author

கல்பீடம்

This entry is part 20 of 23 in the series 14 ஜூன் 2015

மனிதனுக்கும் கடவுளுக்குமான உரையாடல் – நீ தடுக்கி விழுந்தால் இடறியது என் கால் என்று அறி என்றான் இறைவன் நான் நாளை இருந்தால் உன் அதிகாரம் இங்கே கேள்விக்குறி என்றான் மனிதன் வானளாவிய அதிகாரம் படைத்த என்னை கோவிலில் வைத்து பூட்டிவிட்டாயே என்றான் இறைவன் நான் எழுப்பிய ஆலயத்தில் யார் உன்னை குடிபுகச்சொன்னது என்றான் மனிதன் வருடத்தில் ஒருமுறை தானே என்னை வீதியுலா அழைத்துச் செல்கிறாய் என்றான் இறைவன் எங்களின் சரண கோஷத்துக்கு ஏன் மயங்குகிறாய் என்றான் […]

கவிதைகள்

This entry is part 15 of 22 in the series 30 மார்ச் 2014

வாய்ப்பு   அந்த சொல் உச்சரிக்கப்பட்டுவிட்டது அப்போது நீ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாய் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது தான் அந்தச் செய்தியை கேள்விப்பட்டேன் விரல்களிலின்றி மொக்கையாக இருக்கும் கைகள் அடிக்கடி நினைவுக்கு வந்தன கழிவிரக்கம் கொள்வதற்கு ஊனமாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை பள்ளிகளில் பென்சிலைக் களவாடியது ஏனோ ஞாபக அடுக்குகளில் வந்து போகிறது கவிதை எழுத ஆரம்பித்ததிலிருந்து மதுவில் நீந்துவதை மறந்திருந்தேன் எத்தனையோ ரட்சகர்கள் தோன்றினாலும் வாழ்க்கையை நேர்த்தியாக்க யாருக்கும் வழங்கப்படவில்லை மீண்டும் ஒரு […]

வலி

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

  பாலா தான் முதலில் அவளை நேசித்தான். அவளின் சம்மதம் அறிய ஆவலாய் இருந்தான். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய முரளிக்கு அவளைப் பிடித்துப் போய்விட்டது. தனது கறுப்பு நிறத்தை எண்ணி கழிவிரக்கம் கொண்டான் பாலா. தோற்றமே பெண்களை முதலில் கவர்ந்திழுக்க உதவுகிறது என பத்திரிகைகளில் படித்துள்ளான். தன் உயரத்தை தானே அறியாதது எண்ணி கவலை அடைந்தான். ‘ஒன்றைப் பெற  ஏதாவதொன்றை இழந்து தான் ஆகவேண்டும்’ என்று அப்பா அடிக்கடி சொல்வார். எதிர் வீட்டுத் தாத்தா ‘வளர்க்க நினைக்கிறவன் கையில  […]

பிழைப்பு

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

  இங்கேயே இருந்துவிடவா எனக் கேட்கிறேன் குலதெய்வம் கோயில் விபூதியை நெற்றியில் இட்டு ஊதுகிறாய் வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டைப் பிரிகிறேன் அவள் கழுத்தில் தொங்கும் மஞ்சள் கயிறு எனது இயலாமையின் வெளிப்பாடு பஞ்சத்தில் அடிபட்டது போல் பிள்ளைகள் படுத்துக் கிடக்கின்றன நைந்த புடவையின் முந்தானையால் கண்ணீரைத் துடைத்து விடுகிறாய் வெள்ளிக் கொலுசை காகித பொட்டலத்தில் மடித்து கைகளில் திணிக்கிறாய் வாழ்க்கை கடல் எங்கு நம்மை கரை சேர்க்கும் எனத் தெரியாமல் பேருந்தில் மொழி தெரியா ஊருக்கு பயணித்துக் […]

கவிதைகள்

This entry is part 17 of 29 in the series 12 ஜனவரி 2014

நிந்தனை   ஒன்றுக்கிருக்க தெருவோரத்தில் ஒதுங்கியவனின் காலில் நரகல் பட மலம் கழித்தவனின் வம்சாவளியை திட்டியபடியே சைக்கிளை மிதிப்பான். ——————————-   விலை   சுவரொட்டியைத் தின்னும் பசுக்களுக்குத் தெரியாது அவள் ஆடை குறைப்புக்கு எவ்வளவு வாங்கினாலென்று. ———————-   பாவமூட்டை   தேவாலயத்தில் பாவிகள் ஒன்று கூடி பாவமூட்டையை விட்டுச் செல்வர் குட்டி தேவதைகளை பிரிய முடியாத கர்த்தர் வாசல் வரை வந்து வழியனுப்புவார்.

நிராகரிப்பு

This entry is part 19 of 32 in the series 15 டிசம்பர் 2013

உதாசீனப்படுத்துதல் என்பது கொலையைவிட கொடூரமானது விடை பெறுவதற்கு முன்பிருந்த நான் எங்கே போயிற்று ஆதாமின் சந்ததிகளே நீங்கள் ஆறுதல் கூறாதீர்கள் இதயம் அழுவதை கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறது சிநேகிதிகளுக்கு தெரிவதில்லை என்னுள் குருட்ஷேத்திரம் நடப்பது அருந்தப்படாத கோப்பையில் அன்பு விளிம்பு வரை தெரிகிறது அழுகை ஓர் ஆயுதம் அதை நீ தெரிந்து வைத்திருக்கிறாய் உள்ளம் எனும் வீடு காலியாக இருக்கிறது வாடகை தரவேண்டாம் காரியம் சாதித்து கொள்வதிலேயே கவனம் செலுத்த வேண்டாம் நீ கண் பார்க்கும் போதெல்லாம் நான் […]

படித்துறை

This entry is part 28 of 34 in the series 10 நவம்பர் 2013

    வாழ்க்கைக் கிணற்றில் எத்தனையோ பக்கெட்டுகள் காணாமல் போயின கவனமாக பயணம் செய்யுங்கள் நீங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் அடுத்ததாக இருக்கலாம் புகைவண்டியில் உங்களது சுமையை தோளில் சுமக்காதீர்கள் மின்விசிறி ஓடாததால் வியர்வையில் குளிக்க நேர்ந்தது காகிதம் தின்னும் ஆவினங்களுக்குத் தெரியாது சுவரொட்டியில் அழைப்பு விடுப்பது எந்த அரசியல் தலைவரென்று விடுகதையாக பேசும் கிழவி உச்சிவெயிலில் மயங்கிச் சரிந்தாள் இப்போது  மரணப் புதிருக்கு விடை கண்டிருப்பாள் பித்ருக்களுக்கு திதி கொடுத்த நாளில் கொல்லையில் கண்ட காக்கா கூட்டத்தில் […]

ப மதியழகன் சிறு கவிதைகள்

This entry is part 12 of 26 in the series 27 அக்டோபர் 2013

அலை   பாதத்தின் கீழே குழிபறிக்கும் அலைகளுக்குத் தெரியாது இவன் ஏற்கனவே இறந்தவனென்று.     சில்லென்று   உறக்கத்தில் இருக்கும் மரங்களை உசுப்பிவிட்டுப் போகிறது மழை.     கூடு   பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது பரண் மீது அணில் கட்டிய கூட்டினை கலைத்துவிட்டோம் அந்தியில் கூடு திரும்பிய அணில் எப்படித் தவித்திருக்கும் என்ற குற்றவுணர்வு மட்டும் அடுத்த பொங்கல் வரை நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.     அதுபோல   புளிய மரம் […]

சிறுகவிதைகள்

This entry is part 7 of 31 in the series 20 அக்டோபர் 2013

களவு சல்லடை போட்டு தேடியாகிவிட்டது கடல் தான் களவாடிப் போயிருக்கும் உன் காலடிச்சுவடை. வகுப்பு தேவதைகளின் பயிற்சிக் கூட்டத்தில் குழந்தைகள் வகுப்பெடுத்தன. அஸ்தி புழங்குவதற்கு காவேரி அஸ்தியைக் கரைப்பதற்கோ கங்கை. குயில்பாட்டு அடர் வெண்பனி மூடியிருந்தது சாலையை விடியலை வரவேற்கும் விதமாக கருங்குயில் மரக்கிளையில் அமர்ந்து ஆனந்தமாக பாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் தீபத்தை ஏற்றி வைத்து தீக்குச்சி கரியானது. பிம்பம் நகர்ந்து கொண்டிருக்கும் நதியலையில் எனை பார்த்துச் சிரிக்கும் என் பிம்பம். உதயம் மலை முகட்டில் சூரியன் […]