ஜோதிர்லதா கிரிஜா எழுத்துலகத்து விடிவெள்ளி யொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளி லிருந்து.புலனாகும். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். ஒரு முறை அவர் எனக்கு எழுதினார் – ’அந்நோய் உல்கம் முழுவதும் பரவி இருப்பதற்கு ஆண்மக்களே காரணம்’ என்று. .’அந்நோயினால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை […]
ஜோதிர்லதா கிரிஜா விரட்டி விரட்டித் தன்னைக் காதலித்த ஓர் இளைஞனை ஒரு பெண் மறுதலித்தாள். அதன் பிறகும் அவன் தொல்லை தாங்க முடியாத எல்லையைத் தொட்டதால் தன் தந்தையிடம் அவனைப்பற்றி அவள் கூற நேர்ந்தது. அவள் அப்பா அவனை எச்சரித்த பிறகும் அவனுடைய தொந்தரவு தொடரவே, காவல் துறையினரிடம் அவனைப் பற்றி அவள் தந்தை புகார் கொடுக்கும்படி ஆயிற்று. காவல்துறை அதிகாரி அவனை யழைத்து எச்சரித்த பிறகு, அவனது நச்சரிப்பு அப்போதைக்கு நின்று […]
ஜோதிர்லதா கிரிஜா திண்ணையில் ஜெயஸ்ரீ ஷங்கரின் கடிதத்தை இன்று படித்தேன். (கடந்த ஒரு வாரமாய்த் திண்ணை படிக்கக் கிடைக்கவில்லை.) ரொம்பவும் குமுறாமல் அடக்கி வாசித்திருக்கும் அவரது பண்பு போற்றுதற்குரியது. எனக்கும் இது போன்று ஓர் அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அது ஒரு விந்தையான – நம்பவே முடியாத – அனுபவம் ஆகும். பல்லாண்டுகளுக்கு முன்னால், ஒரு பிரபல வார இதழ் குட்டிக்கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்று ஓர் அறிவிப்பை விடுத்தது. “இங்கிலீஷ் […]