Articles Posted by the Author:

 • கள்ளக்காதல்

  கள்ளக்காதல்

      காதலன் இல்லாமல் வாழ்ந்துவிட முடிகிறது கவிதை இல்லாமல் வாழ்வது ?     கட்டில் மெத்தையில் காமம் கூட அந்த மூன்று நாட்கள் முகம் சுழித்து விலகிக்கொள்கிறது. கவிதை மட்டும்தான் அப்போதும் காற்றாய் சிவப்புக்கொடி ஏந்திய தோழனாய் துணைநிற்கிறது.   சுவடிகளில் சிறைவைக்கப்பட்டிருந்த கவிதைமொழியை விடுதலையாக்கிய பாட்டனின் பாடல் வரிகள் எல்லைகள் தாண்டி எப்போதும் என் வசம்.   ஆளரவமில்லாத காட்டுப்பாதையில் பூத்திருக்கும் செடிகளின் இலைகளின் அசைவில் கவிதைமொழி கண்சிமிட்டி கண்ணீர்விட்டு கட்டி அணைக்கிறது. […]


 • மணமுறிவும் இந்திய ஆண்களும்

                              இந்தியாவில் அண்மைக்காலங்களில் திருமண முறிவுகள் பெருகி வருகின்றன. 1980களில் இந்திய தலைநகர் புதுடில்லியில் விவாகரத்து வழக்குகளை கவனிக்க 2 நீதிமன்றங்கள் தான் இருந்தன. இன்று 16 நீதிமன்றங்கள் விவாகரத்து வழக்குகளைக் கவனிக்க இருந்தும் போதவில்லை. மராத்திய மாநிலத்தில் ஓராண்டில் சட்டப்படி மணமுறிவு பெற்றவர்கள் 43000. அதில் மும்பையில் 20,000, புனேயில் 15000. கல்யாணமாலை இணைய தளத்தில் இரண்டாவது […]


 • இதுவேறு நந்தன் கதா..

  தி பாய் இன் ட ஸ்டிரிப் பைஜாமாஸ் (The boy in the striped pyjamas))) திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்த போது அந்த புருனோவாக நடித்தப் பையனின் முகமும் அந்த யூதர் பையனின் முகமும் இப்போதும் மனசில் நிற்கிறது. அந்தக் கதையை அத்துடன் விட்டுவிட முடியவில்லை. கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் அறிந்த பாடத்திட்டங்களில் இடம் பெறாத எத்தனையோவரலாற்று நிகழ்வுகளை அறிந்துக் கொள்ளும் ஒரு தேடலில் ஹோலோகொஸ்ட் என்ற சொல்லை அந்தச் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரமான அதிர்ச்சி தரும் […]


 • என் முகம் தேடி….

  என் முகம் தேடி….

  சிவப்பும் மஞ்சளுமாய் பழுத்த இலைகள் பாதையோரத்தில் பாதங்களைத் தொடும் தூரத்தில் ரொம்ப தூரம் நடந்துவிட்டேன் ஒவ்வொரு விடியலும் வெவ்வேறு முகங்களுடன் தனியாகவே நடக்கின்றன என்னைத் தொலைத்தப் பாதையில். ஒவ்வொரு முகத்திலும் என் முகத்தின் சாயலைத் தேடி களைத்துப் போய்விட்டேன் எங்காவது தாகத்துடன் என் முகம் தவித்துக் கொண்டிருக்கலாம். வழிப்போக்கன் சிந்திய எச்சில் பருக்கையைத் எடுத்து தின்று விக்கிக்கொண்டிருக்கலாம். மஞ்சள் கயிற்றோடு மாங்கல்ய பெருமையை பேசிக் கொண்டிருக்கலாம். எது எனக்கான முகம் என் முகம் காட்டுவதோ உன் கண்ணாடி […]


 • யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்

  யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்

  உலகத்தின் மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக சற்றொப்ப 0.25% எண்ணிக்கையில் இருக்கும் யூதர்கள், அறிவுத்திறனில் வல்லவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்கா மக்கள் தொகையில் 3% ஆக இருக்கும் யூதர்கள் அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்றவர்களின் எண்ணிக்கையில் 27%. கணினித் துறையில் மிகச் சிறந்த விருதுகள் பெற்றவர்களும் இவர்களே. ஏன், செஸ் விளையாட்டில் உலகச் சாம்பியன்களின் 50% யூதர்கள்தான். ஐரோப்பிய மக்கள் சமூகத்தில் யூதர்களின் அறிவுத்திறன் (அதாவது IQ ) முன்னிலை வகிக்கிறது. மிக அதிகமாக வன்கொடுமைகளை அனுபவித்த இனமாகவும் […]


 • பாரதிதாசனின் குடும்பவிளக்கு

  கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான். பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே (சஞ்.ப.சா. தொ.1) மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! (பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி) என்றெல்லாம் பெண் விடுதலையைப் பேசியவர்தான் பாரதிதாசன். ஆனால் அது என்னவொ தெரியவில்லை, . பாரதிதாசனின் குடும்பவிளக்கு கவிதை வரிகளை வாசித்தப் பின் முதல் முதலாக எனக்கு ஏற்பட்ட […]


 • என் சுற்றுப்பயணங்கள்

  என் சுற்றுப்பயணங்கள்

  மரத்தின் இலைகள் மஞ்சளும் சிவப்புமாய் நிறம்மாறிக் காத்திருக்கின்றன இலையுதிர்க்காலத்திற்காய் என்னைப் போலவே. வெள்ளை மனிதர்களுக்கு நடுவில் கருங்காக்கைகள் கத்துவதும் கூட காதுகளுக்கு சங்கீதமாய். எவரும் துணையில்லாத பயணத்தில் செக்குமாடுகளாய் பூமியைச் சுற்றியே வலம் வருகின்றன என் பால்வீதிகள். எப்போதாவது என் வட்டத்தைத் தாண்டி எட்டிப்பார்க்கும் கண்களை எரித்துவிடுகின்றன எரிநட்சத்திரங்கள். கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றின் நீள அகலத்தைஒட்டியே தீர்மானிக்கப்படுகின்றன எனக்கான என் சுற்றுப்பயணங்கள்.


 • மகளிர் தினமும் காமட்டிபுரமும்

  மகளிர் தினமும் காமட்டிபுரமும்

  இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் தொழில் செய்ய ஆரம்பிக்கிறார்கள், அவர்களில் 3 பேர் நிர்பந்தம் காரணமாக இத்தொழில் செய்ய வந்தவர்கள் .அதிலும் 35.47% பெண்கள் 18 வயது கூட நிரம்பாதவர்கள் என்பதை இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பக அமைச்சர் ரேணுகா சவுத்ரி ஒத்துக்கொள்கிறார். அடிமைத்தனத்தையும் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து பணம் சம்பாதிப்பதையும் எதிர்த்து சட்டங்கள் பல எழுத்தில் இருக்கின்றன. இப்பெண்களின் புனர் வாழ்வுக்காக பல்வேறு நலத்திட்டங்கள், சட்டங்கள், ஆய்வுகள், […]


 • பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

  பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

  நாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க முடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார் என்று சொல்வதைவிட மும்பை மண்ணும் மும்பை மனிதர்களும் அவர் கதைகளின் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருப்பதால் அதுவே அவர் எழுத்துகளின் தனித்துவமான அடையாளமாக இருக்கிறது. நாஞ்சில் நாடன் என்ற மானுடன் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. நாஞ்சில் நாடன் என்ற படைப்பாளி இதே இந்த மும்பை மண்ணில் எழுத ஆரம்பித்தக் காலக்கட்டத்தில் தீபம் இதழில் […]


 • மாதா+ பிதா +குரு < கொலைவெறி

  ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால் திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். ஆனால் சமூக ஆர்வலர்களுக்கு இந்தச் செய்தி சமூக அவலங்களின் எதிரொலி. ஓர் அபாயச்சங்கு. இந்தச் செய்தியின் இரண்டு பக்கங்களையும் பார்த்தாக வேண்டும். ஆசிரியரைக் கொலை செய்ய நினைத்ததே தவறுதான். மன்னிக்க முடியாதக் குற்றம் தான். ஆனால் இந்த விபரீத முடிவெடுக்க அவன் மட்டும் தான் காரணமா? உண்மையான குற்றவாளிகள் யார்? *பள்ளி நிர்வாகம்* […]