“சாகித்தியா… நீ ஒண்டுக்கும் யோசியாதை. எல்லாம் நல்லபடியா நடக்கும்.நான் ஒருக்கா ரெலிபோன் பூத் வரைக்கும் போட்டு வாறன்.” படுக்கையில்இருந்த என்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள் பமீலா. கண்ணீரைத் தன்கைகளினால் துடைத்துவிட்டாள். இரவு முழுவதும் நான் உறங்கவில்லைஎன்பதை அவள் அறிவாள்.“இண்டைக்கு கனடாக் கோல் வருமெண்டு ராஜன் அண்ணா சொன்னவரா?”“ஓம் சாகித்தியா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை வந்து சொல்லிட்டுப்போனவர். நான் மாத்திரம் போய்க் கதைச்சிட்டு வாறேன்.”நான் சென்றால் அழுது ஒப்பாரி வைப்பேன் என்பதால், என்னைக் கூட்டிச்செல்வதைத் தவிர்த்தாள் பமீலா. அவள் […]
கே.எஸ்.சுதாகர் மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில்பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப்பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில்பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல்,தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணிசஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.பறவைகள்’ என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன. பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் […]
திரு ஜெயராமசர்மா அவர்களின் கற்பகதரு’ நூலைப் படிக்கத் தொடங்கியவுடன், எனக்கு சிறுவயதில் பள்ளியில் ஆசிரியர் சொல்லித் தந்தநட்டாயிரம்,பட்டாயிரம்’ என்ற சொற்பதம் ஞாபகத்திற்கு வந்தது. பனை இருந்தாலும் நீண்டகாலம் பயன் கொடுக்கும், வெட்டியபின்னும் பல்வேறு பொருட்களாக நீண்டகாலம் பயன் கொடுக்கும் என்பதை நட்டாயிரம் வருடம் நானிலத்தில் காய்த்து நிற்கும் பட்டாயிரம் வருடம் பாழ்போகா’ என்பார்கள். பனையைப் பற்றிப் பலரும் எழுதிய புத்தகங்கள் – தரவுகள் சார்ந்ததாகவும், ஆராய்ச்சி நிமிர்த்தமும், பிரச்சார நோக்கிலும் அமைந்தவை. திரு.ஜெயராமசர்மா அவர்கள் எழுதியகற்பகதரு’ என்றஇந்தப் […]
கே.எஸ்.சுதாகர் சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது. சூரியகுமாரின் அக்காவும் அத்தானும் மகள் ஆரபியும் நான்கு நாட்கள் முன்பதாகவே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அக்கா தான் வீட்டிற்கு மூத்தவள். அதற்கடுத்து வரிசைக்கிரமமாக ஐந்து ஆண்கள். சூரியகுமார் கடைக்குட்டி. அப்பா துரை சாய்வனைக்கதிரைக்குள் ஒருக்களித்துச் சரிந்தபடி எல்லாவற்றையும் அவதானித்தபடி இருக்கின்றார். அவரால் முன்னையைப்போல ஓடியாடி வேலைகள் செய்ய முடிவதில்லை. அவர் தனது மகளுக்கும், மூத்த மருமகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து […]