஸ் ஏறுது, அதிலேயே மருந்துஏத்தியிருக்காங்க.சரி குளிச்சிட்டு வாங்க,,இட்டிலி எடுத்துவைக்கிறேன்ஆவி பறக்கும் இட்டிலியை எடுத்து தட்டில்வைத்து தேங்காய் சட்டினி , மிளகாய்ப் பொடி,,நல்லெண்ணெய் ஊற்றி எடுத்துச் சென்று மேசையில் வைக்கவும், சிவா தயாராகி வெள்ளைச் சீருடையில் பளீரென வந்து அமரவும் சரியாக இருந்தது.ஏங்க என்னதான் சொல்றாங்க?ஏதாவது கோளாறு இருந்தாதானே சொல்ல,அப்படீன்னா,சர்க்கர வியாதி,இரத்த அழுத்தம், உப்பு ,இதயக் குறை ஒன்றும் இல்லை,இல்லைனு சொல்லவும் நிறைய டெஸ்ட்எடுக்கறாங்க, இதுவரை எவ்ளோ கட்டியிருக்கீங்கபத்தாயிரம்ரெண்டு […]
ஆதியோகி ***அவ்வப்பொழுது உதிரும்ஒன்றிரண்டு சிறகுகளால்உயரப் பறத்தலில் சிரமம் ஏதும்உணர்வதில்லை, பறவைகள்…***நிர்வாணத்தை முற்றிலுமாய்தொலைக்க முடிவதில்லை…ஆடைகளுக்குள் ஒளித்துக் கொண்டுதான்அலைய வேண்டியிருக்கிறது. – ஆதியோகி *****
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ், 10 ஏப்ரல் 2022 (இரண்டாம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன் மன்சூர் எஸ். சுரேஷ் கலாஸ்ஸோவின் டியெபோலோ பிங்க்: ஒளியின் நாடகம் – நம்பி (கலாஸ்ஸோவை வாசித்தல் தொடர் – இறுதிப் பாகம் 3) நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்– – (SPARROW […]
அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்து எழுத வேண்டுமென்று நினைத்த கவிதைத் தொகுதிகளில் கண்மறை துணி என்ற கவிதைத் தொகுதியும் ஒன்று. பிரதீபன் என்ற கவிஞர் எனக்கு அவர் கவிதை மூலம் அறிமுகமானவர். அவருடைய கவிதை முதன் முதலாக 1979ல் ஆத்மா நாம் நடத்திய ‘ழ’ என்ற சிற்றேட்டில் வெளி வந்தது. அவருடைய மொத்த கவிதைகளையும் இத் தொகுப்பில் தொகுத்திருக்கிறார். முதலில் அவர் கவிதைகள் எதுவுமே தலைப்பிடவில்லை. ‘கண் மறை துணி’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதைகள் மட்டும் தலைப்பிடப்பட்டுள்ளன. கண்மறைத் […]
லாவண்யா சத்யநாதன் அழிவியல் உயர்ந்து வளரவேண்டிய குருத்துகள் ஊட்டமிலாது புவியில் அங்கங்கே மண்ணுக்கு உணவாகின்றன. ஓட்டுநரில்லா விமானம் சோற்றுப்பொட்டலம் வீசுமென்று நினைத்தேன். அதுவோ வேவு பார்த்தது. வனத்தில் வசித்த செடிகளை, மரங்களை வேருடன் வீசியெறிந்தது. வீதியில் ஊதிய உயர்வு கோரிக்கை ஊர்வலமும் உரத்த குரல்களும். சோதனைக்கூடமொன்றில் வயிறும் வாயுமில்லா யந்திர மனிதன் பிறந்ததும் நடக்கத் தொடங்கினான் எஜமானர்களுக்கு ஏவல் செய்ய. மாடுகளுக்குத் தொழுவமுண்டு. குதிரைகளுக்கு லாயமுண்டு. மனிதருக்கு உறைவிடமில்லை. மழைக்கு ஒதுங்கிடமில்லை. ஏவுகணையும் ஏழாம் அறிவும் […]
செ.புனிதஜோதி எங்கிருந்து வருகிறது மலர்களின் மகரந்தமணம் எட்டிப்பார்க்கையில்.. அல்லி,தாமர ரோஸ்,மல்லி சாமந்து பூ..பூவே.. கூவிக் கூவி விற்கும்… எம்மொட்டுவின் வாய்மொழியில் வெறும்கூடையும் மணந்தே எம்மை வரவேற்றது. செ.புனிதஜோதி சென்னை
சி. ஜெயபாரதன், கனடா நூறாண்டுக்கு முன் நேர்ந்த கனடா கதை ! கத்தோலிக் பாதிரிமார், பிரிட்டன் காலனி ஆட்சியில் செய்த பச்சிளம் பாலர் படுகொலை இது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஹிட்லர் ஹோலோகாஸ்ட் கடுங்கொலை அணியில் தொடர்ந்து வருவது ! வரலாற்று முதன்மை பெற்றது. பூர்வக் குடியினர் சார்ந்த குழந்தைகள் பன்னூறு, காத்தலிக் மதப் போதகர் நடத்திய தங்கு கல்வித் தளங்களில் பெற்ற தாய், தந்தையரிடம் இருந்து பறித்து, பிரித்து ஏதோ காரணங் […]
கிருஷ்ண பிரியா மயில்சாமி அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவார கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப்பொழுது. பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு. மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது. அந்த இளம்காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கரவாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல. […]
செ. நாகேஸ்வரி சொர்கத்திற்கு பயணப்பட்டேன் சிந்தனைத் தேரில் கற்பனை இராசகுமாரியாக! பத்து நிமிட பயணத்தில் என்னை பக்கம் பக்கமாய் பிய்த்து எரிந்தவளே!
அழகியசிங்கர் தொடர்ச்சி …… அந்த நாட்களில் மழை அதிகம் என்ற அஜயன் பாலாவின் புத்தகத்தை முன் வைத்து 26 வயதில் இறந்துபோன வால் நட்சத்திரம் என்ற தலைப்பில் லெர்மண்டோவ் பற்றி எழுதி உள்ளார். தஸ்தயெஸ்கியை விட லெர்மண்டோவ் 7 வயது மூத்தவர். லெர்மண்டோவ் 27வயதில் இறக்கும்போது தஸ்தயெவ்ஸ்கிக்கு வயது 20 மட்டுமே. லெர்மண்டோவ் எழுதிய முக்கியமான உலகப் புகழ் பெற்ற நாவலான நம் காலத்து நாயகன் என்ற நாவலைச் சிலாகித்துக் கூறுகிறார் அஜயன் பாலா. பொதுவாகத் தகவல்களைத் தொகுத்து கோர்வையாகக் கூறுவதற்குத் திறமை வேண்டும். அஜயன் பாலாவின் இக் கட்டுரைகளைப் படிக்கும்போது வெற்றி பெற்றுள்ளார் என்றே தோன்றுகிறது. […]
பின்னூட்டங்கள்