author

கவிநுகர் பொழுது-24( கவிஞர் சூரியதாஸின் ,’எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, கவிதை நூலினை முன்வைத்து)

This entry is part 3 of 10 in the series 3 செப்டம்பர் 2017

கவிதை என்பது மொழியின் செயல்பாடு மட்டுமன்று; அது மனத்தின் செயல்பாடு. மொழியின் வாயிலாக நிகழ்த்திக்காட்டும் மனத்தின் செயல்பாடு. தன்னை தன்கருத்தை, தன்எண்ணத்தை எழுதிப்பார்க்கிற ஏற்பாடு. அதில் ஒரு கவிஞன் வெளிப்படுவது என்பது தான் அவனின் தனித்துவம். அது,அவன் சார்ந்தது. அவனின் திறன், மொழிவளம் சார்ந்தது. கவிதைப் போக்கின் எண் திசைக் கோணத்தில் எதில் பொருத்திக் கொள்வதென்பது அவனின் உரிமை. கவிதையாக்கத்தின் வாயிலாக சிலர் கொண்டாடக்கூடும். சிலர் நகர்ந்து செல்லக்கூடும். அவரவரின் எதிர்பார்ப்பும் அவாவும் கவிதை பற்றிய முன்முடிவுகளும் […]

சென்னை தினக் கொண்டாட்டம்

This entry is part 7 of 10 in the series 3 செப்டம்பர் 2017

அன்புடையீர், வணக்கம். இத்துடன் ,வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில் நிகழவுள்ள சென்னை தினக் கொண்டாட்டம் அழைப்பினை இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர வேண்டுகிறேன் அன்புடன் தமிழ்மணவாளன்

கவிநுகர் பொழுது-23 (கவிஞர் தேவேந்திர பூபதியின்,’முடிவற்ற நண்பகல்’, நூலினை முன்வைத்து)

This entry is part 5 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

கவிஞர் தேவேந்திர பூபதியின் கவியுலகம் குறித்த கருத்தரங்கம் 29-07-2017 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு அவரின்,’முடிவற்ற நண்பகல்’, கவிதை நூல் குறித்து உரையாற்றினேன். அந்த உரையின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம். சமகாலத்தில், நான் சந்திக்கிற சமூகப் பிரச்சனைகளைத் தானும் சந்திக்கிற, நான் எதிர்கொள்கிற அரசியல் சூழல்களால் ஏற்படும் சிக்கல்களைத் தானும் எதிர்கொள்கிற, பண்பாடு, சாதி, மதம் இன்ன பிற கட்டமைப்புகளால் நிகழும் சம்பவங்களுக்குச் சாட்சியாக நான் புழங்கும் மொழியிலேயே கவிதைகள் எழுதும் சமகாலக் […]

கவிநுகர் பொழுது-22 (கவிஞர் அமிர்தம் சூர்யாவின்,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, நூலினை முன் வைத்து)

This entry is part 10 of 10 in the series 6 ஆகஸ்ட் 2017

அமிர்தம் சூர்யா என் நெடு நாளைய நண்பர். எங்கள் இலக்கிய நட்பிற்கு வயது இருபது ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். அனேகமாக அவரின் தொடக்க கால இலக்கியச் செயல் பாடுகளில் இருந்து தொடர்ந்து பயணித்து வருகிறேன்.  அவரின் அண்மைக்காலக் கவிதைகளில் குறிப்பாக காதல் சார்ந்த கவிதைகளைத் தொகுத்து ,’ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்’, என்னும் நூலினை வெளியிட்டிருக்கிறார். வெற்றியாளர்கள் பெரும்பாலும் வித்தியாசமாக யோசிக்கக் கற்றவர்கள். நூலின் தலைப்புக்குக் கீழே,’காதலியக் கவிதைகள்’, என்று குறிப்பிட்டிக்கிறார். ’காதல் கவிதைகள்’, என்பது அறிந்தது.  அதென்ன […]

கவிநுகர் பொழுது-20 (கவிஞர் இளங்கவி அருள் எழுதிய நான் மூனறாம் கண் நூலினை முன்வைத்து)

This entry is part 4 of 6 in the series 30 ஜூலை 2017

புதுச்சேரியில் நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழா உரையின் கட்டுரை வடிவமாக, இதனைக் கொள்ளலாம். கவிஞர் இளங்கவி அருள் எழுதிய ஆறாவது கவிதைத் தொகுப்பு நான் மூன்றாவது  கண். சென்னை, முரண் களரிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இவரின் முந்தைய தொகுப்புகளையும் நான் வாசித்திருக்கிறேன். ஏற்கனவே இவரின் கவிதைகளோடு பரிச்சயம் உண்டு. இவரின் பேரன்பின் மிச்சம் என்கிற கவிதை நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கிறேன். இப்போது இந்நூல் வெளியீட்டு விழாவில் பங்கு கொண்டு பேசுவதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. இதே அரங்கில் நடந்த […]

கவிநுகர் பொழுது-21 (பா.இரவிக்குமாரின்,’கைரேகைக் கொடியில் கனவுப் பூ’, நூலினை முன் வைத்து)

This entry is part 5 of 6 in the series 30 ஜூலை 2017

ஒரு கவிஞன் தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறதோ, நிகழ்வதில் எது தன்னைப் பாதிக்கிறதோ அதனை எழுதுகிறான். எழுதித் தீர்க்கிறான்; எழுதித் தீர்கிறான்.எழுதிய பிறகு அவனுக்கு அவனளவில் ஆசுவாசம் கொள்கிறான். தீர்வு கிடைப்பதற்காகவே எழுதப்படுபவையல்லவே யாவும். தன்னளவில் சிதைவுறும் கணத்தில் இருந்து மெல்ல சுவாசம் பெற அவன் வார்த்தைகளாகிறான். பா. இரவிக்குமார் மொழியின் மீதும் இனத்தின் மீதும் சமூகத்தின் மீதும் தீராத பற்று மிக்கவர் என்பதை நான் அறிவேன். தொடக்க காலத்தில் அவருக்கு அப்படியானதொரு பயிற்சிப் பட்டறை வாய்த்திருக்கிறது. […]

கவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)

This entry is part 9 of 15 in the series 23 ஜூலை 2017

மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் கட்டுரை வடிவமாக இதைக் கொள்ளலாம். யுகம், புளிப்பு, நா மூன்றின் கூடுகை, யுகங்களின் புளிப்பு நாவுகள். புளிப்பு என்பது ஒரு சுவை. புளித்துப்போதல் என்பது சலித்துபோதலின் குறியீடு எனக் கொள்ளலாமா? புளித்த பதார்த்தங்கள் கெட்டுப் போனதன் விளைவு என்பதாகவும் பொருள் படக்கூடும். அவ்வாறெனில் திரிந்து போன ஒன்றை அடையாளம் கொள்வதற்கான சாத்தியத்தைக் கொண்டது நா. அந்த நாவே புளிப்பாய் மாறினால் என்னவாகும். அதுவும் […]

கவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)

This entry is part 11 of 15 in the series 23 ஜூலை 2017

பால் முரண் என்பது ஆண்பெண் என்னும் இரண்டு பாலினங்களுக்கும் இடையிலான பால் முரணாக மட்டும் இல்லாமல் அது பாழ் முரணாக மாறிப்போனதன் விளைவையும் அதன் சீழ் பிடித்துப்போன கருத்தியல் அல்லது கருத்தியலாய் முன்வைத்து நிகழ்த்தப்படும் கொடுமைகளையும் நிர்வாணப் படுத்துகிற கவிதைகள் நிறைந்த தொகுதி இது. கட்டுரையின் தொடக்கத்திலேயே கடைசி வரிபோல சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வாசித்ததும் வாசித்தபின் இதை எழுதத் தொடங்குவதற்குமான கால இடைவெளியில் என்னுள் எழுந்த உணர்வின் தொகுப்பாய் இவ்வரிகளைச் சொல்லி விட்டு எழுது […]

கவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)

This entry is part 13 of 15 in the series 23 ஜூலை 2017

சமகாலக் கவிதைகளை முன்வைத்து,சமகாலக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளைக் கொண்டு எழுதிவரும்,’கவிநுகர்பொழுது’, தொடரில் இதுவரை பதினேழு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பதினெட்டாவதாக எழுதும் இக்கட்டுரை முற்றிலும் வித்தியாசமானது. ஆமாம். இதுவரை எழுதிய அனைத்து நூல்களுமே பதுக்கவிதை,நவீன கவிதை நூல்கள். இது மரபுக்கவிதை நூல். தமிழின், கடந்த ஐம்பது ஆண்டுக்கால கவிதைப் போக்கில் கவிதையின் வடிவம் மரபுக்கவிதையில் இருந்து மாறிவந்திருப்பதன் போக்கை நாம் அறிவோம். நான் என்னுடைய இளம் வயதில் மரபுக்கவிதைகள் எழுதியவன். எண்சீர் விருத்தங்களையும் அறுசீர் விருத்தங்களையும் எழுதிடும் பயிற்சி […]

”மஞ்சள்” நாடகம்

This entry is part 7 of 16 in the series 9 ஜூலை 2017

கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட  ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். அரங்கில் இருக்கைகள் நிரம்பிப் பார்வையாளர்கள் பலரும் நின்றபடி  பார்த்தார்கள் என்பதே முதல் திருப்திகரமான விஷயம்.”சாதியை ஒழிப்போம் கையால் மலமள்ளும் இழிவுக்கு உடனே முடிவுகட்டுவோம்”, என்னும் […]