Articles Posted by the Author:

 • ஒன்றுகூடல்

  ஒன்றுகூடல்

                                   சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ” டைகர் ஏர்வேஸ் ” விமானம் இரவு பத்து மணிக்கு புறப்பட்டது. மனைவியும் நானும் ஹைதராபாத் செல்கிறோம். எங்களைப்போல் இன்னும் முப்பது ஜோடிகள் உலகின் பல நாடுகளிலிருந்து புறப்பட்டுள்ளனர் – ஹைதராபாத் நோக்கி. அவர்கள் என்னுடைய மருத்துவக் கல்லூரியின் வகுப்புத் தோழர்களும் தோழியருமே. ஆச்சரியமாக உள்ளதா? நாங்கள் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் 1965 ஆம் வருடம் முதலாம் வருட எம். பி. பி . எஸ். வகுப்பில் […]


 • மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism

  மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidism

                                           தைராய்டு சுரப்பியை தமிழில் கேடயச் சுரப்பி என்று மொழிபெயர்த்துள்ளனர். நமது உடலிலுள்ள நாளமற்ற சுரப்பிகளில் இது மிகவும் முக்கியமானது. இது கழுத்தின் இரு பகுதிகளிலும் ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்தது. சாதாரணமாக பார்த்தால் இது தெரியாது. வீக்கமுற்றால் நன்கு தெரியும். இதிலிருந்துதான் தைராக்சின் ( Thyroxin ) என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் நமது செல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தன்மைமிக்கது. அதை Metabolism அல்லது வளர்சிதை மாற்றம் என்று கூறுகிறோம். ஆகவே உடலின் செல்கள் […]


 • மருத்துவக் கட்டுரை        கிள்ளிய நரம்பு

  மருத்துவக் கட்டுரை கிள்ளிய நரம்பு

                                                          Pinched Nerve                                                                         எந்த நரம்பும் அழுத்தத்திற்கு உட்பட்டால் அதன் செயல்பாடு பாதிப்புக்கு உள்ளாகி, வலியும், மதமதப்பும், தசைகளின் பலவீனமும் உண்டாகும். இதைத்தான் நாம் பொதுவாக நரம்பு தளர்ச்சி என்கிறோம் . இந்த அழுத்தத்தை நரம்பு கிள்ளப்படுவதாக ( pinching ) வேறு விதத்தில் கூறப்படுகிறது. இவ்வாறு நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாவது, அல்லது கிள்ளப்படுவது பல்வேறு காரணங்களால் உண்டாகலாம். கர்ப்பம், காயம், திரும்ப திரும்ப தொடர்ந்து செய்யும் செயல், மூட்டு நோய் போன்றவை […]


 • காரணமில்லா அச்சவுணர்வு PHOBIA

  காரணமில்லா அச்சவுணர்வு PHOBIA

  டாக்டர் ஜி ஜான்சன் ஃபோபியா ( Phobia ) என்பதை காரணமில்லா அச்சவுணர்வு, அச்ச நோய் மருட்சி, மருளியம் என்று தமிழில் கூறுவோர் உளர். பெரும்பாலும் இது நோய் தன்மையுடைய அச்சக்கோளாறு அல்லது வெறுப்புக்கோளாறாக இருக்கலாம். ஃபோபியா என்பது கிரேக்கச் சொல்லான ஃபோபோஸ் ( phobos ) என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் அச்சம் அல்லது தப்பித்து ஓடுவது ( fear or flight ). ஃபோபியா என்பது அறிவுப்பூர்வமற்ற, செயலிழக்கச் செய்யவல்ல அச்சத்தால் வலுக்கட்டாயமாக சில […]


 • நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்

  டாக்டர் ஜான்சன் நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர். இது சிதம்பரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஊரைச் சுற்றிலும் நெல் வயல்கள் கொண்டது. வீராணம் ஏரி மேற்கில் இருந்தது. அதிலிருந்து இராஜன் வாய்க்கால் மூலமாக விவசாயத்துக்கு நீர் வரும். ஊரில் மாதா கோவிலும் பள்ளியும் உள்ளது. அதில்தான் நான் துவக்கக் கல்வி பயின்றேன். அதன்பின் நான் சிங்கப்பூர் சென்றுவிட்டேன். ஆதலால் எனக்கு தெரிந்த கிராமம் அதுதான். அதன்பின் பத்து வருடங்கள் கழித்து நான் மீண்டும் தமிழகம் […]


 • கவுட் Gout மூட்டு நோய்

              கவுட் என்பது வினோதமான ஒருவகை எலும்பு நோய். இதற்கு ஒரு சொல்லில் தமிழில் பெயர் இல்லை. ஆகவே கவுட் என்றே அழைப்பது சுலபம். இதை மூட்டு வீக்கம் என்றும் கூறலாம்.           மூட்டுகளிலும் , காதுகளிலும், வேறிடங்களிலும் உள்ள குருத்தெலும்புகளில் சோடியம் பையூரேட் படிந்து ஏற்படும் ஒருவகை வளர்சிதை மாற்றக் கோளாறு கவுட். இதனால் கால் கட்டை விரல், கணுக்கால், முழங்கால் மூட்டுகள் வீங்கி கடும் வலி உண்டாகிறது இந்த வீக்கமும் வலியும் எந்தவிதமான முன் […]


 • தமனித் தடிப்பு – Atherosclerosis

            . மாரடைப்புக்கு அடிப்படைக் காரணம் இருதய தசைக்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் தடை படுவது. இதை உண்டாக்குவது இரத்தக்குழாய்க்குள் கொழுப்பு படிவது. இப்படி தொடர்ந்து படிந்தால் அந்த இரத்தக்குழாய் தடித்துவிடும். இதை தமனித் தடிப்பு என்பர். ஆங்கிலத்தில் இதை Atherosclerosis என்று அழைக்கிறோம். தமனித் தடிப்பு என்பது தமனிகளின் ஊட்சுவர்கள் நீண்ட கால அழற்சியின் காரணமாக வழவழப்பை இழந்து சொரசொரப்பாகி வடிவிழந்து, தழும்பு உண்டாகி தடித்துப்போவதாகும். இத்தகைய அழற்சியை உண்டுபண்ணுவது கொழுப்பு படிதல். தமனி […]


 • பம்ப்

                                 நான் சுமார் பதினைந்து வருடங்களாக மலேசியாவின் முன்னணி தமிழ்ப் பத்திரிக்கையான ” தமிழ் நேசன் ” ஞாயிறு மலர்களில் ” மருத்துவ கேள்வி பதில் ” பகுதி எழுதிவருகிறேன். இது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. வாசகர்கள் கேட்கும் சிக்கலான சில கேள்விகளுக்கு சரியான பதில் தர மருத்துவ நூல்களைப் புரட்டுவதும், தெரிந்த மருத்துவ நிபுணர்களை நாடுவதும் மனதுக்கு இதமானது. நான் மருத்துவம் படித்தது 1965 முதல் 1971 வரை இந்த 32 வருட இடைவெளியில் மருத்துவம் […]


 • காசேதான் கடவுளடா

  காசேதான் கடவுளடா

                               பல வருடங்களுக்கு முன்பு நான் ஹவாய்யி ( Hawaii ) என்ற ஒரு அருமையான ஆங்கில நாவல் படித்தேன். பெஸிஃபிக் மகா சமுத்திரத்தில் உள்ள அந்த பீஜித் தீவுகளில் ( Fiji Islands )ஆங்கிலேயர்கள் காடுகளை அழித்து கரும்புத் தோட்டங்கள் நிறுவிய காலனித்துவ காலத்தின் பின்னணியில் அது எழுதப்பட்டிருந்தது. அப்போது அந்தத் தோட்டங்களில் வேலை செய்ய தென் சீனாவிலிருந்து சீனர்கள் கொண்டுவரப்பட்டனர் அந்த சீனர்களைப் பற்றி எழுதியுள்ள நாவல் ஆசிரியர், அவர்களிடம் ஊறிப்போன மூன்று குணாதிசயங்களைக் […]


 • ஓட்டை

  ஓட்டை

                                                           டாக்டர் ஜி. ஜான்சன்           அப்போது என் வயது ஆறு. எங்கள் கிராமத்துப் பள்ளியில் பயின்று வந்தேன். அது ஆரோக்கியநாதர் ஆலயம். அதில்தான் பள்ளியும் நடந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஆலய ஆராதனை நடைபெறும். தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் ஆரம்ப காலத்தில் தரங்கம்பாடியிலிருந்து இங்கு வந்த ஜெர்மன் நாட்டு இறைப்பணியாளர்களால் ( Missionaries ) கட்டப்பட்டது இந்த ஆலயமும் பள்ளியும். அது கிறிஸ்துவப் பள்ளியாக இருந்தாலும் பெரும்பாலான பிள்ளைகள் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இந்து பிள்ளைகளே […]