1974-இல் பிறந்த பொ. செந்திலரசு எம். ஏ. பி. எல் படித்தவர். சேலம் மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர். 25 – க்கும் மேற்பட்ட இலக்கிய ஏடுகளில் இவர் கவிதைகள் பிரசுரம் கண்டுள்ளன. காத்திரமான கவிதை மொழி , புதிய சிந்தனைகள் வழிப் படிமங்கள் இவரது கவிதைகளின் முக்கிய இயல்புகள் எனலாம். ” சாமிக் குதிரை ” ஒரு நல்ல கவிதை. நுணுக்கமான வெளிப்பாட்டில் உரிய சொற்களால் கவிதை நகர்கிறது . காற்றைக் கிழிக்கும் கனைப்புகளினூடே காது நிறைந்த […]
(தேவதச்சன்) ஆனந்த் [ 1951 ] மனநல ஆலோசகர் ; மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர். கவிதை , சிறுகதை , குறுநாவல் , கட்டுரை ஆகிய வடிவங்களைக் கையாண்டுள்ளார். மற்றும் நாவல் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார். இனி ஆனந்த் கவிதைகள் சிலவற்றைப் பார்ப்போம். ” நாளை வருமென ” …. நாளை வருமெனச் சொல்கிறார் வெறும் இன்றுகள்தான் வருகின்றன. இடையறாது எங்கிருந்து வருகுதிந்த இன்றுகள் காணாது கண்டு கண்டதாகிறது நாளை நேற்றெனச் சொல்கிறார் இன்றிலென்றும் இல்லை […]
” இப்படியொரு கவிஞரா என்று மலைப்பை ஏற்படுத்திவிட்டார் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் தமது ” பறையொலி ” கவிதைத் தொகுப்பின் மூலம் ” என்கிறார் தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன். இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவது இவர் கவிதைகளின் முக்கிய கூறாகிறது. கச்சிதமான சொற்களால் கவிதையைப் பிடித்துக் கொண்டுவந்து நம் முன் நிறுத்துகிறார். ஏதோ ஒரு கவலை இவர் எழுத்தில் மௌனமாய் நின்று கொண்டிருக்கிறது. அதன் உயிப்பை […]
சந்தனா சமையலை முடித்துவிட்டு ஒவ்வொன்றாக உணவு மேசை மீது கொண்டு கொண்டு வந்து வைக்கலானாள். உணவு மேசை முன் நான்கு வயது மகள் வாணி உட்கார்ந்திருந்தாள். துறு துறு கண்கள், பொசு பொசு கன்னம், பலாச்சுளை நிறம், வகுப்பில் முதல் மாணவி, ஆண்டு விழாப் போட்டி என்றால் எல்லா வெற்றிக் கிண்ணங்களும் வாணிக்குத்தான். சொல்லிக் கொடுத்த எதையும் மறக்காத நினைவாற்றல். ஆனால் என்ன ? பிடிவாதம் மிகவும் அதிகம். கடைசியாகச் செய்த வெங்காயப் புளிக்குழம்பு மணம் நாசியை […]
மதுரைக்காரரான மஞ்சுளாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது ! இதில் 50 கவிதைகள் உள்ளன. ” அவள் என் தாய் ” ஒரு வித்தியாசமான கருப்பொருள் கொண்ட கவிதை. கருவில் உள்ள ஒரு குழந்தையின் எண்ணங்களின் பதிவாகக் கவிதை தொடங்குகிறது. மிக எளிய நடையில் கவிதை வளர்கிறது. அசைந்து… அசைந்து அவளுள் உரசிக்கொண்டே அவளிடம் பேசுகிறேன் அவள் என் அசையை ரசித்தபடி பொறுத்திருக்கிறாள் குழந்தை பிறந்துவிடுகிறது, தாய் தூக்கத்தில் இருக்கிறாள். அவள் என்னைப் […]
இச்சிறு தொகுப்பில் 27 கவிதைகள் உள்ளன. 1960 களில் எழுதப்பட்ட கவிதைகளும் இதில் உள்ளன. கருப்பொருள் தேர்வு செய்வதில் வித்தியாசமான தனித்தன்மை காணப்படுகிறது. ” மூலைகள் ” தத்துவ நோக்கு கொண்டது. ” மூலை ” என்ற சொல் ” உரிய இடம் ” என்ற பொருளில் கையாளப்படுகிறது. கவிதை மிகவும் எளிமையாக இருக்கிறது. பூமியிலிருந்து சூரியன் வரைக்கும் அடுக்கிக் கொண்டு போகலாம் உலகில் உள்ள மூலைகளை எல்லாம் கணக்கெடுத்தால் இருந்தாலும் மூலை சமமாகக் கிடைப்பது கிடையாது […]
” ரா.ஸ்ரீனிவாசன் கவிதைகள் ” என்ற இத்தொகுப்பிற்கு ஆர். ராஜகோபாலன் அணிந்துரை தந்துள்ளார். இதில் 50 கவிதைகள் உள்ளன. ” இயந்திர உலகைப் புறந் தள்ளி இயற்கைக்குத் திரும்புதல் ” என்பது ஸ்ரீனிவாசனின் குரல் என்கிறார். ராஜகோபாலன். இவரது கவிதைகள் உரைநடை இயல்பு கொண்டவை. மொழி நயங்களைப் புறந்தள்ளிவிட்டு நகர்கின்றன. ” வெயில் ” கவிதை ஏழ்மையைச் சொல்கிறது. கீற்றின் கீழமர்ந்து பானையின் மேலும் படுத்திருக்கும் குழந்தையின் மேலும் காரை பெயர்ந்த தரையிலும் […]
பேராசிரியர் சேதுபதி மேலச் சிவபுரியில் கல்வி கற்றவர். கவிதை நாடகமும் எழுதியுள்ளார். பாரதியார் , ஜெயகாந்தன் எழுத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ” சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள் :என்ற இத்தொகுப்பில் 54 கவிதைகள் உள்ளன..புதிய சிந்தனைகள் , எளிமை , படிமம் ஆகியன இவரது கவிதை இயல்புகள் ஆகும். புத்தகத் தலைப்புக் கவிதை ஏழ்மையைச் சொற்கோலம் போட்டுக் காட்டும் யதார்த்தக் கவிதை ! குருணை பொங்கிக் கஞ்சி வடிச்சாச்சு திட்டு வாங்கி அண்ணாச்சி கடையில் […]
“கவிதை அப்பா” தொகுப்பின் படைப்பாளீ செல்மா, கவிஞர் மீராவின் மகள் என்ற ஒரு வரி அறிமுகமே போதுமானது. கவிதை நூலின் எல்லா பக்கங்களும் ‘அப்பா” என்ற தலைப்பின் கீழ் வருகின்றன. எனவே இதை அப்பா பற்றிய குறுங்காவியம் எனலாம். செல்மாவின் கவிதைகள் எளீயவை; நேர்படப் பேசுபவை.” எனக்குக்/ கவிதை எழுதத் தெரியாது/ உங்களை மாதிரி ” என்று செல்மா சொன்னாலும் இறகின் எடையற்ற எடையாய் ஒரு மெல்லிய உயிர்ப்புள்ளி இருப்பதை யாரும் உணரலாம். வல்லினம் என்று […]
எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்குமார் தந்துள்ள தொகுப்பு ‘மிச்சமுள்ள ஈரம்’ அவர் முன்னுரையில் வசன கவிதைப் பொழிiவைக் காண முடிகிறது. அதிலிருந்து ஒரு நயம்… “மரங்கள் தங்கள் நிழலோவியங்களைச் சாலையோரங்களில் வரைந்து பின் வெயில் தாழ்ந்ததும் சுருட்டிக் கொள்கின்றன.” இப்புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘மிச்சமுள்ள ஈரம்’… இதில் விரக்தி கொண்ட ஒருவன் பேசப்படுகிறான். கவிதையில் முன் பகுதியில் நைத்துப்போன மனம் பதிவாகியுள்ளது. மனிதநேயம் செத்துவிடவில்லை என்பதை ஒரு காட்சி உறுதிப்படுத்துகிறது. சிறுகல் தடுக்கி கால் இடற மரத்தடி நிழலுக்காக […]