ஒரு சிலரே உலகம் எங்கும் அறியப்பட்டவர்கள். அமெரிக்கா – அபிரகாம் லிங்கன், இங்கிலாந்து – சர்ச்சில், சீனா – மாசேதுங், வியட்நாம் – ஹோசிமின், ரஷ்யா – லெனின், பிரான்சு – தெகோல் , கியூபா – காஸ்ட்ரோ, இஸ்ரேல் – கோல்டா மேயர், எகிப்து – நாஸர், இந்தியா – காந்தி எனப் பட்டியலை விரித்துக்கொண்டு போகலாம். ஒரு தலைவர் உலகம் எங்கும் அறியப்படுவது என்பது வேறு கொண்டாடப்படுவது என்பது வேறு. ஒரு தலைவரின் பெருமையும் […]
நாகரத்தினம் கிருஷ்ணா அ. இது அசல் நெய்யினால் தயாரிக்கப்பட்ட ……. நண்பர் க. பஞ்சுவின் மனம் சுவைத்த கவிதை அனுபவம் சொற்களாக உருமாறி்யுள்ளது. ” நவீன கவிதைகளும் என் வாசிப்புகளும்’ என்ற நூல் வடிவில் கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பிரான்சு நாட்டில் வசிப்பவர்களுக்கு Michelin என்ற சொல் குறிப்பாக என்னைப்போல ருசி கண்டவர்களுக்கு ( எங்க அம்மா வழி தாத்தா, உண்ணு ருசி கண்டவனும் பொண்ணு ருசி கண்டவனும் உருப்படப்படமாட்டான் ன்னு அடிக்கடி சொல்லுவார்) நன்கு அறிமுகமான சொல். […]
ஜனவரியில் வெளிவர உள்ள ‘ இறந்த காலம்’ புதிய நாவலின் முதல் அத்தியாயம் நாகரத்தினம் கிருஷ்ணா ——————————————————————————– « ….. வரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது. அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தையும், ஐரோப்பிய வாழ்க்கையின் போதாமையையும் புலப்படுத்துகிற ஒரு முறைமையிலேயே கதையாடுகிறார் ; அதுவும் காலனிக்கால எளிய மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் பரிவும் கருணையும், அதற்காக எழுத்தில் […]
அ. மேற்குலக சினிமா : ‘Still Alice’ திரைப்படங்கள், குறும்படங்கள் தொடர்கள் முதலானவற்றிர்க்குத் தொலைகாட்சி உரிமம் பெற்று வினியோகிக்கும் Nerflix தயவினால் இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த திரைப்படம் ‘Still Alice’. படத்தின் பெயரை பிரெஞ்சிலும் Still Alice என்றே வைத்திருக்கிறார்கள். பிரெஞ்சுத் திரைப்பட ரசிகர்கள் ‘Still’ என்ற சொல் உணர்த்தும் பொருளை புரிந்துகொள்வார்கள் என்பதைக் காட்டிலும் உணர்ந்துகொள்வார்கள் என்று நினைத்திருக்கலாம். இராவணன் சிறை எடுத்ததாகக் கூட இருக்கட்டுமே அவள் எப்பவும் எனக்கு சீதைதான், எனக்கூறி இராமன் […]
நாகரத்தினம் கிருஷ்ணா இலக்கியமோ, கலையோ இரண்டையும் குறித்து சுடச்சுடவிமர்சனங்கள் திறனாய்வுகள் வந்துவிடுகின்றன. மக்கட்பேறு போல இலக்கிய பேறும் பதினாறும் பெற்று பெறுவாழ்வு வேண்டிய நெருக்கடி. ஒரு படைப்பு குறித்து உடனடியாக விமர்சனங்கள் வைப்பது சரியா ? என்னுடைய தாழ்மையான கருத்து, கூடாது. எவ்வித முற்சாய்விற்கும் இடம் தராமல் ஒரு படைப்பை அணுகுவதற்கு வசதியாக, உரிய அவகாசத்தை வாசகர்களுக்கு அளித்த பின்னரே விமர்சனங்கள் வரவேண்டும். பண்டங்களின் தராதரத்தை அதன் உற்பத்தியாளர்கள் செய்கிற விளம்பரங்கள் எப்படி தீர்மானிக்க முடியாதோ, அதுபோன்றே […]
நாகரத்தினம் கிருஷ்ணா நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அ. ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ :ஆர்கே நகர் தேர்தல் முடிவும் கவிஞர் இன்குலாப் குடும்பமும் இரண்டு நாட்களுக்கு முன்பு சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கிய சாகித்ய அகாதெமி விருதை அன்னாரது குடும்பம் வேண்டாமென மறுத்திருக்கிறது. இப்புதிய விருதினால் அவருடைய பெருமைக்கு ஐந்துகிலோ உபரியாக க் கிடைக்கப் போவதில்லை. ஒரு பக்கம் பகலில் முன்வாசல் வழியாகக் கதவைத் தட்டிய விருதையும், அதனோடு வந்த […]
நாகரத்தினம் கிருஷ்ணா அ. டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன் நிறுத்தமுயன்ற தஷ்வந்த் என்ற இளைஞன் மீது மாதர் சங்கம் நடத்தியதாகச் செய்தி. தாக்குதல் நடத்திய மனிதர்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது. தஷ்வந்த் பிரச்சினைக்கு வருவோம். ஆறுவயது சிறுமியைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றதற்குத் தண்டிக்கபட வேண்டியவன் என்ற அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறான். அவன் மீதான குண்டர் […]
நாகரத்தினம் கிருஷ்ணா (விரைவில் சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ள எனது நாவலிலிருந்து…) மறுநாள் காலை, அறைக்கதவு இடிப்பதுபோல தட்டப்பட, விழித்துக்கொண்டேன். விடுதிப் பையனாக இருக்குமோ ? காலையில் என்ன செய்தியோட வந்திருக்கிறான் ! என்று அச்சத்துடன் எழுந்தேன். அறைக்கு வெளியே குழல்விளக்கின் வெளிச்சம், இருந்தும், நன்றாக விடிந்திருப்பதின் அடையாளமாக மூடியிருந்தச் சன்னற்கதவுகளின் தப்பிய பகலொளி, அறைக்குள் குருத்தோலைபோல கட்டிலுக்கு இணையாகச் சரிந்து தரையைத் தொட்டிருந்தது. ஒளிக்குருத்திற்குள் உயிர்ப்புள்ள நுண்ணுயிர்களாக தூசுகள் பறந்தன. மீண்டும் கதவுத் தட்டப்பட்டது. « எழுந்திருடா, […]
அ. பொறுமைக் கல் –அதிக் ரஹ்மி ஆப்கானிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்ற எழுத்தாளர் அதிக் ரஹ்மி (Atiq Rahimi ) என்பவரின் நாவல் Syngué Sabour. இப்பெயர் அரபுப் பெயராக இருக்கலாம். பிரெஞ்சு மொழியில் Pierre de Patience என்று நாவலுக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எளிமையான கதை அல்லது உண்மை. பொய்களை உரைப்பது கடினமான வேலை. பிறரைக் கவர்ருவதற்கென நகாசு வேலைகள் வேண்டும். பேன்ஸி ஸ்டோர் கூட்ட த்தை அள்ள பொன்மூலாம் பூசவேண்டும். ஆனால் […]
(France – Culture என்ற பிரெஞ்சு வானொலி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் கு நாட்கள் ஒரு நாளைக்கு 50 நிமிடம் என்ற கணக்கில் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு ஒலிபரப்பை ஏற்பாடு செய்திருந்த து, அதைக் கேட்டதின் எதிரொலி) ரஷ்யப்புரட்சிக்கு வயது நூறு ஆண்டுகள். புரட்சி என்ற சொல்லுக்கும் தள்ளாடும் வயது. இன்றைக்கு 1917ஆம் ஆண்டு புரட்சியையும், அதனை முன்னின்று நடத்திய ஹீரோக்களையும் இன்றைய ரஷ்யாவில் பொதுவுடமைஅபிமானிகளைத் தவிர பிறர் நினைவு […]