Articles Posted by the Author:

 • பொன் மாலைப்பொழுது

  பொன் மாலைப்பொழுது

  மயக்க வைக்கும் பின்னணி இசையுடன் ஒரு பொன் மாலைப்பொழுது, நேர்மறையாக எல்லாவற்றையும் முடித்து வைத்த பொன் மாலைப்பொழுது..வெளியே மழை,உள்ளே ராஜா’வின் இசை, கையில் கோல்ட் காஃபி,எதிரே ஒரு அழகான பெண், வேறென்ன வேண்டும்?! இதுவே மாலைப்பொழுதின் மயக்கத்திலே..! ஒரு திரைப்படத்தை இயக்கிவிட நினைக்கும் ஆசையில் ஒரு இளம் இயக்குநர். அதை எப்பாடுபட்டாவது சாத்தியமாக்கி விட நினைக்கும் ஒரு ஆத்மார்த்த நண்பன். 7 Year Itchல் ஒரு சிறுவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் தம்பதியினர். வாங்கிய கடனைக்கொடுக்க இயலாத […]


 • இசை என்ற இன்ப வெள்ளம்

  இசை என்ற இன்ப வெள்ளம்

  எண்பதுகளில் இருந்த தமிழ்த்திரை இசை பற்றி அந்தக்கால யுவன்/யுவதிகள் சிலாகித்துப்பேசுவது போல , 1990களிலிருந்து இப்போதைய 2010 வரையிலான இசை பற்றி இக்கால இளைஞர்கள் பேசுகிறார்களா..? இந்தக்காலகட்டத்திய இசை அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கிறதா,,? எண்பதுகளில் கோலோச்சிய இளையராஜாவையும் , கூடவே பயணித்த சக இசைக்கலைஞர்களின் இசையையும் வாழ்வோடு இணைத்துப்பார்த்த பார்வை இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கிறதா..? கேள்விக்கான விடையை கடைசியில் பார்க்கலாம்,..ஹ்ஹ…இல்ல கேட்கலாம். எனக்குத்தெரிந்து ரஹ்மானையும் ,யுவனையும் சிலாகித்து வெகு சிலரே இடுகைகள் இடுவதையும், அவர்கள் […]


 • பில்லா -2 இருத்தலியல்

  அடக்க நினைக்கும் கூட்டத்திலிருந்து தப்பித்து அகதியாக ஒதுங்கும் ஒரு மனிதனின் கதை.”அங்கருக்கப்பவே நீ ஒழுங்கா இருந்ததில்ல, இப்பவும் அப்டியே தான் இருக்கியாடா”ன்னு அக்கா கேட்கிறார்.தவறி விழுந்த துப்பாக்கியை தடவி எடுத்து அஜித் தன் பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது. சீண்டப்படுதல்,ஒதுக்கிவைத்தல், மிருகம் போல நடத்தப்படுதல், முழுக்க அங்கீகாரம் கிடைக்கவிடாது தள்ளிவைத்திருத்தல், தாம் நினைத்த அமைதி வாழ்க்கையை, எல்லோரும் போல வாழ நினைப்பவனை வாழ விடாது தடுத்தல், இதெல்லாம் தொடர்ந்தும் நடந்தால் ஒருவன் என்ன தான் செய்வான் ? இதற்கும் […]


 • எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்

  எனக்கும் சும்மா இருக்கவே விருப்பம்

  அணுஉலைகள் வெடித்துச்சிதறினால் அனைத்து உயிரினமும் பூண்டோடழியும் என்ற எச்சரிக்கையை கருத்திலெடுத்துக்கொள்ளாமல், ஞெகிழிப்பைகள் பூமியை மலடாக்கும் என்ற அறிவியல் உண்மையை கண்டுகொள்ளாமல், சிட்டுக்குருவிகள் அருகி வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல், நிலத்தடி நீர் வற்றி, பூமி முழுதும் பாலைவனமாக மாறிவருகிறது என்பது பற்றிக்கவலை கொள்ளாமல், பவளப்பாறைகள் கூண்டோடு அழிக்கப்படுகிறது என்று அறிந்துகொள்ளாமல், அருகி வரும் மொழிகளுள் நமதும் ஒன்று என்றுணராமல், நாளொன்றிற்கு நான்கு பறவையினங்கள் இவ்வுலகிலிருந்து மறைந்துபோகின்றன என்றுணராமல், அனைவர்க்கும் சும்மா இருக்கவே விருப்பம் நமது கலைகள் அழிந்து வருகின்றன […]


 • நிலைத்தகவல்

  நிலைத்தகவல்

  கூச்சல்களும் எதிர்ப்புகளும் நிலைத்தகவல்களிலேயே முடிந்துவிடுகிறது ஆதரவுகளும் அரவணைப்புகளும் ஒருசில லைக்குகளோடு முடிந்துவிடுகிறது பெண்ணியமும் ஆணியமும் ஆங்கில விசைப்பலகையின் விசை கொண்டு தமிழுருவில் எழுதப்பட்ட வலைப்பதிவோடு முடிந்துவிடுகிறது அவலங்களும் அராஜகங்களும் பின்னூட்டங்களிலும் எதிர்வினைகளிலுமே தீர்ந்து விடுகிறது எனக்கென்னவாயிற்று, ஒரு கையில் கோப்பைத்தேநீருடன் நானெழுதிய இந்தக்கவிதை(?) பிரபல வாரப்பத்திரிக்கையில் வெளிவந்தால் மட்டும் எனக்குப் போதுமென்றாகிவிட்டது. – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)


 • பில்லா 2 இசை விமர்சனம்

  பில்லா 2 இசை விமர்சனம்

  முழுக்கப்புதிதாகவும் , முன்னெப்போதும் கேட்டிராத இசைக்கோவைகளுடனும் களமிறங்கியிருக்கிறார் யுவன் இந்த பில்லா-2வுக்கென. முதலிலேயே சொல்லிவிடுகிறேன் பாடல்கள் முழுக்க இளைஞர்களை கவரவைக்க வேணுமென்ற முயற்சியிலேயே பின்னப்பட்டிருக்கிறது.இதுவரை கேட்டிராததாக இருக்க வேணுமென்ற முயற்சியில் ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறார் யுவன். அதே முயற்சி பின்னணி இசையிலும் இருக்கும் என்றே நம்புவோம். பில்லா-1 ல் அவருக்கு சில அழுத்தங்கள் இருந்ததென்பது உண்மைதான். ரஜினி பாடியவற்றை மீளக்கொண்டு வந்தே ஆகவேண்டுமென்று , படமே ரீமேக் என்பதால் , இருப்பினும் தீம் ம்யூஸிக்கில் கலக்கியிருந்தார்.அதில் பாடல்கள் அனைத்தும் […]


 • நீர் சொட்டும் கவிதை

  நீர் சொட்டும் கவிதை

  நனைந்துவிட்ட கவிதைப்புத்தகத்திலிருந்து நீர் மட்டுமே தாரை தாரையாகச் சொட்டிக்கொண்டிருந்தது சொட்டிய நீர் சிறுகுளமாகித் தேங்கிவிட அதில் திடீரென அன்னப்பறவைகள் நீந்தத்தொடங்கின எங்கிருந்து வந்திருக்கக்கூடுமென்று நினைத்த பொழுதில் அவை என்னைப்பார்த்து அகவின அவற்றின் குரல்களில் வெளிப்பட்டவை யாவும் கவிதைகளாகவே இருந்தன. புத்தகத்தை கையிலெடுத்து உலரச்செய்து நோக்கும்போது அதில் நான்காம் பக்கத்தில் இருந்த அன்னப்பறவைகளும் அவற்றோடிருந்த கவிதைகளும் கரைந்து போயிருந்தன. – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)


 • என்னவென்று அழைப்பது ?

  என்னவென்று அழைப்பது ?

  எழுதியவன் தமது குறைகள் எதையும் சொல்ல விழையாத நாட்குறிப்பு போல உன் பேச்சு இன்று செயற்கையாக இருக்கிறது பலநாட்கள் தூசி படிந்து திடீரெனப்பெய்த மழையில் கழுவிவிடப்பட்ட இலைகள் போல உன் பேச்சு இன்று இயற்கையாக இருக்கிறது. நாட்குறிப்பின் பக்கங்கள் போலிருக்கும் இலைகளை அந்த மரம் உதிர்த்து விடும் பொழுது உன்னிலையை என்னவென்று அழைப்பது ? – சின்னப்பய


 • காதலில் கதைப்பது எப்படி ?!

  காதலில் கதைப்பது எப்படி ?!

  படத்துல வர்ற ஒவ்வொருத்தரும் ஆயிரம் பக்கம் வசனம் பேசறது தான் செமசொதப்பலா இருக்கு,ஒரு வேள ஜெயமோகன் தான் வசனம் எழுதுனாரோ படத்துக்கு..?  இத எழுதினவுடனே என்னால சிரிப்ப அடக்கவேமுடியல, கொஞ்சம் இருங்க , அடுத்த பாராவுக்கு கொஞ்ச நேரம் ஆகும் எனக்கு வர்றதுக்கு.. :-) அமலா பாலின் முடிக்கற்றைகள் முன் நெற்றியில் கண்களை மறைத்துக்கொண்டு எப்போதும் விழுந்து கிடந்தாலும் அவர் சித்தார்த்தை சீரியஸாக பார்த்து லவ் பண்ணத்தான் செய்கிறார். ஒரு இடத்துல கூட தன்னோட முடிக்கற்றைகளை […]


 • கவிதை

  கவிதை

  எச்சத்தாற்காணப்படும் உட்கார உறங்க களிக்க இசை பாட கூடு கட்ட முட்டையிட்டு குஞ்சு பொரிக்க உணவுகொடுத்து பசியாற்றிய மரம், விழுங்கிய பழத்தின் விதையை பிறிதொரு இடத்தில் எச்சம் வழி ஊன்றச்செய்த பறவை. —————- உருப்படியான கவிதை சலவைக்குச்சென்று திரும்பிய துணிகளில் போடாத என் உருப்படியைத்தேடுவது போல இதழ்களுக்கு அனுப்பாத என் கவிதைகளை அதன் பக்கங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன். — சின்னப்பயல் (chinnappayal@gmail.com)