புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சார்பில் 33 அறிஞர்களுக்கு விருதளித்து பாராட்டிச் சிறப்பிக்கும் ஐம்பெரும் விழா வரும் 18 ஆம்தேதி புதுக்கோட்டை சில்வர் அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருகை தந்துச் சிறப்பிக்க வேண்டுகிறோம்
காலச்சுவடு வணக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை (11.11.2011) அன்று மாலை 5:45 மணிக்குச் சென்னை புக் பாயிண்ட் அரங்கில் வைத்து கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தங்கள் வருகையை எதிர்பாக்கிறோம். தங்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ள வரும்படி அன்புடன் அழைக்கிறோம். பொறுப்பாசிரியர் காலச்சுவடு
அன்பின் ஆசிரியருக்கு, இத்துடன் மலேசிய இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக நிகழவுள்ள பெண் இலக்கியவாதிகளின் ஆய்வரங்கம் குறித்த நிகழ்வின் அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். அன்பு கூர்ந்து திண்ணை இணைய தளத்தில் இச்செய்தியை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் கமலாதேவி அரவிந்தன். ஆய்வரங்கம்
அன்புடையீர் செம்மொழித் தமிழாய்வுநிறுவனமும் திருச்சிராப்பள்ளி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து பத்துநாள் -மணிமேகலை குறித்தான பயிலரங்கை14-12-2011 முதல் 23.12.2011 வரை நடத்த உள்ளன. ஆய்வறிஞர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் அனைவரும் பங்கு கொள்ள வரவேற்கிறோம்
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல் “பூக்கும் கருவேலம் நூல்” வெளியீடு டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை கலந்துகொள்ளும் ஆளுமைகள் எழுத்தாளார் ஜெயமோகன், வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம் எழுத்தாளார் யுவன் சந்திரசேகர், எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளார் நாஞ்சில்நாடன் கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார், இயக்குனர் பாரதிராஜா எழுத்தாளர் பூமணி உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு […]
பெயரிடாத நட்சத்திரங்கள்”, “Mit dem Wind fliehen” ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது.
ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 – ம் திகதி (11 – 12 – 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் (50இ Pடயஉந னந வுழசஉலஇ 75018 Pயசளை – ஆéவசழ: ஆயசஒ னுழசஅழல) நடைபெறவுள்ளது. அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் […]
வருகிற டிசம்பர் மாதம் 24ம் தேதி மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து நிகழ்த்துகலைஞர்களை கௌரவிக்கும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது.அமரர் சடையன் வாத்தியார் நினைவு விருது அறுவர்க்கும், அமரர் துரைசாமி வாத்தியார் நினைவு விருது ஒருவர்க்குமாக ஏழு மூத்த கலைஞர் பெருமக்களுக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கப்படவிருக்கிறது. அவ்வமயம் கவிஞர் கறுத்தடையான் அவர்களின் ஊட்டு கவிதைப்பிரதி வெளியீடும், தோற்பாவை, கட்டபொம்மலாட்ட, கூத்துக்கலைஞர் அம்மாபேட்டை கணேசன் அவர்களை குறித்த விதைத்தவசம் என்றவோர் ஆவணப்பட திரையிடலும், […]
காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் வரும் 3.12.2011 (சனிக்கிழமை ) அன்று கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கம்பன் காட்டும் ஆசிரியப் பெருமக்கள் என்ற தலைப்பில் ஒக்கூர் சோம சுந்தரம் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் நாச்சம்மை கண்ணன் அவர்களும், கம்பன் கூறும் இசை நுட்பங்கள் என்ற தலைப்பில் தமிழ்ப்பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் முனைவர் செ. கற்பகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். நிகழ்வு மிகச் சரியாக மாலை ஆறுமணிக்குத் தொடங்கும். நிகழ்ச்சி ஏற்பாடு எம்.கே சுந்தரம் […]