கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு, மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும், போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து,உன்னைக் கூவுவான் வந்துநின்றோம்; கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய, தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால், ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். திருப்பாவையின் எட்டாவது பாசுரம் இது. இப்பாசுரத்தில் எல்லாராலும் விரும்பப்பட்ட, எல்லாரும் அவளிடத்தில் நெருங்கி வரக்கூடிய பெருமை உள்ள கிருஷ்ணனாலே விரும்பப் பட்டுக் கிருஷ்ணனைத் தன் வசத்தில் வைத்துள்ள ஒருத்தியை எழுப்புகிறார்கள். அவளை […]
கடல் நாகராசன் எப்பொழுதும் தேனீயைப் போல சுறுசுறுப்பாய் மிகவும் உற்சாகமாய் ஏதேனும் செய்துகொண்டே இருப்பவர். பல தலைவர்களின் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் பிறந்த நாள்களைத் தவறாமல் கொண்டாடி வருபவர். அந்த விழாக்களில் மாணவர்களுக்குப் போட்டி வைத்து பரிசுகள் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி வருபவர். அவர் தேனீ எப்படி ஒவ்வொரு மலராகச் சென்று சென்று தேனை எடுத்து வருமோ அதேபோல பல புத்தகங்களைப் படித்து அப்புத்தகங்களில் மலர்களைப் பற்றி உள்ள தகவல்களை எல்லாம் தொகுத்து இந்நூலாக ஆக்கித் […]
’செங்கிஸ்கான்’ என்பதே தவறான உச்சரிப்பு. சிங்கிஸ்கான் [chinkhis khan] என்பதே சரி. மங்கோலியர்க்கு மிகவும் விருப்பமான விலங்கு ஓநாய். Chin என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. வலிமையான, உறுதியான, அசைக்கமுடியாத, பயமற்ற, ஓநாய் எனும் பொருளில் ‘டெமுஜின்’ என்பவனுக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து கிடந்து எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை எல்லாம் மங்கோலியர் எனும் ஒரே பெயரில் கொண்டு வந்து அவர்களின் வீரத்தால் ஒரு பேரரசை அமைக்க வேண்டும் என்ற டெமுஜினின் கனவு […]
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத்தன், கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே, காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து, வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ, நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி, கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ, தேச முடையாய்! திறவேலோ ரெம்பாவாய் திருப்பாவையின் ஏழாவது பாசுரமான இதில் பகவானின் பெருமையை அறிந்திருந்தும் மறந்து கிடப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள். கதவைத் தட்டுகிறார்கள். அவளோ ”உள்ளிருந்தே பொழுது விடிந்துவிட்டதா?” என்று கேட்கிறாள். “ […]
“புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில், வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ, பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும், மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம், உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையில் ஆறாம் பாசுரம் இது. மார்கழி நோன்பு நோற்பதற்காக விடியற்காலையில் எழுந்து புறப்படும் ஆயர் சிறுமிகள் ஒவ்வொரு வீட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புகிறார்கள். […]
தயரதன் மதலையாய்த் தாரணிவருவேன் என்று தந்த வரத்தின்படி எம்பெருமான் இராமபிரானாக அவதரித்தார். அவர் ”மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ?” என்று சிற்றன்னையிடம் உரைத்து தம்பியுடனும் சீதையுடனும் வனம் புகுந்தார். அங்கு வந்த சூர்ப்பனகை தகாத சொற்கள் பேச அவள் இளைய பெருமாளால் தண்டிக்கப்பட்டாள். அவள் சென்று இலங்கை வேந்தனிடம் முறையிட அவன் சீதா பிராட்டி மீது ஆசை கொண்டான். இதைத் “தையலாள் மேல் காதல் செய்த தானவன் வாளரக்கன்” என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிடுவார். மேலும் அவ்வாறு […]
தொன்மங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துதல் என்பது நவீன இலக்கியத்தின் ஒரு கூறாகவே தற்போது இருந்து வருகிறது. அவற்றைக் கட்டுடைத்துப் பார்த்து அப்படி உள்ளே புகுந்து பார்ப்பதன் வழியாய் இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் நல்ல கருத்துகள் கிடைக்குமா என்பதே ஒரு தேடல் முயற்சியாகும். புதுமைப் பித்தனின் ’ சாப விமோசனம் ‘ தொடங்கி இம்முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. ஆனால் இது நவீன இலக்கியப் படைப்பாளிக்கு பெரும் சவால்தான் என்பதில் ஐயமில்லை. அந்தச் சவாலில் ஜீவகாருண்யன் வெற்றி பெற்றுள்ளார் […]
வளவ. துரையன் ”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் உதவியின்றி எந்தத் தடங்கலும் வராமல் செய்ய முடியாத செயல்கள்தாம். அப்பப்பா, இந்த வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் எத்தனை சோதனைகள், எவ்வளவு சிரமங்கள் எல்ல்லாவற்றையும் சமாளித்து ஒரு வழியாய் முடித்தாகி விட்டது” என்று நினைத்துக் கொண்டான் பரமு. ’பரமேஸ்வரன்’ என்ற பெயரே ’பரமேஸ்’ என்றாகி இப்போது நண்பர் வட்டாரத்துக்குள் ‘பரமு’ என்றாகி விட்டது. எப்படிப்பட்ட பெயர் […]
’தில்லையாடி ராஜா’ எனும் புனைபெயரில் எழுதும் இரா. இராஜேந்திரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் எழுதி உள்ள இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’என் வாழ்க்கை விற்பனைக்கல்ல’ எனும் பெயரில் வெளியாகி உள்ளது. இத்தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் படிக்கும்போது இவை ஏதோ ஒரு வகையில் நம்மோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றனவே என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு கதைகளின் பாத்திரங்கள் நாம் நாள்தோறும் பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். கதைகளில் வரும் உரையாடல்கள் மிகவும் இயல்பாய் இருக்கின்றன. கதைகளின் தள […]
நவீன இலக்கிய உலகில் கடந்த ஆண்டு சில அதிர்வுகளை ஏற்படுத்திய “அறம்” சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு 2013–ஆம்-ஆண்டுவெளிவந்துள்ளது ஜெயமோகனின் “வெண்கடல்” சிறுகதைத் தொகுப்பு. முன்னுரையில் ஜெயமோகனே குறிப்பிட்டிருப்பது போல இதில் உள்ள 11 சிறுகதைகளும் வெவ்வேறு தளத்திலியங்கும் பல்சுவைத் தன்மை கொண்டவை. . பொதுவாகவே ஜெயமோகனின் கதைகளில் உரையாடல்கள் நேர்த்தியாக இருக்கும். கதைகளுக்கேற்ப அவை ஆழமாகவும் இருக்கக் கூடும். “குருதி” சிறுகதையின் இறுதியில் சேத்துக்காட்டார் கூறும் ”மனுசனா வாழணும்ல—-நாயா, பன்னியா வாழாதே; மனுஷனா […]