சில்லரை நாணயமே நீங்களும் பெண்களோ ஒன்றாய் இருந்தால் கலகலப்புச் சத்தந்தான் பெண்கள்போல் வட்டமான அழகிய முகமுடய உங்கள் தலைக்குப் பின் தானே பூ இருக்கிறது மங்கயர்போல் மகத்தான பக்திகொண்ட உங்கள் காணிக்கையால் கோவில் உண்டியல் நிரைகிறது மாதர்கள்போல் இரக்க குணமுடய உங்களால்தான் பிச்சைக்காரர்கள் வாழ்க்கையும் உருள்கிறது ஆனால் சிறுவிசயத்துக்காக பெரிதாக சண்டையிட்டால் சில்லரைத்தனம் என்று சொல்லுவதேன்? இதுவும் பேதையவர் குணம்தானோ! பா. திருசெந்தில் நாதன்
நிலாக்காதலனே நீயும் என்போல் உன் காதலியாம் பூமியை சுற்றி சுற்றி வருகிறாய் அவளை எண்ணி எண்ணி இளைக்கிறாய் அவளோ என் காதலி போன்று பணக்கார சூ¡¢யனை விரும்பி அவன்பின் வருடக்கனக்காய் சுற்றுகிறாள் மனம் தளர்ந்துவிடதே என்னைப்போல் முதிர்கன்னியானயுடன் அவர்களுக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள் பா. திருசெந்தில் நாதன்