author

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி

This entry is part 6 of 24 in the series 9 மார்ச் 2014

  துரோணருடைய மகன் அசுவத்தாமன் இறந்ததாக பொய்யானத் தகவல் அளித்து அவரை மோசமான முறையில் திசை திருப்பிய அதே கவிஞன்தான் பாண்டவர் முகாமில் அர்ஜுனன் ஒருவன்தான் நேர்மையான வீரன் என்ற சித்திரத்தைத் தீட்டுகிறான். யுதிஷ்டிரன், பீமன், ஸ்ரீகிருஷ்ணர் அளவிற்குப் பொய் பேசாததால் அர்ஜுனன் அவர்களைவிடச் சிறந்தவன் என்று சித்தரிக்கப்படுகிறான். இருப்பினும் அடுத்து வருகின்ற நிகழ்ச்சியின் மூலம் அவனுடைய நிலை மிக மோசமாகச் சித்தரிக்கப் படுகிறது. அவன் ஓர் உயரியச் சத்திரியன் என்ற நிலையிலிருந்து சடாரென்று கீழே இறக்கப் […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-24 துரோணரின் வீழ்ச்சி

This entry is part 2 of 22 in the series 2 மார்ச் 2014

  பண்டைய பாரதத்தில் சத்திரியர்கள் என்பவர்கள் போர் வீரர்களாகவேக் கருதப் பட்டனர். இருப்பினும் வேறு வருணத்தவர் போரில் கலந்து கொண்டதில்லையா என்ற கேள்வி எழும். மகாபாரதத்தில் கூட வேறு வருணத்தவரான பிராமணர்களும், வைசியர்களும் போரில் பங்கு கொண்டதற்குக் குறிப்புகள் உள்ளன. துரியோதனின் படைத் தளபதிகளில் விரல் விட்டு எண்ணும்  அளவிற்கு பிராமணர்கள் இடம் பெற்றிருந்தனர். துரோணர், துரோணர் அவருடைய புதல்வன் அசுவத்தாமன், துரோணரின் சகோதரி கணவர் கிருபர் முதளியோர் அந்தணர்களே. அந்தக் காலத்தில் அனைத்து விதமான வித்தைகளையும் […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-23 கடோத்கஜனின் முடிவு.

This entry is part 6 of 20 in the series 23 பெப்ருவரி 2014

கடோத்கஜனின் மரணத்தை வருணிக்க வந்த  கவிஞர் ஸ்ரீ கிருஷ்ணரைக் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை நிருவுகிறார். இடும்பன் என்ற அரகனுக்கு இடும்பி என்ற பெயரில் ஒரு சகோதரி இருக்கிறாள். ஒரு சமயம் இடும்பனைப் போரிட்டுக் கொல்லும் பீமன் இடும்பியை மணந்து கொள்கிறான். ( என்னிடம் கேட்டால் பீமன் இடும்பி இருவரும் சரியான இணை என்று சொல்வேன் ). அவர்கள் இருவருக்கும் பிறக்கும் மகனுக்கு கடோத்கஜன் என்று பெயரிட்டு வளர்த்தனர். அவனும் வளர்ந்து ஒரு இளைய அரக்கனாகத் திகழ்கிறான் […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 22 பிற்காலக் கவிஞர்களின் ஆக்கம் பற்றியப் புரிதல். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம்.

This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

  1882-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக் கிறித்துவ மதப் பிரச்சாரச் சபையைச் சார்ந்த அருட்தந்தை.ஹாஸ்டி என்பவர் வரம்பு மீறி ஹிந்து மதத்தைப் பற்றி விமர்சனங்களை  தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் எழுதி வரத்  தொடங்கினார். பங்கிம் சந்திரச் சட்டர்ஜி இந்தக் குற்றச் சாட்டுக்களை எதிர்ப்பதென்று முடிவு செய்தார். ராம் சந்தர் என்ற புனைப் பெயரில் அதே வேகத்துடன் திருச்சபையின் குற்றச் சாட்டுகளுக்கு அதே செய்தித் தாளில் மறுப்புத் தெரிவித்தார். அது வரையில் பங்கிம் வெறும் இலக்கியவாதியாகவே கருதப் பட்டார். இதன் […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு

This entry is part 2 of 24 in the series 9 பெப்ருவரி 2014

  பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பின்னர் துரோணாச்சாரியார் கௌரவப் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். . துரோணப் பர்வத்தின் ஆரம்பப் பகுதிகளை ஸ்ரீ கிருஷ்ணர் பிரத்யேகமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல்தான் உண்டு அர்ஜுனனின் தேர் உண்டு என்று அர்ஜுனன் போகச் சொன்ன இடத்திற்கெல்லாம் தேரை ஓட்டிச் சென்றார். மகாபாரதத்தை இந்த ஒரு பகுதியை அளவுகோலாக வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் மகாபாரத யுத்தத்தை ஸ்ரீ கிருஷ்ணர்தான் தூண்டி விட்டார் என்பதும் மகாபாரதப் போர் ஸ்ரீ கிருஷ்ணர் தலைமையின் […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – 20 குரு க்ஷேத்திரம். பீஷ்மரின் வீழ்ச்சி

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

போர் நிகழ்வதற்கான காலம் கனிந்தது. யுத்த காட்சிகள் மட்டும் மகாபாரதத்தில் நான்கு பகுதிகளாக விவரிக்கப் படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பர்வம். நான்கு போர்த் தளபதிகளின் தலைமையில் நடைபெறும் யுத்தம் என்பதால் ஒவ்வொரு பகுதியும் பீஷ்மப் பர்வம் , த்ரோணப் பர்வம் , கர்ணப் பர்வம் மற்றும் சல்யப் பர்வம் என்றழைக்கப் படுகின்றது. இந்த யுத்த பரவப் பகுதிகள் மகாபாரதத்தில் சற்று ரசனைக் குறைவாக எழுதப் பட்டப் பகுதிகள் எனலாம்.கூறியவற்றைக் கூறல்,மிகைபடுத்திக் கூறல்,இயற்கைக்குப் புறம்பான விவரணைகள்,தேவையற்ற மிக நீளமான […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.

This entry is part 2 of 18 in the series 26 ஜனவரி 2014

  ஸ்ரீ கிருஷ்ணர் கிளம்பும்பொழுது கர்ணனை தனது தேரினில் அழைத்துச் செல்கிறார். கர்ணன் ஸ்ரீ கிருஷ்ணரை சிறைப் பிடிக்க வந்த கூட்டத்தைச் சேர்ந்தவன். அவனை அவர் எதற்காக தேரினில் அழைத்துச் செல்லவேண்டும்? அதனை விரிவாக எடுத்துரைப்பது ஸ்ரீ கிருஷ்ணரின் நற்குனங்களைத் தெளிவாக எடுத்துரைக்கும். போர்த்திறங்களிலும் , சட்ட நுணுக்கங்களிலும் ஸ்ரீ கிருஷ்ணர் சிறந்தவர் என்று ஏற்கனவே பார்த்து விட்டோம்.. முரண்பாடுகளை முன் நிறுத்தி அவர் காரியங்களை எவ்வாறு சாதித்துக் கொள்கிறார் என்று பார்ப்போம். இதையும் சேர்த்து ஸ்ரீ […]

அத்தியாயம்-18 – ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-2

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

ஸ்ரீ கிருஷ்ணரின் வருகையை ஒட்டி திருதராட்டிர மகராஜா அவரை வரவேற்க ஆயத்தமாகிறார். பெரிய மாளிகைகளை நவமணிகளால் இழைத்துத் தயாராக வைத்திருக்க ஆணையிடுகிறார். யானைகளையும், உயர்சாதிக் குதிரைகளையும், பணியாட்களையும், நூறு கன்னிப் பெண்களையும், கால்நடைகளையும் பரிசளிக்க ஏற்பாடு செய்தார். இவற்றையெல்லாம் பார்வையிடும் விதுரர் “ நல்லது. நீர் நீதிமான் என்பதோடு புத்திமானும் கூட. அதிதியாக வரும் ஸ்ரீ கிருஷ்ணர் நீர் கொடுக்க நினைக்கும் பரிசுப் பொருட்களைப் பெற தகுதியுடையவரே. கேசவர் எந்தப் பொருளுக்கு நன்மையை விரும்பி வருகிறாரோ அதை […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17

This entry is part 3 of 29 in the series 12 ஜனவரி 2014

ஸ்ரீ கிருஷ்ண தூது-பகுதி-1 தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வண்ணம் ஸ்ரீ கிருஷ்ணர் அத்தினாபுரம் நோக்கி புறப்பட்டார். அவரை வழி அனுப்பும் முன்னர் பாண்டவர்களும் திரௌபதியும் நிறைய கோரிக்கைகளையும் கேள்விகளையும் முன் வைக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிக்கிறார். இருப்பினும் இந்த உரையாடல்களை நாம் வரலாற்று தகவல்களாக கொள்ள முடியாது. ஆனால் இந்த உரையாடல்கள் கற்பனையாக இருப்பினும் இதன் ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணர் என்பவர் யார் அவர் எடுத்த நிலை என்ன என்பதை […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூது

This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

இரு பகைவர்களும் போருக்கு ஆயத்தமாகி விட்டனர்.இந்த நிலையிலும் துருபதனின் அறிவுரைப் படி அவருடைய புரோகிதரை கௌரவர்களின் சபைக்கு தூது அனுப்பினான். தூது தோல்வியில் முடிந்தது.ஊசி முனை அளவு நிலத்தைக் கூட துரியோதனன் பாண்டவர்களுக்கு அளிக்க முன்வரவில்லை. போர் தவிர்க்க முடியாமல் போகும்பொழுது அப்படி ஒரு போரில் பீமனையும் அர்ஜுனனையும் எதிர்ப்பது தோல்வியில் முடியும் என்பது திருதராட்டிரனுக்கு நன்கு தெரிந்திருந்தது.. எனவே திருதராட்டினன் சஞ்சயனை தூதுவனாக அனுப்பி பாண்டவர்களை பகைமை பாராட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்ள சொல்கிறான். […]