குடிக்க வேண்டாம் என்று அப்பாக்களை கேட்டு காலைப்பிடித்து மாணவர்களை கதறச் சொல்லி ஒரு பள்ளி அறிவுறுத்துவது பற்றி அறிந்த போது அதிர்ந்து விட்டேன். பள்ளி மாணவர்களுக்கான “ கதை சொல்லி.. “ சிறுவர் கதை எழுதும் போட்டியில் அப்பள்ளியின் 4 மாணவர்கள் பரிசு பெற்றிருந்ததையொட்டி பரிசளிக்க அப்பள்ளிக்குச் சென்றிருந்தேன். ( சில தனிப்பட்ட காரணங்களால் அப்பள்ளியின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை )ஆண்டுதோறும் ” கனவு “ அமைப்பு பள்ளி மாணவர்களுக்கு கதை எழுதும் போட்டியை நடத்திப் […]
அவளின் உடம்பு ஒன்றை அடிக்குள் சிறுத்து விட்டது. ரொம்பவும் சவுகரியம் என்பது போல் இருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு எங்காவது கொஞ்சம் எம்பி விட்டால் போதும் விறுவிறுவென்று நகர்ந்து போய் விட்டது. தரையில் எவ்வித சிரமமும் இல்லை. சட்டென உருண்டு போய் தேவையான இட்த்தில் நின்று விடுகிறது. மாடிப்படிகளில் உருண்டு போய் நின்று கொள்கிறது. இன்னும் கொஞ்சம் குதித்துப் போவதற்கு ஆயத்தம் செய்து விட்டால் போதும் எல்லாம் சுலபமாகிவிடும்.நகர்தல் இயல்பாகி விடும். இயல்பு என்பதை விட சுலபமாகிவிடும். […]
செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,பி. நரசிங்கராவின் மாபூமி போன்ற திரைப்படங்கள், சாந்தா தத் மொழிபெயர்த்த தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத் பற்றின விபரங்களை மனதில் விதைத்திருந்தன. வெளிமாநில தமிழ்ச்சஙகளின் செயல்பாடுகளை ஓரளவு இலக்கிய இதழ்களின் செய்திகள் மூலம் அறிந்திருந்தேன். அதற்கு முன் நாலைந்து ஆண்டுகளாக எனது சிறுகதைகள், கவிதைகள் கணையாழி, தீபம், தாமரை இலக்கிய இதழ்களில் […]
அடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு… அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது – கவிஞர், பத்திரிக்கையாளர் என்பதைத் தவிர. ஒரு முக்கிய இலக்கியப் பரிசுத்தேர்வில் இருந்தபோது வேதாகம், அதன் தொன்மக்குறீயீடுகள், விவிலிய மாந்தர்களின் பெயர்கள் சரளமாய் அவரின் கவிதைகளில் தென்படுவதைப்பார்த்து ஒரு மூத்தப் பேராசிரியர் அவரின் அடையாளம் பற்றி கேள்விகள் எழுப்பினார். ஆ.செங்கதிர்செல்வன், கதிர்பாரதி என்ற பெயர்களையே முணுமுணுத்தேன். ஆனால் அவர் வேறெதையோ தேடிக்கண்டடைந்தார். அந்த “ […]
அம்மா என்று வலியால் மோகன் அலறியபோது போலீஸ்காரரின் குண்டாந்தடி மோகனின் உடம்பில் எங்கே பட்டது என்பது சுசிக்குத் தெரியாமலிருந்தது. அநேகமாக முதுகில் எங்கோ பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன் உடம்பைக் கயிற்றைச் சுருட்டிக் கொள்வது போல் சுருட்டிக்கொண்டு தரையில் விழுந்தான். போலீஸ்காரர் குண்டாந்தடியை மறுபடியும் ஓங்கியபோது ” வேண்டாங்க .. வுட்டுடங்க “ என்றாள் சுசி. சற்றே வியர்த்திருந்த போலீஸ்காரர் வலது கையை ஒரு வித வலியைத் தாங்குவது போல் கீழே கொண்டு வந்தார். […]
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா விருதுகள் 2016 : அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக. அம்சன் குமார் , சென்னை ( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய விருது […]
மான் வேட்டை என்றதும் பூரித்துப் போய்விட்டேன்.அதுவும் முதுமலைக் காட்டில். சவுந்தர் சொன்னதும் மனது முதுமலைக்காட்டிற்குப் போய்விட்டது.250 கி.மீ உள்ள முதுமலைக்குப் போக முதுமையில்தான் வாய்த்தது என்பது பூரிப்பிற்கான காரணம். 58 வயதில் இப்போதுதான் முதுமலைக்குப் போக வாய்த்திருக்கிறது. அதுவும் நேரடியாக மான் வேட்டையும் கூட . மான் கறி சாப்பட முடியுமா என்று கேட்டு வைத்தேன். அதற்கு பதிலாகத் தான் சவுந்தர் “ வேட்டையாடி கறி சாப்புடலாம்… அதுவும் மான் வேட்டை “ என்றார். “ […]
ஜூன்20 : உலக அகதிகள் தினம் ‘சென்ற நூற்றாண்டின் இறுதி உலகம் முழுவதும் அகதிகளை பரப்பிவிட்டிருக்கிறது. இலங்கை தேசிய இனப் பிரச்சனைகள் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகம் பூராவும் நிறைந்திருக்கிறார்கள். வெவ்வேறு நாடுகளுக்கான போர் மனப்பான்மை, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள், தேசிய இனப் பிரச்சனைகள், உள்நாட்டுக் கலகங்கள் ஆகியவை மக்களை இடம் பெயரச் செய்து அகதிகளாக்கிவிட்டன. உலகமயமாக்கலும் அதன் தொடர்பான தொழிற் சிதைவுகளும் அகதிகளாய் மக்களை வெளித்துப்பிக் கொண்டிருக்கச் செய்கின்றன. அந்நிய முதலீடுகள் பெரிய தொழிற்சாலைகளைத் தோற்றுவித்துக் […]
(94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர், திருப்பூர் 641 604 .) * 28/6/16 செவ்வாய், மாலை 7 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர் * சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை ( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய விருது பெற்றவர்) விருது […]
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16 செவ்வாய், மாலை 5 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர் * சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை ( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய […]