Articles Posted by the Author:

 • மரணவெளியில் உலாவரும் கதைகள்

  மரணவெளியில் உலாவரும் கதைகள்

    மரணவெளி.. அழகானது. எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி. மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட. மரணம் காலத்தை வென்ற காலச்சூத்திரம். புத்தனும் ஏசுவும் சித்தர்களும் மரணவெளியில் நட்சத்திரங்களாக இருந்தாலும் நிகழ்காலத்தின் முன் அவர்கள் கடந்தகாலமாக இருப்பது மட்டுமே மரணம்’ காலத்தை வென்று நிற்கும் காலச்சூத்திரத்தின் முதல் விதி. பூமியைப் போல உயிரினங்கள் வேறு எந்த கிரஹத்திலாவது இருக்கிறதா என்பதைத் தேடும் அறிவியல் உலகம், அங்கெல்லாம் மரணத்தின் சுவடுகள் இருக்கிறதா என்பதையே […]


 • சிவதாண்டவம்

  சிவதாண்டவம்

  புதியமாதவி, மும்பை ஊர்த்துவ தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ…. நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ ஒலியில் கரைந்துவிட உன் உமையல்ல நான். அண்ட சராசரங்களை எனக்குள் அடக்கும் யோனி பீடத்தில் உன் நெற்றிக்கண் தீப்பிழம்பாய் எரிந்துச் சாம்பலாகிப் போனது. அந்தச் சாம்பலிலிருந்து உன் ஆட்டத்திற்குள் அடங்கும் காத்யாயனி தேவியைக் கண்டுபிடித்திருக்கிறாய். அவளோடு நீயாடும் சிருங்கார தாண்டவம் உனக்காக என்னை ஏங்கித் தவிக்கவிடும் என்ற கனவுகளில் நீ. கங்காதேவியையும் துணைக்கு அழைக்கிறாய். […]


 • காதலின் தற்கொலை

  காதலின் தற்கொலை

  புதியமாதவி, மும்பை நான் பறவையைக் காதலித்தேன் அது தன் சிறகுகளில் என்னை அணைத்து வையகமெங்கும் வானகமெங்கும் பறந்து திரிந்தது. விட்டு விடுதலையானக் காதலின் சுகத்தை அப்போதுதான் அனுபவித்தேன். நான் ஆமையைக் காதலித்தேன் அவசரப்படாமல் அருகில் வந்தது. தேரில் பவனிவரும் மதுரை மீனாட்சியைப் போல அதன் ஒடுகளே சிம்மாசனமாய் கம்பீரமாக அசைந்து நடந்தேன். கடல் அலைகளில் பாய்மரக்கப்பலாய் பவனி வந்தேன். நேற்று கோபியர் கூட்டத்தில் நானும் நுழைந்தேன். அப்பத்தைப் பங்குவைத்த பூனையின் கதையாய் காதலைக் கூட கண்ணா.. நீ […]


 • மாய க்குகை

  மாய க்குகை

  அந்தக்குகை அப்படியொன்றும் இருட்டானதாக இல்லை தொலைதூரத்திலிருந்து பிடித்து வந்த நட்சத்திரங்களை கயிறுகளில் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டிருந்தார்கள். மின்மினி  வெளிச்சத்தில் குகையின் பிரமாண்டம் பயமுறுத்தியது. நடக்க நடக்க நீண்டு கொண்டே போன குகையில் வெளியை செல்ல  வாசல் எங்காவது இருக்கும். ஒருவேளை யாரும் திறக்காமல் பூட்டியே இருப்பதால் கதவுகளும் சுவர்களாய் காட்சியளிக்கலாம். புறப்பட்ட இடத்திற்கே வந்து விட்டதால் பெருமூச்சு விடும் கால்கள் இடறி விழுந்த வேகத்தில் திறந்தது கதவு. கண்ணைக்கூசும் வெளிச்சம் கடலலை சப்தம் காற்றாடி அறியாத காற்றின் […]


 • என்னால் எழுத முடியவில்லை

  என்னால் எழுத முடியவில்லை

  என்னால் எழுத முடியவில்லை அடுக்களையில் ஆத்தங்கரையில் வயக்காட்டில் வாய்க்காலில் குளக்கரையில் கொள்ளைப்புறத்தில் ஒதுங்கும்போதெல்லாம் ஓசையின்றி வளர்த்த என் மொழி உயிரூட்டி வளர்த்த என் மொழி குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய் என்னால் எழுத முடியவில்லை.   உன் வாரிசுகளைப் பாலூட்டி வளர்க்கும் முலை உன் பாலியல் வறட்சியைத் தீர்க்க அணைகட்டி அழுகுப்பார்த்தப்போதே இயல்பான என் உடல்மொழி உன் காமத்தீயில் கருகிப்போனது என்னால் எழுத முடியவில்லை.   களவும் கற்பும் நீ எழுதிவைத்த இலக்கணம்தான். […]


 • அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….

  அமரர் மலர்மன்னன் அவர்களுக்கு….

      திண்ணை உறவுகள் தெருமுனையில் முடிந்துவிடும் என்பார்கள். நாம் சந்தித்த திண்ணையும் சரி நம் உறவுகளும் சரி முடியாமல் மரணித்தப் பின்னும் காலனை வென்ற புதுமைப்பித்தனின் கிழவியாய் அருகிலிருந்து மயிலிறகாய் வருடிக் கொடுக்கிறது.   எப்படி சொல்வேன்? “நீ இல்லை “என்பதை நீயே அறிவித்த உன் கைபேசி குறுஞ்செய்தி அப்பாவின் மரணத்தை மகள் அறிந்த தருணங்கள் இரண்டாவது முறையாக மீண்டும் அதே வலியை உணர்ந்தேன்.     எப்போதாவது பேசிக்கொள்வோம் அதை எப்போதும் நீ எல்லோரிடமும் […]


 • மானுடம் போற்றுதும்

  மானுடம் போற்றுதும் மானுடம் போற்றுதும் இருக்கின்றார் இவர்களெல்லாம் இவ்வுலகில் என்பதினால் மானுடம் போற்றுதும் எம் மானுடம் போற்றுதும். இன்னாரைப் போல நீயும் இதெல்லாம் செய்ய வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம் அடையாளம் காட்ட நம்முடன் யார் இருக்கிறார்கள்:? அரசியலாகட்டும் சமூக வாழ்வியலாகட்டும் ஆன்மிகமாகட்டும்\ ஊடகங்களாகட்டும் கல்வி துறையாகட்டும் எங்கேயும் எவருமி;ல்லாமல் இருக்கின்ற வெற்றிடம் நம்மைப் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. சரியானவர்களுக்கு/தகுதியானவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதை விட ஆபத்தானது தவறானவர்களுக்கு/ தகுதியில்லாதவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது என் […]


 • இந்திய தேசத்தின் தலைகுனிவு

  இங்கே யாருக்கும் வெட்கமில்லை சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு. 2012, ஏப்ரல் மாதம் டி.பி சத்திரம் என்ற ஊரில் மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். நம் ஊர் தொலைக்காட்சிகளுக்கு அது வெறும் பரபரப்பான செய்தியாக மட்டுமே இருந்தது. பார்ப்பவர்களுக்கும் அதைப் பற்றிய எவ்விதமான சொரணையும் […]


 • இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை

  இந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை

  புதியமாதவி   தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது சரியா? அல்லது மக்கள் எவ்வழி தலைவனும் அவ்வழி என்று முடிவு செய்வது சரியா? எது சரி?   நம் வளரும் குழந்தைகளுக்கு தலைவர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட மறைந்த தலைவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்பது நம் தலைமுறைக்கான சோகம், அவலம். ஏன்?   காலையில் குடிக்கும் காஃபியிலிருந்து தண்ணீர், பால், பத்திரிகை, படம், பள்ளிக்கூடம் … எங்கும் நிறைந்திருக்கிறதே இந்த […]


 • பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.

  பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.

  இந்தியா ஜனநாயகநாடு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை. இந்திய அரசியலமைப்பில் நால்வருணப் பாகுபாடு இருக்கிறதா? இல்லை. தமிழ்நாட்டில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறதே, தெரியுமா? தெரியும். சட்டத்தை நடைமுறை படுத்த முடியுமா? முடியாது! !பிறகு என்னய்யா வெங்காயம்!! நீங்களும் உங்கள் சட்டங்களும். **** எல்லோரும் தமிழ்நாட்டில் அர்சகராகலாம் என்று சட்டமியற்றப்பட்டதை தங்களின் மகா ம்கா சாதனையாக எழுதியும் பேசியும் என்னவோ பெரிய புரட்சி நடத்திவிட்டதாக அரசியல் கட்சி சொல்லிக்கொண்டிருக்கும்போதே விட்டேனா பார் என்று […]