நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள் பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு […]
கொடுமுடி காவேரி ஆற்றில் சலசலவென்று தண்ணீர் வழிந்து நழுவிச் சென்று கொண்டிருக்கிறது. ” கொடுமுடி கோகிலம் நடமாடிய வீதியல்லவா” என்றேன் நான். ” கேபி சுந்தரம்பாளைச் சொல்கிறீர்களா ” என்றார் நண்பர் .கொடுமுடி கோகிலம் என்ற புனைப்பெயரைச் சூட்டியவர் கலைஞர் கருணாநிதி. அநண்பரின் காலில் திடிரென்று சீமைக்கருவேலம் முள் குத்தியதால் ஏற்பட்ட வலியில் அவர் முகம் சிணுங்கியது. ”கொடுமுடி கோகிலம் காலத்தில் இந்தச் சீமைக்கருவேலம் மரங்கள் இருந்திருக்காது. ”அவரின் அம்மா குழந்தைகளைக்கூட்டிச் சென்று தற்கொலைக்கு முயன்ற போது […]
தமிழாசிரியர்களின் கவிதைகளைப் படிக்கையில் கொஞ்சம் பயம் ஏற்படும் எனக்கு. புறக்கணித்து வசவாய் சிலர் தள்ள முற்படுவார்கள். என் பயம் அப்படியல்ல. மொழியை நன்கு கற்றுணர்ந்தவர்கள் மொழியைப் பிரயோகிப்பதிலும் இறைச்சி, திணை என்று என்னென்னவோ பாகுபாட்டில் அவர்கள் கவிதையை சங்க விளக்கத்தில் நிறுத்தி விடுவார்கள். அப்படி இனம் காண முடியாத சிக்கலில் வேறு வகையான விமர்சன பாதிப்பில் இன்னோரு புறம் நின்று அவர்களின் கவிதைகளைப் பார்ப்பது சவுகரியமாகப்படுகிற பட்சத்தில் அவர்களின் பிரத்யோகப் பார்வை மனதில் பிடிபடாமல் போகிறதே என்ற […]
பஞ்சப்படிக்காக 1984ல் திருப்பூரில் 127 நாட்கள் நடந்த பனியன் தொழிலாளர்களின் எழுச்சிமிக்கப் போராட்டத்தை திருப்பூரின் எந்த எழுத்தாளரும் இது வரை ஏன் எழுதவில்லை. அதை ” பனியன் “ நாவலாக திருச்சியில் உள்ள தி.வெ.ரா. ஏன் எழுதியுள்ளார் என்பதுதான் முதலில் மனதில் வந்தது.தொழிலாளர்களின் போராட்டம், சிரமங்கள், வெற்றி என்ற வகையில் இதை சோசலிச எதார்த்த வகை நாவலாகக் கொள்ளலாம்.திருப்பூரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் நிகழ்வுகளின் தொகுப்புகளும் அடுக்கப்பட்டுள்ள அளவில் இதை ஒரு டாக்கு நாவல் என்றும் சொல்லலாம். […]
ஈழமக்கள் விடுதலைக்கான லட்சக்கணக்கான உயிர்தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் பல பின்னடைவுகளைத் தந்து விட்டது. யுத்தங்களின் பாதையில் நெடும்பயணம் சென்று விட்டனர் ஈழ மக்கள். அறுபதாண்டு குரல்கள் ஓய்ந்து விட்டன. இன அழிப்பு முயற்சிகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. கனவுகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. அகதிகள் நிலையை மீட்டெடுக்காமல் கொல்லப்படாமல் திரிவதே சுதந்திரம் என்றாகி விட்ட்து. அந்த நாட்டு எழுத்தாளர்கள் தொடர்ந்து வாழ்தலுக்கான நீதியையும் அநீதியையும் பதிவு செய்து கொண்டே வருகிறார்கள்.பேரழிவுகள் தந்த உள்ளார்ந்த துயரங்களைத் […]
“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க” “என்ன கதையா” “சின்னக் கதையா“ “குட்டிக் கதையா“ “குட்டிகளைப் பத்தின கதையல்ல……..சொல்லட்டுமா” “சொல்லுங்க..குட்டிகளனு யாரும் வந்திடக்கூடாது” “இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் ரொம்பவும் போர் அடிச்சுப் போச்சு. மனுசங்க மூஞ்சிய மனுசங்களே எத்தனை நாளைக்குப் பார்க்கிறது? வேற வழியில்லாம கடவுளைப் பார்த்திருக்காங்க. அவர் போர் அடிச்சுட்டுனு பிராணிகள், விலங்குகள்னு படச்சிருக்கார். அப்புறம் ஏரி, குளம், அப்புறம் மரங்கள் செடி கொடின்னு அப்புறம் பூக்கள் […]
சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும் “ தற்கொலைக்களன் “ என்று சாய கழிவைக்குறியீடாக வைத்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சமீபத்திய செய்திகளில் திருப்பூர் நகரமே ஒரு தற்கொலைக் களன் ஆகியிருப்பதை அறிய முடிகிறது.. சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலை விகிதம் திருப்பூரில் தான் அதிகம் என்பதை புள்ளி விபரக்கணக்குகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 30 தற்கொலை […]
சுப்ரபாரதிமணியன் இறையன்புவின் மொத்த சிறுகதைகளின் இயல்பை தத்துவதரிசனங்களால் மனிதர்களின் வாழ்க்கையை வளப்படும் செயல்கள் பற்றிய எண்ணங்கள்,விலங்குகள் மீதான கரிசனம், முதியோர்களின் உலகம், காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையின் கீறல்கள் என்று சிலவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த சட்டகத்தினையே இறையன்புவின் பூனார்த்தி சிறுகதைத் தொகுப்பிலும் காண நேர்ந்தது. எளிமையான கதைகள், செய்திகளைச் சொல்லும் இயல்பில் பூடகத்தன்மை, தீவிரமான அனுபவங்களைச் சொல்கிறபோதும் வெகு இறுக்கமானகதை சொல்லல் பாணியையும் வாக்கிய அமைப்புகளையும் கொண்டிராமல் எளிமையாகவே சொல்லும் இயலபு ஆகியவற்றையே அவரின் சிறப்புத்தன்மை […]
சுப்ரபாரதிமணியன் திருப்பூர் தொழில் துறை பல்வேறு சிக்கல்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் கிடைத்தாலும் தொழிலாளர் பற்றாக்குறை அதை முடிக்க முடியாமல் தாமதமாக்குகிறது.அல்லது நூல் விலை உயர்வு அல்லது மனித உரிமை மீறல்கள் என்னும்படியான சுமங்கலித் திட்டத்தில் பெண்களின் மீதான துன்புறுத்தல், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, சாயம் சார்ந்த பிரச்சினைகள் என்று இருந்து கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் செயல்பட்டு வந்த சில மேற்கத்திய நாடுகளின் ஏற்றுமதி அலுவலகங்கள் மூடப்பட்டு விட்டன. அல்லது பெங்களுருக்கு சென்று விட்டன […]
சுப்ரபாரதிமணியன் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள் ஜீன் 28ல் மறைந்தார். மன்னார்குடி புள்ளமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர். 200க்கும் மேற்பட்டச் சிறுகதைகளை எழுதியவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். நல்லாசிரியருக்கு மேலாக உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர். புள்ளமங்கலம் கிராம மக்களிடம் அவரின் குடும்பம் கொண்டிருந்த பிணைப்பும் அன்பும் சொல்லி மாளாது.அவரின் மகன் வில்சனும், மருமகளும் கூட எழுத்தாளர்களே . ( வில்சன் 75 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நெய்வேலி புத்தகக் கண்காட்சியை ஒட்டிய தினமணி சிறுகதைப்போட்டியில் வில்சனின் கதைக்கு இரண்டாம் பரிசு- […]