Articles Posted by the Author:

 • நீங்காத நினைவுகள்	–	2

  நீங்காத நினைவுகள் – 2

  இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் எழுத்தாளர் சுந்தா அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப் பட்ட்து. இந்தக் கொண்டாட்ட்த்துக்கு ஏற்பாடு செய்திருந்த்து கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை. பேராசிரியர் கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பொன்னியின் புதல்வர் எனும் தலைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னால் எழுதிய ஆசிரியர் சுந்தா என்பது இதற்கு ஒரு கூடுதல் காரணமாகும். இவ்விழாவுக்குச் செல்லா விட்டாலும், அது பற்றிய சேதிகளை அறிந்து மகிழ்ந்ததற்குக் காரணம் சுந்தாவை நான் சந்தித்து அளவளாவியுள்ளதுதான். அந்தச் சந்திப்பின் போது அவருடைய மேன்மைகளைப் புரிந்துகொள்ள […]


 • குருக்ஷேத்திரக் குடும்பங்கள்  –    9

  குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 9

  கொஞ்சங்கூட நினைத்தே பார்த்திராத அதிர்ச்சியால் தாக்கப்பட்டு, கிட்டத்தட்ட உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த ராதிகாவுக்குத் தான் எப்படித்தான் சுருண்டு கீழே விழாமல் சமாளித்துத் தெருவில் நடந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாளோ என்று வியப்பாக இருந்தது. அவள் வந்து சேர்ந்த நேரத்தில் தனலட்சுமி வீட்டில் இல்லை.   பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டுக் கோவிலுக்குப் போயிருந்தாள்.  அவ்விட்டுச் சிறுமி அவளுக்காக காத்திருந்து சாவியை அவளிடம் கொடுத்துவிட்டுப் போனதும் கதவு திறந்துகொண்டு உள்ளே போன அவள் தன்னறைக்குள் நுழைந்ததும், கட்டிலில் கைப்பையையும் புத்தகங்களையும் […]


 • குருக்ஷேத்திரக் குடும்பங்கள்   8

  குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 8

  ஜோதிர்லதா கிரிஜா 8. தயாவின் அலுவலகத் தோழி ரமாதான் வந்துகொண்டிருந்தாள். அடிக்கடி வந்துபோகிற வழக்கம் உள்ளவளாதலால், ஈசுவரனும் ரேவதியும் அவளை வரவேற்ற பின் தத்தம் அலுவலைப் பார்க்கப் பிரிந்தனர். ……“வாடி, வா” ”பக்கத்துத் தெருவுக்கு வந்தேனா? அப்படியே இங்கேயும் தலையைக் காட்டலாம்ன?ு? வந்தேன். . .ஆமா? ஏண்டி, மூஞ்சியெல்லாம் ஒரு மாதிரி இருக்கு? அழுத மாதிரி?” தயா பதில் சொல்லாதிருந்தாள். ரமா,மெதுவாக, “எனக்கு எல்லாம் தெரியும்டி, தயா. சங்கரன் சொன்னார். ஆனா, தெரியாத மாதிரி உங்கம்மா அப்பா […]


 • குருஷேத்திர குடும்பங்கள் 6

  குருஷேத்திர குடும்பங்கள் 6

  6 சீனுவிடம் சங்கரனுக்குக் கடிதம் கொடுத்து அனுப்பிய பிறகுதான் தயாவின் மனத்தில் சற்று நிம்மதி ஏற்பட்டது. சங்கரனால் என்ன செய்ய முடியப்போகிறது எனும் ஆயாசம் அவளுக்கு இருந்தாலும். முக்கியமான நபருடன் – அவருக்கும் தொடர்புள்ள – தனது பிரச்சினையைப் பகிர்ந்து கொண்ட நிம்மதிதான் அது என்பது அவளுக்குப் புரியாமல் இல்லை. சீனு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீட்டினுள் நுழைந்த போதே, “ என்னடா,  இந்த வெயில்ல ஊர் சுத்தப் போயிட்டே? சொல்லாம கொள்ளாம பிசுக்னு நகந்துட்டே?எங்க போயிட்டு வறே?” என்கிற […]


 • குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5

  குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5

  5. ”உள்ளூர்ல இருந்துக்கிட்டே பொண்டாட்டியைஏமாத்துறவங்க எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகமாயிட்டிருக்கு! ஃபாரீன் மாப்பிள்ளை யெல்லாம் எனக்கு வேணவே வேணாம்ப்பா, எனக்கு. அங்கேயே எவளையானும் வச்சிருப்பான் அவன்!”என்று ராதிகா வாரியிறைத்த சொற்களின் கடுமையால் தாக்குண்டு அந்த நால்வரும் சில நொடிகளுக்கு திகைப்புற்று வாயிழந்து போனார்கள். அவளால் பழிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இருவரும் என்கிற முறையில் தீனதயாளனும் பூரங்கமும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டபின் விழிகளின் சந்திப்பைத் தவிர்த்துக்கொண்டார்கள். பெண்மணிகள் இருவரும் அப்படியே அதிர்ந்து போனார்கள். மேற்கொண்டு சில கணங்களுக்கு […]


 • குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4

  குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 4

  ஜோதிர்லதா கிரிஜா 4. வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த தரணிபதிக்குத் தாங்கள் பேசப் போவது காதில் விழாத தொலைவுக்குப் போன பிறகு, “ஒரு நிமிஷம் இருப்பா. நான்  உங்க அக்கா லெட்டரைப் படிச்சுட்றேன்,” என்ற சங்கரன் தெரு ஓரத்தில், தன் வீட்டுக்கு முதுகு காட்டியபடி, அந்த உறையைப் பிரித்துப் படித்தான்.   “சங்கர்! ரொம்ப அவசரம். அதனால்தான் கடிதம் கொடுத்து அனுப்புகிறேன். இன்று மாலை என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். ஏதாவது செய்யுங்கள், ப்ளீஸ். இது மாதிரி எங்கள் வீட்டில் திடீரென்று செய்வார்கள் […]


 • குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3

  குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 3

      ராதிகா எதுவுமே சொல்லாமல் முகததைத் திருப்பிக்கொண்டு விருட்டென்று நகர்ந்ததும், விடுவிடுவென்று தன்னறையை நோக்கி நகர்ந்ததும் தனலட்சுமிக்கும் தீனதயாளனுக்கும் அளவற்ற திகைப்பை அளித்தன.  இருவரும் ஒருவரை யொருவர் விழி மலர்த்திப் பார்த்துக்கொண்டார்கள்.  இவளுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு?’என்கிற கேள்விதான் இருவர் பார்வைகளிலும் குதித்துக்கொண்டிருந்தது.       அடுத்து ராதிகா செய்தது இருவருள்ளும் சற்றே திகிலைக் கிளர்த்தியது.  அறைக் கதவைப் படீரென்று அறைந்து சாத்தியதும், சாத்தியதில் காட்டிய விரைவும், உடனே தாழ்ப்பாளையும் போட்டுக்கொண்டதும் இருவர் புருவங்களையும் உயர்த்தின.   […]


 • குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2

  குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2

  என்னடா, சங்கர்! என்ன யோசனை? உங்கப்பா கூப்பிட்றார், பார்!” கண்ணாடியை முகத்துக்கு எதிரே பிடித்துத் தலை வாரிக்கொண்டிருந்த சங்கரன் திடுக்கிட்டவன் போலத் தலை திருப்பித் தாயைப் பார்த்தான். “ஏதோ ஆ·பீŠ வி„யமா ஒரு பிரச்னை பத்தி யோசிச்சிண்டிருந்தேம்மா. அதான் காதுல விழல்லே. இதோ போய் என்னன்னு கேக்கறேன்.” கண்ணாடியைச் சுவரில் மாட்டிவிட்டு, சங்கரன் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த அப்பாவுக்கு முன்னால் போய் நின்று, “என்னப்பா? கூப்பிட்டேளா?” என்றான். “ஆமாண்டா. நேத்து ராத்திரி நீ லேட்டா வந்ததனால உங்கிட்ட பேச முடி யல்லை. நேத்து […]


 • குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1

  குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 1

          ”என்னடி யோசனை? இன்னும் கொஞ்சம் கறி போடட்டுமான்னு ரெண்டு வாட்டி கேட்டுட்டேன். பதில் சொல்லாம பெசஞ்ச சோத்தையே திரும்பத் திரும்பப் பெசஞ்டுக்கிட்டுக் கெடக்குறியே? காலேஜ்ல என்ன நடந்திச்சு?”       தனலட்சுமியின் குரல் மிக இரைந்து ஒலித்த பிறகுதான் ராதிகாவின் எண்ணங்கள் கலைந்தன.  அவள், ஒரு திடுக்கிடலுடன் தலையைக் குலுக்கியபடி, “லேசாத் தலை வலிக்குதும்மா.  வேற ஒண்ணுமில்லே. என்று கூறிவிட்டு, “கொஞ்சமாப் போடுங்கம்மா,” என்றாள்.   தலையை இடக்கையால் பற்றியவாறு. மகள் சொன்னது […]


 • மலர்மன்னன் – மறைவு 9.2.2013

    ஜோதிர்லதா கிரிஜா எழுத்துலகத்து விடிவெள்ளி யொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளி லிருந்து.புலனாகும்.  எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். ஒரு முறை அவர் எனக்கு எழுதினார் – ’அந்நோய் உல்கம் முழுவதும் பரவி இருப்பதற்கு ஆண்மக்களே காரணம்’ என்று.  .’அந்நோயினால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை […]