Articles Posted by the Author:

 • நெஞ்சு பொறுக்குதில்லையே…..

  நெஞ்சு பொறுக்குதில்லையே…..

  கடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்தியை தமிழ் ஆங்கில நாளிதழ்களில் படிக்க நேர்கிறது. மிகவும் அவலமாக உணர்கிறது மனம். இன்று சென்னை மதுரவாயில் பகுதியில் ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் வசிக்கும் குடும்பத் தைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி இரவு பனிரெண்டு மணிக்கும் மேல் சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளிப் புறத்தில் இருந்த கழிப்பறைக்குச் சென்றபோது அந்தக் குடியிருப்பில் வசிக்கும் 29 வயதுக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் மேற்கொண்ட […]


 • கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….

  கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….

  ஒரு புத்தகத்தை ஒருவர் படித்திருப்பதாகச் சொல்லும்போதே அவருடைய குரல் நெகிழ்ந்து கரகரக்கிறது. இன்னொரு மேம்பட்ட உலகிற்குள் அவர் குடியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது. அந்தப் புதினத்தின் இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை அவர் குறிப்பிடும் விதம் பிஞ்சுக் குழந்தையை அதிசயமாய்ப் பார்த்து அத்தனை பத்திரமாய் ஏந்துவதைப் போலிருக்கிறது. கதையில் வரும் காடு குறித்து அவர் பேசும்போது அதில் வாழும் சிங்கராஜாவும் ஊறும் நத்தையுமாகிவிடுகிறார்! அந்த நதிக்கரையில் பொழியும் மழையை அப்படி நனைந்து நனைந்து விவரிக்கிறார்! அந்தக் கதையை எழுதியவரின் பெயரை மந்திர […] • தட்டும் கை தட்டத் தட்ட….

  தட்டும் கை தட்டத் தட்ட….

  பிரார்த்தனை இதோ இந்கே சில நிமிடங்கள் தொடர்ச்சியாக நான் கைதட்டுவது இதுவரை நான் பொருட்படுத்தாதிருந்திருக்கக்கூடிய பாராட்ட மறந்திருக்கக்கூடிய எல்லோருக்குமானதாகட்டும். ஒரு கிருமியால் என்னுயிர் பறிபோய்விடுமோ என்ற பயத்தால் மட்டுமே நான் இதைச் செய்கிறேன் என்று ஆகிவிடலாகாது. இந்தக் கைத்தட்டல் நேற்றும் இன்றும் நாளையும் மக்கள்பணியாற்றும் எல்லோருக்குமானதாகட்டும். என்னிரு கைகளை யந்திரத்தனமாகச் சேர்த்துக் கரவொலியெழுப்பாமல் மனதின் கைகளைக் கொண்டு நான் தட்டுவேனாக. உலகின் தலைசிறந்த இலக்கியங்களைப் படைத்தவர்களுக்கு உரித்தாகட்டும் இந்தக் கைத்தட்டல் நான் வாழுங் காலத்தின் அற்புதத் தமிழ்க்கவிஞர்களுக்கு […]


 • ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

  இருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப் பார்த்துப் புலமுவதைவிட அதைப் போக்க நம்மாலானதைச் செய்வது, ஒரு சிறு அகல்விளக்கையேனும் ஏற்றிவைப்பது மேல். சமூகத்தின் இருள் என்பது அறியாமை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற அதன் சீர்கேடுகள். இவை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகப் பரவியிருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்தச் சமுதாயம் அடர் இருளில் மூழ்கியிருக்கும். சமுதாயத்தின் மேல் அக்கறையுள்ளவர்கள், சக மனிதர்களை நேசிப்பவர்கள் தனிமனிதர்களாகவோ, ஒத்த கருத்துள்ள மனிதர்களின் ஒரு குழுமமாகவோ இந்த இருளைக் களையும் செயலில் இறங்குகிறார்கள். சமூகத்தைப் பீடித்திருக்கும் பல்வேறு இருள்களில் அறியாமை, […]


 • பாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்

  லதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11  – பாரதியாரின் நினைவுதினம். 38 வயதிற்குள் எத்தனை எழுதிவிட்டார் என்று எண்ண எண்ண பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய இந்தக் கவிதையில் வரும் ’பெரிய கடவுள் காக்கவேண்டும்’ என்ற வரியையும், ’தரணியிலே பெருமை வேண்டும்’ என்பதையும் நாம் வழக்கமான அர்த்தத்தில் புரிந்துகொண்டால் பின் எந்தக் கவிதையையும் நம்மால் உள்வாங்கவே இயலாது. ஒரு கவிதை ஒற்றை அர்த்தத்தைக் கொண்டதாய் அனைவருக்கும் புரியும் அளவில் எழுதப்பட்டதா லேயே அது கவிதையாகிவிடுவதாகச் சொல்லமுடியாது. அதேபோல்தான் புரியாக் கவிதையும். […]


 • உடல்மொழியின் கலை

  _ வெளி ரங்கராஜன் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் கலை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு குறித்து…. லதா ராமகிருஷ்ணன் புத்தக அச்சாக்கம் நேர்த்தியாக இருக்கிறது. குறைவான அச்சுப் பிழைகளுக்காகவும், நேர்த்தியான அட்டை வடிவமைப்புக்காகவும் போதிவனம் பதிப்பகம் பாராட்டுக்குரியது. இந்தக் கட்டுரைத்தொகுப்பில் சிறிய கட்டுரைகளும் நீளமான கட்டுரைகளுமாக 22 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இலக்கியம், நிகழ்த்துகலை சார்ந்த கட்டுரைகள். ஏழெட்டு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உட்பட. கட்டுரைகளில் வெளி ரங்கராஜனுக்கே உரிய நிதான தொனியும் கருத்துகளை முன்வைப்பதில் அவர் வெளிப்படுத்தும் […]


 • THE CONDEMNED (2007 American Action Film) and THE BIGG BOSS

  _ லதா ராமகிருஷ்ணன் முன்பொரு நாள் யதேச்சையாக தொலைக்காட்சி ஆங்கில சேனலில் பார்க்கக் கிடைத்த படம் THE CONDEMNED. கதாநாயகன் ஜாக் கான்ராட் மரண தண்டனைக் கைதியாக ஊழல்மிக்க சால்வடார் நாட்டுச் சிறையில் இருக்கிறான். (படம் பார்த்து நிறைய வருடங்களாகிவிட்டன என்பதால் கதையின் விவரங்களைத் துல்லியமாக நினைவிலிருந்து தர இயலவில்லை). ஒரு தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் புதிய பரபரப்பான, ‘உலகெங்கும் முதல் முறையாக’க் காண்பிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி லாபம் தேடும் வியாபார நோக்கோடு ஜாக்கையும், அவனைப் […]


 • பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்

  _ லதா ராமகிருஷ்ணன் (Treasurer _ Welfare Foundation of the Blind) ‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். அதிலிருந்து சில பத்திகள் கீழே தரப்பட்டுள்ளன: ”தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். அவர்களின் வாசிப்பிற்கு அமேசான் கிண்டில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது என சொல்லலாம். அச்சு புத்தகங்களை வாசிக்க […]


 • சொல்லும் செயலும்

  லதா ராமகிருஷ்ணன் ”எங்கள் அலுவலகத்திற்கு ஓர் எழுத்தாளர் (பெண்) வந்திருந்தார். அவர் எங்களை யெல்லாம் பார்த்து எளிமையாக இருக்கச் சொன்னார். ஆனால் அவர் கெட்டிச் சரிகை பட்டுப்புடவையணிந்து தங்க நகை களோடு வந்திருந்தார்” என்று அம்மா வேலையிலி ருந்த சமயம் ஒருமுறை கூறினார். “எழுந்து நின்று கேட்கவேண்டியதுதானே” என்றேன். ’ஏதோ, எங்கள் அழைப்பின் பேரில் விருந்தினராக வந்தவராயிற்றே என்று என்னைப்போல் சிலர் வாளா விருந்தார்கள். நிறைய பேர் அவரை வாயைப்பிளந்து பார்த்துக்கொண் டிருந்தார்கள். ஆனால், எளிமையாயிருப்பவர்கள் எளிமையைப் […]