author

ஜெயம் சீத்தா ராமா

  பல நேரங்களுல எங்கூட்டு சாப்பாட்டுல பங்குக்கு வர்ற ஒரு சாமியாருதான் நம்ம கதா நாயகரு. சாமியாருன்னா நம்ம அக்னி பிரவேசம் கதைல வர பரமஹம்சா மாரியான சாமி யாரோ இல்லாட்டி அப்போ அப்போ பேப்பருங்களுலையும் டீவிங்களுலியும் பெருமையா வந்து என்னப் பாரு என்னோட மொகரக்கட்டையப் பாருன்னு  காட்டிக்கிற சாமியாருங்க மாரியோ  அப்படியும் இல்லன்னா  பராசக்தி படத்துல வர்ற பூசாரிமாரியோ  அவுரு இல்லங்கிறதமட்டும் மொதலுலியே சொல்லிப்புடறேன். அவுரோட ஸ்பெஷாலிட்டியே ஒரு நாளைக்கி ஒரு வேளைக்கி ஒரு ஊட்ட […]

தேவலரி பூவாச காலம்

This entry is part 20 of 33 in the series 19 மே 2013

அந்த பாட்டுச் சத்தம் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது மார்கழிப் பனியைப் போல சுகமாக மனசென்னும் காதுக்குள். ”கிய்யா கிய்யாடா! ஒரு குருவி கொண்டாடா. என்ன குருவிடா? அது மஞ்ச குருவிடா! அது எப்படி கத்துமுடா? கீக்கா, கீக்கா, கீக்கா…” என்றோ _ அப்படியும் இல்லன்னா அந்தக் குருவிப் பாட்டுக்கு பதிலா ”என்ன அழகு இந்தப் பூ? கண்ணைக் கவருது வண்ணப்பூ! சின்னச் சின்ன ரோஜாப் பூவே நீ அக்கா பூ நான் தொடுவேன் வாடாதே. வெள்ளை வெள்ளை மல்லிகைப் […]

தொலை குரல் தோழமை

This entry is part 44 of 44 in the series 30 அக்டோபர் 2011

குழல்வேந்தன் இது கனவா? இல்லை நனவா? வெற்று பிரமைதானா? அசரீரியின் ஆளுமைப்பெருங்குரலா? விண்ணகதேவதையின் அழைப்பொலியா?     விடை தெரியா கேள்விகளே இவனைத் திக்குமுக்காடச்செய்தன பாவம்.  அழைத்த குரல் குழைவில் அவனது உள்ளமும் உடல் தானும் ஒரு நாளும் அனுபவிக்காததொரு புத்துணர்ச்சியையும் புளகாங்கிதத் தையும்  அடைந்ததென்றால் அதற்கானதொரு காரணமும் இல்லாமல் இல்லை.   ஆம்! அந்தஅனுபவம்! அது அப்படித்தான் இருந்தது.  இவனுக்குள்  (இன் னும் ஓரிரண்டு நாட்களில் நெடுந்துயில் கொண்டுவிடப் போகி றோம்) ”இனி நம் குஞ்சு குழுவான்களின் கதி, வாழ்க்கைத் துணைவியின் […]