author

சொல்லவேண்டிய சில

This entry is part 5 of 21 in the series 27 ஜூன் 2016

  இப்படிச் சொன்னால் ‘தலைக்கனம்’ என்று பகுக்கப்படலாம். ஆனால் இந்த உணர்வு உண்மையானது. ஒரு அற்புதமான எழுத்தாளரை மொழிபெயர்த்த பிறகு, அல்லது ஒரு நல்ல படைப்பை எழுதி முடித்த பிறகு அதற்கென பரிசு பெறுவது என்பது எனக்கும் எனக்கும் அல்லது எனக்கும் நான் மொழிபெயர்த்த மேதைக்கும் இடையேயான தேவையற்ற குறுக்கீடாகவே தோன்றுகிறது. தாஸ்தாவ்ஸ்கியை மொழிபெயர்க்கக் கிடைத்ததே ஆன பெறும் பேறு என்கையில் அதற்கு ஒரு பரிசை தாஸ்தாவ்ஸ்கியை அறிந்த அறியாத, அறைகுறையாக அறிந்த அல்லது அவர் பெயரை […]

மீனாட்சி கோபாலகிருஷ்ணனின் மின்னும் கைவண்ணங்கள்!

This entry is part 8 of 21 in the series 27 ஜூன் 2016

இளம் வயதிலேயே வேலைக்குச் செல்ல ஆரம்பித்து 40 வருடங்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஸ்டெனோகிராஃபராக, செக்ரடரியாகப் பணிபுரிந்துவந்தவர் திருமதி மீனாட்சி கோபாலகிருஷ்ணன். எந்த வேலையைச் செய்தாலும் அதில் 100% அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் ஈடுபடுவது அவர் இயல்பு. இரண்டு வருட்னக்களுக்கு முன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு என்றால் இளைப்பாறுவதும், உறங்குவதும் இல்லை. மனதுக்குப் பிடித்த வேறு வேலைகளில் ஈடுபடுவது என்கிறார் மீனாட்சி. பெங்களூரிலுள்ள தன் தங்கை லட்சுமி ஆர்வத்தோடு ஈடுபடும் கைவேலைகளைப் பார்த்து அவற்றில் ஆர்வம் கொண்டார். […]

நேர்ப்பக்கம் – அழகியசிங்கரின் கட்டுரைத்தொகுதி

This entry is part 11 of 16 in the series 21 பெப்ருவரி 2016

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ‘நவீன விருட்சம்’ என்ற சிற்ரிதழை நடத்திக்கொண்டுவருபவர் எழுத்தாளர் அழகியசிங்கர். ( இயற்பெயர் சந்திரமௌளி) முதலில் விருட்சம் என்ற பெயரில் மாத இதழாக வெளிவந்தது பின்னர் நவீன விருட்சம் என்ற பெயரில் காலாண்டிதழாக வரத் தொடங்கியது. இதன் இணையதளமும் இப்போது தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களின் குறும்பேட்டிகளை காணொளி வடிவில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகிறார். மேலும், ’விருட்சம் வெளியீடு’ சார்பில் கணிசமான எண்ணிக்கையில் சக எழுத்தாளர்களின் படைப்பாக் கங்களைத் தொடர்ச்சியாக நூல் வடிவில் […]

பிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும், இயக்குவிசைகளும்

This entry is part 9 of 18 in the series 14 பெப்ருவரி 2016

லதா ராமகிருஷ்ணன்   [*எனது ’வரிகளின் கருணை’ என்ற தலைப்பிட்ட, நவீன தமிழ்க்கவிஞர்களை முன்வைத்து எழுதப்பட்ட 19 கட்டுரைகளைக் கொண்ட நூலில் ( வெளியீடு: சந்தியா பதிப்பகம், முதல் பதிப்பு ஆகஸ்ட் 2005) இடம்பெற்று கட்டுரை இது.]   *இக்கட்டுரை புதிய நம்பிக்கை (1997), கணையாழி ஆகிய இதழ்களில் வெளியான பிரம்மராஜன் கவித்துவம் பற்றிய எனது கட்டுரைகள், பிரம்மராஜன் பற்றி ‘பொருநை இந்தியா’ அமைப்பு நடத்திய ஒருநாள் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட என் கட்டுரை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் உருவானது. […]

சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா

This entry is part 12 of 16 in the series 17 ஜனவரி 2016

எழுத்தாளரும், கலை, இலக்கிய விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான சி.மோகனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான “விளக்கு விருது’ வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு சார்பில் புதுமைப்பித்தன் நினைவாக ஆண்டுதோறும் “விளக்கு விருது’ வழங்கப்பட்டு வருகிறது.   “விந்தை கலைஞனின் உருவச் சித்திரம்’ (ஓவியர் ராமானுஜத்தின் வாழ்வை மையமாகக் கொண்ட சிறந்த நாவல்), “தண்ணீர் சிற்பம்’ (கவிதை) “எனக்கு வீடு, நண்பர்களுக்கு அறை’ (கவிதை) உள்ளிட்டவை சி.மோகனின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.  ஓநாய் குலச் சின்னம் என்ற சீன நாவலையும் உலகச் சிறுகதைகள் பலவற்றையும் […]

சிந்தனை ஒன்றுடையாள் ஸம்ஸ்க்ருதம்-தமிழ் பாலம் (தொகுப்பாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்)

This entry is part 14 of 16 in the series 17 ஜனவரி 2016

  வெளியீடு: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் விலை: ரூ 350. தொடர்புக்கு : வர்த்தமானன் பதிப்பகம், சென்னை மின்னஞ்சல் முகவரி: varthashree@gmail.com         நூல் குறித்து     தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம் மொழிகள். இவற்றிடையேயான உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு / நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங் களில் பொதுமையான ஓட்டத்தைக் […]

கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்

This entry is part 3 of 27 in the series 6 செப்டம்பர் 2015

லதா ராமகிருஷ்ணன் கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவில் ஒரு அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் […]

புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்

This entry is part 24 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

லதா ராமகிருஷ்ணன் (புத்தனின் விரல் பற்றிய நகரம், கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்) பலவகையான ’ஆட்கழிப்பு’ உத்திகளைப் பயன்படுத்தி இந்தியாவின் பிற பகுதிகளிலும், கடல் கடந்த நாடுகளிலும் நவீன தமிழின் தனிப்பெருங் கவியாய்த் தங்களை அடையாளங்காட்டிக்கொள்ள அலைக்கழிந்துகொண்டிருக்கும் சிலரைத் தாண்டிய அளவில், தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் கணிசமாகவே உண்டு. சமீபத்தில் தோழமைப் பதிப்பக வெளியிட்டுள்ள கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த […]

பாயும் புதுப்புனல்!

This entry is part 17 of 31 in the series 11 ஜனவரி 2015

                           _ லதா ராமகிருஷ்ணன் 38வது சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆரம்பமாகிவிட்டது! கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக மாற்றிதழ், நவீன இலக்கியம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக முதலில் பன்முகம் என்ற காலாண்டிதழையும் இப்போது புதுப்புனல் என்ற மாத இதழையும் எத்தனையோ இடையூறுகள், பொருளாதார நெருக்கடிக்கு இடையில் தொடர்ந்து நடத்திக்கொண்டுவரும் புதுப்புனல் பதிப்பகத்தார் தோழர் ரவிச்சந்திரன் – சாந்தி தம்பதியர் 152 _ 153 என்ற இரண்டு அரங்குகளில் தங்களுடைய வெளியீடுகளையும், குறிப்பிடத்தக்க சமூக, இலக்கிய நூல்களையும் […]

மதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….

This entry is part 18 of 31 in the series 11 ஜனவரி 2015

  ந.பெரியசாமி(1971) பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்தில் பிறந்தவர். தற்சமயம் ஓசூரில் தனியார் நிறுவனமொன்றில் பணி. 2003களிலிருந்து எழுதிவருகிற இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நதிச்சிறை’ 2004இல் வெலியானது. ஓசூர் தமுஎகச கிளைப் பணிகளில் பங்கேற்பது. ஓசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி நண்பர்களுடன் இணைந்து மாற்று சினிமா திரிஅயிடுவது. புதுவிசை இதழின் நிர்வாகப் ஒறுப்பு என தனது தொடர்ந்த செயல்பாடுகளால் பரவலாக அறியப்பட்டவர்.   _ ‘மதுவாகினி’ தொகுப்பிலிருந்து.     “ஆசைகொண்டு வாங்கிய மூன்று சக்கர […]