author

மட்டக்களப்பில் வைத்து

This entry is part 19 of 29 in the series 12 மே 2013

  மஞ்சுள வெடிவர்தன தமிழில் – ஃபஹீமாஜஹான் தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்…   களப்பில் எப்போதேனும் அலையெழும். வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து நெஞ்சில் அடித்தழுது தடதடவென்று செட்டைகளை அசைத்து வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும் உறுதியான கணமொன்றில் மாத்திரமே   தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும் களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.   கல்லடிப்பாலம் அரண் […]

முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்

This entry is part 9 of 29 in the series 12 மே 2013

அன்புடையீர், வணக்கம்! பேராசிரியர், விமர்சகர், படைப்பாளி க. பஞ்சாங்கம் அவர்கள் மே திங்கள் 11 தேதி முதல் சூன் திங்கள் 10 வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கிறார் என்ற தகவலைத் திண்ணையில் வெளியிட்டு உதவ வேண்டுகிறேன் நன்றி! தொடர்பு முகவரி காசி இல்லம் drpanju49@yahoo.co.in 25, 20வது தெரு, ஔவை நகர், லாசுப்பேட்டை(அஞ்) புதுச்சேரி – 605 008

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு

This entry is part 7 of 29 in the series 12 மே 2013

எஸ். சிவகுமார்     11-02-2012 சனிக்கிழமை. 1. கும்பகர்ணன். “குட் மார்னிங் சார் ! எல்லா ஒர்க்கும் முடிஞ்சு ஜாலியா உக்காந்திருக்கீங்க; ஏதாவது தின்க் பண்ணிட்டு இருக்கீங்களா ? “ என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டுக்காரர். பெயர் கும்பகர்ணன். அவர் பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. ஆனால், சாமி பிடிக்காத ஒரு கட்சியில் சேர்ந்து, தலைவர் பெயர் ராவணன் என்பதால் தன் பெயரை மயில்ராவணன் என்று மாற்றிக் […]

விளையாட்டு வாத்தியார் – 1

This entry is part 6 of 29 in the series 12 மே 2013

  தாரமங்கலம் வளவன் வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.   வள்ளிக்கு எதையும் நம்ப முடியவில்லை. தனக்கு நடந்தது கல்யாணம் என்பதும், இனிமேல் விளையாட்டு வாத்தியார் குமார் தான் தனக்கு புருஷன் என்பதும் நம்புவதற்கு சிரமமாக இருந்தது.   அண்ணன் செல்வத்தை போலீசில் பிடித்துக்கொடுத்த விளையாட்டு வாத்தியார் குமாரையே தான் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தது பற்றி அவளுக்கு வியப்பாய் இருந்தது. […]

தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்

This entry is part 5 of 29 in the series 12 மே 2013

ஏக்நாத் வேப்பெண்ணையை தலைக்குத் தடவி திண்ணையில் அமர்ந்து அனஞ்சி தலைசீவிக் கொண்டிருக்கும்போது, அவள் மகன் பதினோரு வயது பிள்ளையாண்டன், ஐஸ் குச்சியை நக்கிக்கொண்டே வந்தான். குச்சியில் இருந்து ஐஸ் கரைந்து வலது கையின் வழியே கோடு மாதிரி வடிந்து விழுந்து கொண்டிருந்தது. அதையும் விட்டுவைக்காமல், முழங்கையில் இருந்து மேல்நோக்கி, அந்த கோடிட்ட இடத்தை சரட்டென்று நக்கிக்கொண்டான். ‘எய்யா, கீழ சிந்தாதடா…’ என்ற அனஞ்சியின் கரிசனையை அவன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஐஸ் இப்போது முழுவதுமாகக் கரைந்து வெறும் மூங்கில் […]

மருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி

This entry is part 2 of 29 in the series 12 மே 2013

  டாக்டர் ஜி.ஜான்சன் பெண்களுக்கு மாதவிலக்கு வலி ( dysmenorrhoea )பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். மாதவிலக்கு வலியை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். * காரணமற்ற மாதவிலக்கு வலி – Primary Dysmenorrhoea 50 சதவிகிதத்தினருக்கு இந்த ரக வலிதான் உண்டாகிறது.இவர்களில் 15 சதவிகிதத்தினருக்கு வலி கடுமையாக இருக்கும். பெரும்பாலும் இளம் பெண்களுக்கு இந்த ரக வலிதான் ஏற்படுவதுண்டு. இவர்கள் திருமணமாகி கர்ப்பம் தரித்தபின் இந்த வலி இல்லாமல்கூட போகலாம். இந்த வலி உண்டாக முக்கிய காரணமாகத் திகழ்வது […]

தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)

This entry is part 14 of 29 in the series 12 மே 2013

11-05-2013, சனிக்கிழமை – 53 வது குறும்பட வட்டம் (ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், மாலை 5 மணிக்கு), நண்பர்களே இந்த மாத குறும்பட வட்டத்தில் Big city blues படம் திரையிடைப்பட்டு அதுப் பற்றிய ரசனை வகுப்பு நடைபெறும். ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன் இந்த மாத திரைப்பட ரசனை வகுப்பில் பேசுகிறார். இரண்டாவது பகுதியில், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா பாஸ்கர் சக்தியின் “ஒற்றைப் பூ” குறும்படம் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் […]

நிழல்

This entry is part 12 of 28 in the series 5 மே 2013

உன் குற்றப்பத்திரிக்கையின் கூர்முனையிலிருந்து வெளிவரத்துடிக்கிறதொரு நிழல் உன் புறக்கணிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் எனதிந்த உடலை திண்ணத் தொடங்க கொடூரத்தின் கோரத்திலும் புன்னகித்தபடியே கடக்கிறது வன்முறையொன்று ப்ரியத்தின் பொருட்டு வழக்கொழிந்து போவதாய் வழமை போலவே நினைக்கிறது அது புலங்கப்படா பாதையில் படிந்திருக்கும் தூசிதனை தட்டியெழுப்புவது போல் இருக்கிறது நினைவின் தடம் செய்யத்துடிக்கும் அனைத்திலும் செயலின்மையை கைக்கு கொடுக்கிறது கையாளாக அன்பு இறுகப்பற்றுதலிலோ நீண்ட முத்தத்திலோ சில துளி கண்ணீரிலோ மீட்டெடுக்கலாமென நினைக்கையில் மீண்டுமெனைப் பற்றிக்கொள்கிறது அந்நிழல்   ரேவா

அரிசிபருப்பு சோறு: சுப்ரபாரதிமணியன்

This entry is part 11 of 28 in the series 5 மே 2013

* நாவல்= ஆகஸ்ட் 15 : குமரி எஸ். நீலகண்டன் ஆகஸ்ட் 15  நாவல் : வித்தியாசமான வடிவம் . இணையதள பக்கங்கள், அவற்றின் பின்னோட்டம் என்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.இதில் காந்தியின் உதவியாளர் கல்யாணசுந்திரத்தின் வாழ்க்கை அனுபவங்களும் இளம் வயது சத்யாவின் சில பக்கங்களும் இந்த புது வடிவத்தில்  சொல்லப்பட்டிருக்கின்றன.கல்யாணத்தின் தீவிர அனுபவங்கள் பெரிதாய் ஆக்கிரமிக்கின்றன. சத்யாவின் அனுபவங்கள் வயது காரணமாக சற்றே மேலோட்டமானவை. இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பது கல்யாணம் மூலம் காந்திய நெறிகள் வலியுறுத்தப்படுவது, அதை இளைய தலை […]

மருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்

This entry is part 6 of 28 in the series 5 மே 2013

  டாக்டர் ஜி.ஜான்சன் நம் உடலில் தொடர்ந்து 5 லிட்டர் இரத்தம் ஓடிக்கொண்டே உள்ளது. இரத்தம் ஓடவில்லை என்றால் உடலில் உயர் இல்லை என்று பொருள். இரத்தம் இப்படி ஓடுவதால்தான் உடலின் வெப்பம் 97 டிகிரி செல்சியஸ் உள்ளது. உயிர் இல்லாத உடல் வெப்பம் இன்றி ஜில்லிட்டுபோகும். இரத்தத்தை இப்படி சீராக ஓடச் செய்வது இருதயத்தின் துடிப்பு. இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் சீராக துடிப்பதால்தான் இரத்தமும் இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் […]