இந்த உலகம் தர்ம கேந்திரம். தர்மம் இங்கே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. வாழ்க்கையில் முயற்சி முக்கால் பங்கு விதி கால் பங்கு. உலக மக்கள் பிறரிடமிருந்து என்ன ஆதாயம் அடையலாம் என்பதிலேயே குறியாய் இருப்பார்கள். பிறரது முதுகை படிக்கல்லாய் பயன்படுத்துவதில் விற்பன்னர்கள். வியர்வை மண்ணில் சிந்தாமல் செல்வம் கிடைக்குமென்றால் வரிசையில் நிற்பார்கள். கோடி கோடியாய் குவித்து வைத்திருப்பவனும் ஒரு குண்டுமணி அளவுக்கு பிறருக்கு ஈய யோசிப்பான். தெய்வத்திடம் சென்று பிச்சை கேட்பதைத் […]
திரெளபதி அக்னியிலிருந்து பிறந்தவள். திரெளபதியை முன்னிருத்தியே பாரதம் மிகப்பெரிய போரைச் சந்தித்தது. காளி ரூபமாக சிவனை மிதிப்பது திரெளபதியின் இன்னொரு முகம். பெண் தன்னை உடலாக பார்க்கும் ஆடவர்களுக்கு பாடம் புகட்டவே நினைக்கிறாள். வாழ்க்கை ஓடத்தை கரை சேர்ப்பதும் மூழ்கடிப்பதும் அவள் கையில் தான் உள்ளது. எத்தனை வயதானாலும் ஆண்களுக்கு தாய்மையின் கதகதப்பு தேவையாய் இருக்கிறது. தாய்மையின் அருள்மழை பெய்வதாலேயே இந்தப் பூமி பசுமை நிறம் மாறாமல் இருக்கிறது. நீங்கள் இப்போது அண்ணாந்து பார்க்கும் […]
பெண்கள் எப்போதும் ஆகப்பெரியதை தான் அடைய நினைக்கிறார்கள். தோற்றத்தைவிட ஆணின் பின்புலம் தான் அவளுக்கு பெரிதாகப்படுகிறது. அவனுடைய செல்வம் அளிக்கும் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தேவையாய் இருக்கிறது. ஆணைவிட பெண் முதல்காதல் பாதிப்பிலிருந்தெல்லாம் விரைவில் மீண்டு விடுகிறாள். வாழ்க்கை என்றால் என்னவென்று அவள் அறிவதற்குள்ளாகவே வாலிபம் கடந்துவிடுகிறது. எல்லா பெண்களிடமும் தங்கள் கணவனுக்குத் தெரியாத அந்தரங்க ரகசியம் இருக்கவே செய்கிறது. வெளியில் அவள் பகட்டாக காட்டிக் கொண்டாலும் அவளுடைய மனம் இருளடைந்த குகையாகவே […]
ப.மதியழகன் குருடனாய்ப் பிறந்த திருதராஷ்டிரன் தனது மகனின் கண்களைக் கொண்டுதான் இவ்வுலகத்தைப் பார்க்கிறான். தான் குருடனாகப் பிறந்ததை ஒரு இழப்பாக அவன் கருதியதே இல்லை. திருதராஷ்டிரன் தனது உயிரை மகன் துரியோதனன் மீது தான் வைத்திருந்தான். அதிகாரமோகம் திருதராஷ்டிரனிடமிருந்துதான் துரியோதனனுக்கு வந்திருக்க வேண்டும். தனது மனைவி காந்தாரியின் சகோதரன் சகுனியின் சொற்களே திருதராஷ்டிரனுக்கு வேதவாக்காக இருந்தது. மூத்த இளவரசன் தான் இருக்க தனது குருட்டுத்தன்மையைக் காரணம் காட்டி பாண்டுவுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது திருதராஷ்டிரனுக்கு […]
ப.மதியழகன் அஸ்வத்தாமன் துரோணரின் ஒரே மகன். துரியோதனனின் உற்ற நண்பன். கர்ணன் துரியோதனனுக்கு வலதுகண் என்றால் அஸ்வத்தாமன் இடதுகண். பிராமண குலத்தில் பிறந்த அஸ்வத்தாமன் சத்ரியனாக ஆசைப்பட்டான். பால்யத்தில் வறுமையின் கோரப்பிடிக்கு அஸ்வத்தாமனும் தப்பவில்லை. துரோணர் கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக நியமிக்கப்பட்ட பின்புதான் அவர்கள் வாழ்வில் சுபிட்சம் பிறந்தது. பாஞ்சாலதேச மன்னனாகும் வாய்ப்பு கிடைத்தும் துரியோதனன் மீது கொண்ட பற்றினால் அதை அலட்சியப்படுத்தி வந்தான். துரியோதனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் பொது எதிரி பாண்டவர்கள் தான். துரோணர் தனது […]
அர்ச்சுனன் ஆகச்சிறந்த வில்லாளி, வில்வித்தையில் தனக்கு நிகராக யாருமில்லை என்ற கர்வம் அவனிடமிருந்தது. மானுட மனம் தன்னை தன்னிகரற்றவன் என்றே கருதிக் கொள்கிறது. தன்னைவிட வல்லமை வாய்ந்த ஒருவனைக் காணும்போது வாழ்வு பற்றிய நடுக்கமும், மரணம் பற்றிய பயமும் அவனுள் ஏற்படுகிறது. அர்ச்சுனனை தனது திறமையின் மீது அவநம்பிக்கை கொள்ள வைத்தவர்கள் இருவர் ஒருவன் ஏகலைவன் மற்றொருவன் கர்ணன். கானகத்தில் தனது வளர்ப்பு நாயின் வாய் அம்பினால் தைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறான் அர்ச்சுனன். […]
விதி வெல்லப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது. சகலரையும் தனது கைப்பாவையாக்கிக் கொள்கிறது. மனிதனின் ஆசையே அவன் விதிவலையில் சிக்கிக் கொள்வதற்குக் காரணமாக அமைகிறது. மண்ணிலிருந்து தோன்றியவனுக்கு மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையை விடமுடியவில்லை. மற்ற இரண்டு ஆசைகளும் பெண்ணாசையை மையப்படுத்தியே சுழலுகின்றன. உலக வரலாற்றில் பார்த்தோமானால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் பெண்ணாசையால் மண்ணோடு மண்ணாக சரிந்திருக்கின்றன. இராமாயணத்தில் சீதை மீது வைத்த ஆசையே இராவணனின் முடிவுக்கு காரணமாக அமைந்தது. பீஷ்மர் இது வெறும் பெயரல்ல. […]
கர்ணன் தன்னை ஒரு சத்திரியன் என்று அறிந்து கொண்ட பின்பு தான் அவனுக்கு அழிவு வந்தது. பாண்டவர்களும், கெளரவர்களும் துரோணரிடம் தனுர் வேதம் பயிலுகிறார்கள். கர்ணனுக்கு ஆயுதக் கலை மீது அலாதிப் ப்ரியம் ஆனால் துரோணரோ தேரோட்டி அதிரதனின் மகன் தானே நீ சூதனுக்கு என்னால் சொல்லித்தர முடியாது என மறுத்துவிடுகிறார். கர்ணன் முன்பு இருக்கும் ஒரேயொரு வாய்ப்பு பரசுராமர் ஆனால் அவரோ சத்திரிய குல விரோதி எனவே கர்ணன் தன்னை பிராமணன் என்று […]
கிருஷ்ணர் ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிப் போட்ட ஒருவனின் பெயர். ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவன். கிருஷ்ணனின் பேச்சு, தோற்றம், விளையாட்டு, எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அந்த நந்வனத்தில் எல்லோரும் கோபிகைகளாகி கிருஷ்ணனை தாலாட்டினார்கள். நித்யமான ஒன்றை அவன் கண்டடைந்து விட்டதினாலேயே முதலில் மனுவுக்கு இதனை நான் உரைத்தேன் என்று அர்ச்சுனனிடம் அவனால் சொல்ல முடிந்தது. கிருஷ்ணனைப் பொறுத்தவரை வாழ்க்கையே திருவிழா தான். அவன் பரமாத்மா, கர்மவினையிலிருந்து தப்பித்துவிட்டவன் பிறப்புக்கு முன்னால் உள்ளதையும் இறப்புக்கு […]
அர்ச்சுனனுடைய குறி எப்போதும் தப்பியதே இல்லை. அர்ச்சுனனுடைய அம்பு இலக்கை அடைந்தபோது சுயம்வர மண்டபத்தில் வில்வித்தையில் தோற்றதினால் மனம் குமைந்து கொண்டிருந்த துரியோதனனும் கர்ணனும் தலைகுனிந்து கொண்டார்கள். திரெளபதியின் பேரழகு இவளோடு ஓரிரவாவது வாழ்ந்துவிடமாட்டோமா என்று ஆடவர்களை ஏங்க வைக்கும். இன்னொருவனின் மனைவியாகப் போகின்றவளை துரியோதனன் வஞ்சகமாக அடையத் துடித்தான். அவனுடைய வெறி எதில் போய் முடியுமென்று வியாசருக்குத் தெரிந்திருந்தது. அர்ச்சுனன் தாயிடம் ஆசிபெற வருகிறான். வில்வித்தையில் வென்று பாஞ்சால தேச இளவரசியை […]
பின்னூட்டங்கள்