Articles Posted by the Author:

 • அவரவர் முதுகு

  ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) தன் முதுகை(த்)தான் பார்த்துக்கொள்ள முடியாதா என்ன? சிறிய ஆடியொன்றைக் கையில் பிடித்து வாகாய் முதுகுக்குப்பின் கொண்டுபோகலாம். அல்லது பெரிய ஆடியொன்றின் முன் முதுகைக் காட்டிக்கொண்டு நின்று கழுத்தை வளைத்துப் பார்க்கலாம். இப்போதெல்லாம் நம் அலைபேசியைக் கொண்டு புகைப்படம் கூட எடுத்துவிட முடியும். சின்னத்திரையில் வரும் பெண்கள் அணியும் சட்டைகளில் என்னமாய்த் தெரிகிறது முக்காலுக்கும் மேலான வெற்று முதுகு! வீட்டிற்குச் சென்று மெகாத் தொடரில் தான் நடித்த காட்சியை மீண்டும் ஓட விட்டு தன் […]


 • ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  அண்மையும் சேய்மையும்   இடையிடையே கிளைபிரிந்தாலும் இந்த வாழ்வை ஒரு நீண்ட பயணமாகவே பாவிக்கப் பழகியிருந்தது பேதை மனம். அதற்கான வழியின் அகலநீளங்களை அளந்துவிடக் கைவசம் தயாராக வைத்திருந்தது எளிய கிலோமீட்டர்களை. பத்துவருடங்களுக்கு முன் நற்றவப்பயனாய் பறவைபோல் வாராவாரம் சிறகுவிரித்துச் சென்றடைந்த இடங்களும் சந்தித்த சகபயணிகளும் இன்று ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருப்பதாய் எட்டிப்போய்விட தாற்காலிகக் குடியிருப்பாய் நகரும் ஆட்டோக்கூட்டுக்குள் பத்திரம் தொலைத்துச் சென்றவாறு ஆயாசத்தில் அலைக்கழியும் நேரம் அறிவுக்குப் புலப்படும் வயதின் அளக்கமாட்டா தொலைதூரம். […]


 • படைப்பும் பொறுப்பேற்பும்

  லதா ராமகிருஷ்ணன்   சமூகப் பிரக்ஞை என்பது தங்களுக்குத்தான் இருக்கிறது என்பதுபோல் சில திரையுலகவாதிகள் முழக்கமிடுவது வாடிக்கை.   அரசியல்வாதிகளையே தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த ஒரு திரையுலக வாதிக்கான எதிர்வினை யாய் ஒரு அரசியல் வாதி ‘நாங்களாவது ஐந்து வருடங்க ளுக்கு ஒருமுறை மக்கள்மன்றத்தின்முன் நிற்க வேண் டியுள்ளது. ஆனால் எங்களை ஒட்டுமொத்தமாகப் பழிப்ப தன் மூலமும் பகடி செய்வ தன் மூலமும் தங்களை சமூகப் புரட்சியாளர்களாக நிறுவும் திரையுலகவாதிகளிடம் இருக்கும் பணம் எங்களில் பலபேரிடம் இல்லை’ […]


 • சொல்லத்தோன்றும் சில……

      லதா ராமகிருஷ்ணன் தொலைக்காட்சிகளில் தலைவிரித்தாடும் குரூர நகைச்சுவை: திருமதி ஹிட்லர் என்பது ZEE தமிழ் தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் தலைப்பு. நகைச்சுவை என்ற பெயரில் கிச்சுகிச்சு மூட்டினாலும் சிரிப்பு வராத திராபை காட்சிகள்; வசனங்கள்; கதாபாத்திரங்களின் முகபாவங்கள். ஆனால் ஹிட்லர் என்ற பெயரை எத்தனை சுலபமாக ‘நகைச்சுவைக்கான’ பெயராக்கி விட்டார்கள் என்பதைப் பார்க்கும்போது வருத்தமாயிருக்கிறது. இது அப்பட்டமான insensitivity யல்லாமல் வேறென்ன? இப்படித்தான் ‘சுனாமி’ என்ற சொல்லை பலவிதமாய் சிரிப்புமூட்டப் பயன்படுத்து கிறார்கள். சுனாமியின் […]


 • டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி

  லதா ராமகிருஷ்ணன்     டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவுநாளாகிய அக்டோபர் 24 அன்று திரு. கே.எஸ்.சுப்பிரமணியனுக்கான எளிய நினைவஞ்சலியாய் அவருடைய எழுத்துகள் சிலவும் அவரைப் பற்றி சிலர் கூறுவதும் இடம்பெறும் ஒரு இருமொழித் தொகுப்பு புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது. அத்தகையதொரு நூலைக் கொண்டுவர வேண்டும் என்று சென்னையிலுள்ள எழுத் தாளர்கள் சிலரும் கூறினார்கள். டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியனின் மகனும் மகளும் அயல்நாட்டில் பேராசிரியர்களாகப் பணிபுரிபவர்கள். அவர்களும் அப்படியொரு நூல் தங்கள் தந்தையின் நினைவாக வெளியிடப்பட வேண்டும் […]


 • முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு

    லதா ராமகிருஷ்ணன்     சஃபி என்ற பெயர் நவீன தமிழ் இலக்கிய உலகிற்குப் பரிச்சயமானது.   அவரைப் பற்றி எழுத்தாளர் சி.மோகன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.   //“இலக்கியம், சினிமா, உளவியல் துறைகளில் ஆழ்ந்த ஈடு பாடும் ஞானமும் கொண்டவர். எதிர் உளவியல் குறித்த சிந்தனைகள். தமிழில் அறிமுகமாவதற்கும் அறியப்படுவ தற்கும் காரணமாக இருந்தவர். எழுத்தாளர் கோபிகிருஷ்ண னின் நெருங்கிய நண்பர். அவரோடு இணைந்து ‘ஆத்மன் ஆலோசனை மையம்’ நடத்தியவர். இவருடைய வளமான அறிவைத் தமிழ்ச் […]


 • கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……

                                   லதா ராமகிருஷ்ணன்   1935 ஆம் ஆண்டு செப்டம்பர் 22இல் பிறந்தவரான, இன்றளவும் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் பிறந்த நாளையொட்டி குவிகம் பதிப்பகத்தார் அவருடைய சமீபத்திய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் சில இடம்பெறும் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார்கள். தலைப்பு: சொல்ல நினைத்தேன். கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய கச்சிதமான அறிமுகம் நூலில் இடம் பெற்றிருக்கிறது. அச்சுப்பிழைகளைத் தேடவேண்டிய நேர்த்தியான நூலாக்கம். புத்தகத்தினை திறமையாக மெய்ப்பு பார்த்துக் கொடுத்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ராஜேஷ் சுப்பிரமணீயனுக்குத் தனது […]


 • தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!

        லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸா புகைப்படம் : (அமரர்)ஓவியர் தட்சிணாமூர்த்தி   செப்டம்பர் 30 ஆந் தேதி பேஸ்புக்கில் சிலர் உலக மொழிபெயர்ப்பு தின வாழ்த்துகள் பகிர்ந்துகொண்டிருந்ததைப் படித்தபோது கடந்த சில வருடங்களாக ஆரவாரமில் லாமல் சமகால தமிழ்க்கவிதைகளை மொழிபெயர்த்து தன் ‘டைம் லைனில்’ பதிவேற்றிவரும் ஸ்ரீவத்ஸா தான் நினைவுக்கு வந்தார்.   தன் நண்பர்களால் ‘ஸ்ரீ’ என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் சொந்தமாகவும் கவிதைகள் எழுதுபவர். தமிழ்க்கவிதைகளை இந்தியிலும் […]


 • முன்மாதிரி ஆசிரியை அஸ்வினியும் மாண்டிசோரி கல்விமுறையும்!

    லதா ராமகிருஷ்ணன் சில வாழ்க்கைத்தொழில்களைப் பொறுத்தவரை அவை வெறும் வருமானமீட்டித் தருபவையாக மட்டும் பார்க்கப்படலாகாது. அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு அதில் ஈடுபடவேண்டியது இன்றியமையாததாகிறது. ஆசிரியர் பணி அவற்றில் முக்கிய மானது. அதுவும் ஐந்து வயதிற்குட்படா காலகட்டத்தில் ஒரு குழந்தை கற்றுக்கொள்வது காலத்திற்கும் அதன் ஆளுமையில் தாக்கம் செலுத்துவதாக அமைகிறது என்னும்போது மழலையர் கல்வி, குழந்தைகளுக்கான கற்பித்தல் முறை எத்தனை கவனமாகக் கட்டமைக்கப்படவேண்டும்! அப்படி குழந்தைகளை, அவர்களுடைய இயல்புகளை, நடவடிக்கைகளை, அறிதிறனை, ஆர்வங்களை பார்த்துப்பார்த்து மரியா மாண்டிசோரி அம்மையார் […]


 • தொலைக்காட்சித்தொடர்களின் பேய்பிசாசுகளும் பகுத்தறிவும்

      லதா ராமகிருஷ்ணன் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்ததே. விஜய் தொலைக்காட்சி சேனலுக்கு அப்படித்தான் தன்னை பகுத்தறிவு வாதியாகவும் காட்டிக்கொள்ள வேண்டும். அதேசமயம் பேய் பிசாசு பூதம் இத்தியாதிகள் இடம்பெறும் மெகா தொடர்களையும் ஒளிபரப்பவேண்டும். அதனால், சிகரெட் விளம்பரங்களில் புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீமை பயப்பது என்று போடுவதுபோலவே, ரம்மி விளையாடச்சொல்லி அவசரப்படுத்தும் விளம்பரங்களில் ’இதில் இழப்புகள் அதிகம் – பொறுப்பு ணர்ந்து விளையாடவும்’ என்பதாய் அறிவுரை தருவது போலவே விஜய் […]