உலகின் எந்த மூலைக்குப் போனாலும் நீங்கள் இந்தியர்களைப் பார்க்கலாம். பெரும் நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், தொழிற்சாலைகளிலும் இந்தியர்கள் இல்லாத இடமில்லை. தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் என இந்தியர்கள் இல்லாத துறைகளும் இல்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக அல்லது ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியர்களின் கல்வித் தகுதியும், திறமையும் பெருவாக மதிக்கப்படுகிறது. தாங்கள் வாழும் நாடுகளில் சட்டத்தை மதிப்பவர்களாக, குற்றங்கள் அதிகம் புரியாதவர்களாக, வரி கட்டுபவர்களாக, அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துபவர்களாக மட்டுமெ நீங்கள் இந்தியர்களைப் […]
பங்குச்சந்தை வர்த்தகத்தில் “Insider Trading” என்கிறதொரு சமாச்சாரம் இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவன் தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்களை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக நிறையப்பணம் சம்பாதிப்பது. இது மிகப்பெரிய குற்றம் மட்டுமில்லை, மிகக் கேவலமான நம்பிக்கைத் துரோகமும் கூட. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தில், மைக்ரோசாஃட் என்று வைத்துக் கொள்வோம், பெரிய அதிகாரி. உங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கண்டுபிடித்த புதியதொரு மென்பொருளைக் குறித்து தெரியும். அது விற்பனைக்கு வந்தால் மைக்ரோசாஃப்டின் […]
மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முதியவரை யாரோ அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்கிற செய்தியைப் படித்தேன். மிகவும் வருத்தமளிக்கிற விஷயம் அது. தான் சார்ந்த அல்லது தனக்குப் பிடித்த ஒரு கட்சியை மட்டுமே எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என்பது ஒரு மனநோய். அதற்காக ஒருவரைக் கொல்கிறவரைக்கும் செல்கிறவன் மனநோய் முற்றிய, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டியதொரு சைக்கோ. பெரும்பாலும் பரம்பரை தி.மு.க. ஆதரவாளர்களிடம் மட்டுமே இந்த மாதிரியானதொரு வெறித்தனத்தைப் பார்த்திருக்கிறேன். அ.தி.மு.க.காரன் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்கிறவன். அவனது […]
என்னுடைய இளவயதில் சினிமாவில் சேர்ந்து பெரிய இயக்குனராக வரவேண்டும் என்கிற கனவு இருந்தது. இன்றைக்கும் பல தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அந்தக் கனவு இருக்கிறது என்றாலும் பெரும்பாலோர் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை. பிறநாட்டுத் திரைப்படங்களைக் காப்பியடித்து எடுப்பதில் இருக்கிற ஆர்வம் சொந்தக் கற்பனையில் இல்லை என்பதுதான் நிதர்சனம். காரணம் புத்தக வாசிப்பும், உலக நடப்பில் ஆர்வமின்மையும், சொந்தக் கலாச்சார மேன்மை குறித்த அறிவும் இல்லாமல் போனதுதான் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம். தமிழக கலாச்சாரத்தை, அதன் இயல்பு […]
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு தலைப்பாகை கட்டி தாடி வைத்திருக்கும் இந்திய சீக்கியர்களுக்கும், இரானியர்களுக்கும், ஆப்கானிகளுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாது. தலைப்பாகை கட்டி தாடி வளர்த்தவனெல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதி என்பது அமெரிக்கப் பொதுபுத்தி. எல்லோரும் அப்படி என்று நான் சொல்லவில்லை. வித்தியாசம் தெரிந்தவர்கள் குறைவு என்பதுதான் நான் சொல்ல வருவது. அமெரிக்க பொதுமக்கள் மட்டும் அப்படியில்லை. காவல்துறை அதிகாரிகள், விமான நிலைய சிப்பந்திகள் எனப் பலருக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11-க்குப் […]
A-SAT ஏவுகணையை உபயோகித்து வான்வெளியில் இருக்கும் ஒரு சாட்டிலைட்டைத் தாக்கி அழிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்த நாளிலிருந்து சும்ப இந்தியர்கள், அதிலும் கேவலமான நிகும்பத் தமிழர்களின் கருத்து வாந்திகளைக் கண்டு விக்கித்துப் போயிருக்கிறேன். மோடி பேசப் போகிறார் எனத் தெரிந்தவுடன், உலகமே கூர்ந்து கவனித்தது. இதுவரை இந்தியாவில் இருந்த எந்த பிரதமருக்காவது இப்படி நடந்திருக்கிறதா? ஒரு இந்தியனாக பெருமையல்லவா நீங்கள் படவேண்டும்? முன்பெல்லாம் அமெரிக்க ஜனாதிபதிகளுக்குத்தான் இத்தனை மதிப்பு இருந்தது. இன்றைக்கு ஒரு இந்தியப் […]
ஜனநாயகம் என்பது தனி மனிதச் சிந்தனை சார்ந்தது. ஒவ்வொரு தனி மனிதனும் தேர்தலில் போட்டியிடுகிற கட்சிகளைக் குறித்தும் அதன் வேட்பாளர்கள் குறித்தும் சீர்தூக்கிப் பார்த்து அவற்றில் தனக்குச் சரியெனப்படுகிற ஒரு கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வோட்டளிப்பதுதான் ஜனநாயகம். ஒவ்வொரு இந்தியனின் ஒவ்வொரு ஓட்டும் மகத்தான சக்தி வாய்ந்தது. அவனது மற்றும் அவனது பிள்ளைகளின் எதிர்காலத்தை அந்த ஒற்றை ஓட்டின் மூலம் தனியொரு இந்தியன் தீர்மானிக்கிறான். அவ்வாறே, பிற இந்தியக் குடிமகனும், குடிமகளும் எந்தவிதமான அழுத்தங்களும், நிர்பந்தங்களும், ஜாதி, […]
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைச் செய்வதில் தமிழ்நாடு சளைத்ததில்லை என்பதினை அறிந்திருந்தாலும் சமிபகாலத்தில் கேள்விப்படும் செய்திகள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. ஐம்பதாண்டுகால கலாச்சாரச் சீரழிவின் அடையாளம் இது. ஆபாச சினிமாக்களும், எப்படியும் வாழலாம் எனத் தூண்டுகின்ற தொலைக்காட்சி சீரியல்களும், அவற்றின் அர்த்தமற்ற பிதற்றல்களும், வகைதொகையின்றி இளம் வயதினருக்குக் காணக்கிடைக்கின்ற ஆபாசப் படங்களும், ஃபேஸ்புக், வாட்ஸப் போன்ற சோஷியல் நெட்வொர்க்குகளும் இந்தச் சீரழிவைத் துரிதப்படுத்தியிருக்கின்றன. பெண்கள் கோவிலுக்கோ அல்லது கூட்டமான இடங்களுக்கோ போய் வருவதில் உள்ள சிரமங்களை நம்மைச் […]
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்த பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்றது அனைவருக்கும் தெரிந்ததுதான். வெளிப்புறம் பார்ப்பதற்கு அது சாதாரணமானதொரு செயலாகத் தெரிந்தாலும் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கெதிராக இப்படிச் செய்வது சாதாரணமான விஷயமில்லை. பாகிஸ்தானிய ராணுவம் கிறுக்கர்களால் ஆனது. இந்தியாவைப் போலல்லாமல் நினைத்த மாத்திரத்தில் பாகிஸ்தானிய ஜெனரல்களால் இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல்களைத் தொடுக்க இயலும் என்பதால் இந்தியாவின் தாக்குதல் ஒரு மிகப்பெரிய ரிஸ்க்தான். மோடி எதற்காக இத்தனை பெரிய […]
பி எஸ் நரேந்திரன் Ghazwa-e-Hind என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஹிந்துக்கள் இந்தியாவில் இருக்கிற வரையில் அவர்கள் பாகிஸ்தானை ஆதரிப்பார்கள். பாகிஸ்தானிகளை ஆதரித்து மீம்ஸ்களும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களும் போட்டுத் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் கஸ்வா-எ-ஹிந்த் என்கிற வார்த்தையின் பயங்கரத்தை அவர்கள் அறிந்தார்களில்லை. அறிந்து கொள்ளவும் முயன்றார்களில்லை என்பதுதான் பரிதாபம். முதலில் இந்த கஸ்வா-எ-ஹிந்த் என்றால் என்ன என்று பார்க்கலாம். முகமது நபி கூறியதாகச் சொல்லப்படும் இஸ்லாமிய ஹதீஸ் ஒன்று இந்தியாவில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடைய நடக்கவிருக்கும் ஒரு […]