author

மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_

This entry is part 32 of 33 in the series 4 ஜனவரி 2015

மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு [வெளியீடு: புது எழுத்து, ஜூன் 2014, பக்கங்கள் 48. விலை ரூ: 70] நூல் குறித்து சில எண்ணப்பதிவுகள்_ லதா ராமகிருஷ்ணன் [பிரதாப ருத்ரன் ( 1979 _ ) ”இது இவரது முதல் கவிதைத் தொகுதி. ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரதாப ருத்ரனின் இயற்பெயர் முனிராசு. தர்மபுரியில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். சூழலியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் கவிதைகளை எழுதி வெளியிட்ட காலம் பொதுவான […]

மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

  மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில் ஜூன் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வு   -லதா ராமகிருஷ்ணன்           சொல்லவேண்டிய சில….. வாழ்க்கைக்குக் கவிதை தேவையா? வாழ்க்கைக்குக் கவிதையால் என்ன பயன்? வாழ்க்கைக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு? கவிதையைப் படிப்ப தால் என்ன கிடைக்கிறது? கவிதை எழுதுவதால் என்ன கிடைக்கிறது _ இவற்றிற்கும் இவையொத்த பிறவேறு கேள்விகளுக்கும் நம்மிடம் உள்ள ஒரே பதில் […]

குப்பையாகிவிடவேண்டாம் நாம்!

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

வாட்டர்கேட் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் – இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ ஊழல்கள். அவற்றில் குப்பை ஊழலும் ஒன்று. ஆம், நம் நாட்டின் நகரங்களில் சேரும் குப்பைகளை அகற்று வதில் நடைபெற்றுவரும் ஊழல் பற்றி 16.03.2014 அன்று நடிகர் அமீர்கானின் தயாரிப்பு-இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் தமிழ் ஒளிபரப்பில் அறியக்கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நம் நாட்டின் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் தினசரி வெளியேற்றப்படும் திட, திரவ, மக்கும் மக்காக் […]

அனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

[முன்னாள் இயக்குநர், ஆசிய வளர்ச்சி வங்கி   கவிதா வெளியீடு. முதல் பதிப்பு : அக்டோபர் 2013. பக்கங்கள் 192. விலை: 125 ஒரு சிறு அறிமுகம்   ஒருவர் தன்னுடைய வாழ்க்கை சார்ந்து முக்கிய நிகழ்வுகளை, அனுபவங்களைக் கட்டுரைக ளாக்கும்போது பிரக்ஞாபூர்வமாகவோ அல்லது தன்னையுமறியாமலோ தன்னைப் பற்றிய ஒருவித கதாநாயகத்தனமான, மிகைப்படுத்தப்பட்ட, ‘Tragic Hero’ பாவந் தாங்கிய பிம்பத் தைத் துருத்திக்கொண்டு நிற்கச் செய்வது பெரும்பாலான நேரங்களில் நேர்ந்து விடுகிறது. இந்த ‘மிகைப்படுத்தல்’ பேசப்படும் நிகழ்வு […]

கிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் –

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

 நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடு _ஒரு சிறு அறிமுகம்.   ஒரு பத்திரிகையாளரின் பணி சவால்களும் சிக்கல்களும் நிறைந்தது. இதன் காரணமாக இதழியலாளர்கள் படைப்பாக்கத்திறன் பாதிக்கப்படுவதுண்டு. வெறும் வாழ்க்கைத் தொழிலாக மட்டுமே பாவித்து இதழியலாளர்களாக இருப்பவர்களும் உண்டு. மிகுந்த ஆர்வமும் இலட்சிய வேட்கையுமாக பத்திரிகைத் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களும் உண்டு ஜி.மீனாட்சி இரண்டாம்வகை இதழியலாளர். பல வருடங்களாக தினமணி நாளிதழில் பணியாற்றிய பின் தற்சமயம் புதிய தலைமுறை இதழில் என்றுமான உத்வேகத்துடன் இயங்கிவரும் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் […]

மக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்

This entry is part 4 of 40 in the series 26 மே 2013

  எழுத்தறிவித்தல் நாடு முழுவதும் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் 7 லட்சத்துக் கும் அதிகமான ஆசிரியப் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டதாக 24.11.2012 தினமணி இதழில் செய்தி வெளியாகியிருந்தது. நன்கொடை பெற்றது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் விளக்கம் கேட்டு 31 பள்ளிகளுக்கு மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் [ஸிபிஎஸ்ஸி] இந்த ஆண்டில் 31 பள்ளிகளுக்கு நோட்டீச் அனுப்பியுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத் துறை இணைய மைச்சர் சசி […]

SECOND THOUGHTS [ஸெகண்ட் தாட்ஸ்] கவிஞர் நீலமணியின் ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு

This entry is part 2 of 40 in the series 26 மே 2013

கடந்த 55 ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறவர் கவிஞர் நீலமணி. தமிழ் சிறுபத்திரிகைகளுக்கு நன்கு அறிமுகமானவர். சமூகவுணர்வு மிக்க அதேசமயம் கவித்துவம் குறையாத கவிதைகளை கணிசமான எண்ணிக்கையில் எழுதியிருப் பவர். அவருடைய கவிதைகளில் நிறைய நீள்கவிதைகளும் உண்டு. தமிழ் வளர்ச்சிக் கழகம் விருது, பாவேந்தர் நூற்றாண்டு விழாவில் வழங்கப்பட்ட பாவேந்தர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய வலைப்பூ தமிழ்க்கடலில் கவி அலைகள். www.kavineelamani.blogspot.com   ஆங்கிலமொழியிலும் தேர்ச்சிபெற்றவரான அவர் நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிய கவிதைகள் அடங்கிய […]

தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும்

This entry is part 8 of 28 in the series 5 மே 2013

  தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வன்முறை இந்தியாவை மட்டு மல்ல, உலகத்தையே உலுக்கியது எனலாம். அந்த ஃபிஸியோதெரபி மாணவி யின் அக புற வலியை எண்ணியெண்ணி அலைக்கழிந்தது மனம். அவளைக் காப்பாற்றவியலாத கையறுநிலையில் அவளுடைய தோழனின் மனம் எப்படி யெல்லாம் தவித்திருக்கும். இப்போது, ஐந்து வயதுச் சிறுமி தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள்.   இத்தகைய சமூகச் சீர்கேடுகளை எதிர்த்து பொதுமக்கள் அணிதிரண்டு போராட முன்வருவது நல்ல அறிகுறி. ஆனால், வட […]

துறவியின் இசைக்குறிப்புகள் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்பு

This entry is part 17 of 28 in the series 5 மே 2013

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள் 150, விலை : ரூ60   எந்தக் காலத்திலும், எந்த மொழியிலும் இயற்கையின் வண்ணங்கள் வடிவங்கள், அர்த்தப்பரிமாணங்களால் ஆட்கொள்ளப்படாத, இயற்கை சார்ந்த உவமான உவமேயங்கள், உருவகங்கள், குறியீடுகளைக் கையாளாத கவிஞர்களே இல்லையெனலாம். இயற்கையை அதன் அழகுக்காக ஆராதிப்பவர்கள் உண்டு. இயற்கைக் காட்சிகள், நிகழ்வுகள், சுழற்சிகளிலிருந்து வாழ்க்கைத் தத்துவங்களை உள்வாங்கிக்கொண்டவர்கள் உண்டு. வாழ்வில் வரவாகும் காயங்களுக்கெல்லாம் வலிநிவாரணியாக இயற்கையைத் தஞ்சமடையும் நெஞ்சங்களும் உண்டு.   சில கருப்பொருள்களைக் கையாண்டால் உடனடி தனிக்கவனம் கிடைக்கும். […]

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? – 1

This entry is part 24 of 33 in the series 14 ஏப்ரல் 2013

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?   ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை – தமிழ்நாடு நிலவரம் – சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்    _லதா ராமகிருஷ்ணன் [1]   ஆரம்பக் கல்வி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் நிலைத்த தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி எட்டாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கச்செய்ய வேண்டி […]