Articles Posted by the Author:


 • ஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்

  ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரிய வீ ர விளையாட்டு என்ற குரல் ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலை ஒட்டி ஓங்கி ஒலிக்கும் குரலாக இருக்கிறது .. இந்த ஆண்டு என் மதிப்பிற்குரிய தோழி மாலதி மைத்ரி அவர்களும் ஒரு கருத்தை வைத்திருப்பாதாக அறிந்தேன். அதாவது பார்முலா 1, ஃபார்முலா 3 போன்ற மேல்தட்டு மக்களின் வீர விளையாட்டுகளுக்கு ஆதரவளிக்கும் அரசு கிராமப்புற மக்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறது? […]


 • 2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்

  2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்

  ஓரளவு அறிமுகமான எழுத்தாளருக்கு / அரசியல் விமர்சகருக்கு தமிழக இலக்கிய அரசியல் வட்டத்தில் அனுபவமிக்க ஒரு ஃகாட் ஃபாதர்/ஃகாட் மதர் தேவை. பிரபலமான அரசியல்வாதிகளின் அரசியல் அறிவை அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் அறிந்துக் கொண்டதால் தன்னுடைய அரசியல் ஞானம் அவர்களை விட எவ்வகையிலும் தரம் குறைந்ததில்லை என்று திடமாக நம்புகிறார். மிகப் பிரபலமானவர்களின் பிரபலமான படைப்புகளை வாசித்த அனுபவங்கள் மூலம் அவர்கள் பிரபலமான சூத்திரத்தை அவரும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு , அறிந்தவர்கள் சொன்ன அண்மைக்கால […]


 • ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)

  ஒரு வானம்பாடியின் கதை(கவிஞர் சிற்பியை முன்வைத்து)

  பூமி உருண்டையைப் புரட்டிப்போடும் நெம்புகோல் கவிதையை வானம்பாடிகள் பாடிவிட்டதாக கல்லூரிவாசல்களில் கவிதைகளுடன் அலைந்துக்கொண்டிருந்தக் காலக்கட்டத்தில் மீராவுடன் சேர்ந்து அறிமுகமான கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் சிற்பி. பிற்காலத்தில் தேடலை நோக்கிய பயணத்தில் வானம்பாடிக் கவிஞர்களின் அபரிதமான ஒலிச்சேர்க்கை நெருடலாகிப் போனது. அப்போது வானம்பாடிக் கவிஞர்களும் எங்கள் விமர்சனங்களுக்கு தப்பவில்லை. எனினும் சிற்பி என்ற கிராமத்து நதி விளை நிலங்களை நோக்கி தன் பயணத்தை மாற்றிக்கொண்டதும் எண்ணற்ற கிளைநதிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஒரு பிரமாண்டமான ஜீவநதியாக வற்றாத நீருடன் இலக்கிய […]


 • இந்திரனும் அருந்ததிராயும்

  இந்திரனும் அருந்ததிராயும்

  ஒன்று ஆதிவாசிகளின் வாய்மொழிப் பாட்டு. இன்னொன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள். இருவரின் அரசியல் தளமும் வெவ்வேறானவை. ஒருவர் கலை இலக்கிய விமர்சகங்களின் ஊடாக தன் கருத்துகளை முன்வைக்கும் எழுத்தாளர். இன்னொருவர் கலை இலக்கிய விமர்சக வட்டங்களைத் தாண்டி இன்றைய சமகால அரசியல் சமூக தளத்தில் ஊடகங்களின் மிகுந்தக் கவனத்திற்கு உரியவர். முன்னவர் இந்திரன். பின்னவர் அருந்ததிராய். கட்டுரை உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவும் கவிதை புனைவுக்கு நெருக்கமாகவும் இருப்பதாகவே நம்பப் படுகிறது. கவிதைக்குப் பொய்யழகு என்று கூட சொல்லி […]


 • ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்

  ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்

  அன்னா ஹசாரே ஆதரவு பேரணிகள் மும்பையிலும் மும்பை புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன. பேரணி, போராட்டம், உண்ணாவிரதம் என்றாலே மும்பையில் ஆசாத் மைதானம் தான் எல்லோருக்கும் நினைவில் வரும். இந்திய சுதந்திர போராட்டத்தின் குரல் ஒலித்த ஆசாத் மைதானம் இன்று அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மையமாக மாறி இரண்டாவது சுதந்திர போராட்டம் என்று பதாகைகளில் காந்தியும் பகவத்சிங்கும் அருகருகே இருந்து வாழ்த்த மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறது. நேற்று (18/8/2011)நானும் என் தோழியர் மலையாள எழுத்தாளர் […]


 • காணாமல் போன தோப்பு

  காணாமல் போன தோப்பு

  காணிநிலம் வேண்டும் – பராசக்தி காணிநிலம் வேண்டும் ………………………………-அந்தக் காணிநிலத்திடையே ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் ; அங்குக் கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப்பனிரெண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும்.. பாரதி என்னை மன்னித்துவிடு… என் கிராமத்தின் எல்லை வந்தவுடன் காற்றில் கலந்து வந்த உன் பாடல் இன்று ? பாரதி, காணாமல் போனது உன் காணிநிலமா? உன் கவிதை மாடமா? அந்தத் தென்னை மரங்களா? தெரியவில்லை. திருவனந்தபுரம் விமானநிலையத்திலிருந்தோ /நாகர்கோவில் ரயில் சந்திப்பிலிருந்தோ மகிழூர்தியில் வரும்போது […]


 • பெண்பால் ஒவ்வாமை

  பெண்பால் ஒவ்வாமை

  பசுவுக்குப் பூஜை பெண்சிசுவுக்கு கள்ளிப்பால் தொல்காப்பியன் அறியாத பால்வேற்றுமை என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு  வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான  பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை என்ற  அதிர்ச்சிதரும் செய்தியும் அச்செய்தி குறித்து வந்துக் கொண்டிருக்கும்  எதிர்வினைகளும் மறுவினைகளும் மருத்துவ துறை மீது நமக்கிருக்கும்  ஒரு சில நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது.  இந்தச் செய்தி தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் தரும்  […]


 • அரசியல் குருபெயர்ச்சி

  புதியமாதவி, மும்பை. தேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது.முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனதுஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு தொந்தரவு செய்கிறார்களோ தெரியவில்லை. அரசியல் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களும்கேட்டால் ஏதொ அதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால்சொந்தக்காரர்கள் முதல் கல்லூரியில் […]