Dear All Kalachuvadu is delighted to publish a collection ancient Chinese poems in Tamil, the first ever direct translation from Chinese to Tamil. We are releasing the book on Feb 25th evening in Delhi Tamil Sangam . The proceedings of the meeting will be in English. Find the invite attached. Please come to the event. […]
தமிழவனை ஆசிரியர் குழுவில் கொண்டு வெளிவரும் சிற்றேடு இதழ் பல முக்கியமான அறிமுகக் கட்டுரைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. கடந்த இதழ்களில் கேரலத்தின் புதிய அறிவுஜீவி எம் கே ஹரிகுமார் பற்றிய அறிமுகக் கட்டுரை வெளியாகியுள்ளது. க முத்துகிருஷ்ணனின் “யாதுமற்றவர்” நாவல் பற்றிய விமர்சனமும் அறிமுகமும் வெளியாகியுள்ளது. தமிழவனின் நாவலான “வார்ஸாவில் ஒரு கடவுள்” பற்றிய பல பார்வைகள் வெளியாகியுள்ளன. இன்னொரு முக்கியமான கட்டுரை “எந்திரன் திரைப்படமும் எடிபஸ் சிக்கலும்” ஆகும். எந்திரன் படத்தில் எப்படி […]
வணக்கம் பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் வெளியீடு காண்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழுக்கு அவர்கள் செய்த தொண்டினை நாம் அனைவரும் மதிக்கும் வகையில் ஒன்று கூடுவோம். இணைப்பில் அழைப்பிதழ் இணைக்கப் பட்டிருக்கிறது. உங்களை வரவேற்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம் அன்புடன் தமிழ்ப் பட்டிம்ன்றக் கலைக் கழகம் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழு மேல் விபரங்களுக்கு ரஜித் 90016400
அன்புள்ள ஆசிரியருக்குக் கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். இதோ எங்கள் கம்பன் கழகத்தின் பொங்கல் விழா அழைப்பிதழ். என் பேராசிரியர் முனைவர் மு;வ அவர்களின் நூற்றாண்டு விழ்வையும் சேர்த்துக் கொண்டாடுகிறோம். வழக்கம் போல் நம் பத்திரிகையில் வெளியிட வேண்டுகிறேன். அன்புடன் நனி நன்றியன் பெஞ்சமின் லெபோ செயலர் பிரான்சு கம்பன் கழகம் .
அறிவிப்பு மும்பை தமிழ் அமைப்புகள் பம்பாய் தமிழ் சங்கத்துடன் இணைந்து சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா . அனைவரும் வருக. மும்பை தமிழ் அமைப்புகள் சார்பாக புதியமாதவி
திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் -ஹெச்.ஜி.ரசூல் கன்னியாகுமரிமாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் 2012 பிப்ரவரி 10,11 வெள்ளி , சனி நாட்களில் முஸ்லிம் கலைக்கலூரியில் நடைபெறுகிறது. முதல்நாள் துவக்க விழாவிற்கு முதல்வர் முனைவர் எ.அப்துல் ரஹீம் தலைமையேற்க தமிழ்த்துறைத்தலைவர் பேரா. என் ஹைருன்னிஸா வரவேற்புரை நல்குகிறார்.ஹாஜி எஸ் செய்யது முகமது முன்னிலை வகிக்க ஆங்கிலத்துறை முனைவர் […]
2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த […]
தயாராகிறது!! “எழுத்தாளர் விபரத் திரட்டு” (ஈழத்து படைப்பாளர்களின் விபரங்கள் அடங்கிய தொகுதி) இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பட்டியல் நூலாக அச்சில் வெளி வருகிறது. எழுத்தாளர்கள் தங்கள் பெயர்,புனை பெயர்,பிறந்த இடம்,பிறந்த திகதி,கல்வித் தகைமை,கல்வி கற்ற கல்வி நிறுவனங்கள்,விருத்துகள்/பரிசுகள்,படைப்புகள் வெளி வந்த ஊடகங்கள், நூல்கள்,முகவரி,முகவரி,மின்னஞ்சல் எனும் விபரங்களை அனுப்பி நூலை சிறப்பியுங்கள். தொடர்பிற்கு: R.MAHENDRAN. 34,RED RIFFE ROAD, PLAISTOW, LONDON E13 0JX mullaiamuthan@gmail.com mullaiamuthan_03@hotmail.co.uk
திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திநகரம் ” செவ்வாயன்று திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முத்தமிழ்ச்சங்கத்தலைவர் கேபிகே செல்வராஜ் தலைமை வகித்தார். . திருப்பூர் மாநகர துணை மேயர் குணசேகரன் “பருத்திநகரம் ” நூலை வெளியிட, சென்னை பத்திரிக்கையாளர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஸ்ணன்., சந்திரகாந்த் தேசய், எக்ஸ்லான் ராமசாமி, திருமகள் குமரேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்.. முன்னதாக திருப்பூரிலிருந்து வெளிவரும் “ கனவு” இலக்கிய இதழுக்கு […]
அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’ http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh.htm என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மாதம் இருமுறை (11 மற்றும் 26 ஆகிய தேதிகளில்) தங்களுக்கு தகவல் வந்து சேரும். படித்துப் பயன் பெற வேண்டுகிறோம். வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை தெரிவிக்கவும். நன்றி. குறிப்பு: பாரதியாரின் பாடல்கள் மற்றும் புகைப்படங்கள் முழுமையாக தொகுத்து நமது இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தலைவர், பாரதி சங்கம், தஞ்சாவூர்